பெர்கமு சபை சாத்தானுடைய சிங்காசனம் இருந்த இடத்திலே இருந்த சபை

பெர்கமு சபை: சாத்தானுடைய சிங்காசனம் இருந்த இடத்திலே இருந்த சபை

பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ள ஏழு சபைகளில் சொல்லப்பட்ட சத்தியத்தை நாம் கற்றுக் கொண்டு வருகிறோம்.

எபேசு சபையைக் குறித்தும் சிமிர்னா சபையைக்குறித்தும் நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது பெர்கமு சபையைக் குறித்தும் அதினுடைய சத்தியங்களைக் குறித்தும் கற்றுக் கொள்ளுவோம்.

கிறிஸ்து இந்த சபையிலே தன்னை அறிமுகப்படுத்தும் போது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைஉடையவர் என்று சொல்லுகிறார்.

வெளி 2:12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்பது ஒருவேளை தேவனுடைய வார்த்தையாக இருக்கலாம்.

Heb 4:12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், …..

Eph 6:17 …..தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பெர்கமு சபையார் கிறிஸ்துவின் நாமத்தில் வரும் பாடுகளை சகித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.

வெளி 2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

இந்த சபையின் ஒவ்வொரு அசைவையும் கிறிஸ்து கவனித்து வைத்து இருந்தார்.

  • அவர்களுக்கு கிரியை இருந்தது.
  • சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருந்தார்கள்.
  • அவர்கள் கிறிஸ்துவின்  நாமத்தைப் பற்றிக்கொண்டிருந்தார்கள்.
  • சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே அவர்களுக்குள்ளே கிறிஸ்துவின் உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தை அவர்கள் மறுதலியாமல் இருந்தார்கள்.
  • தங்கள் ஜீவனை விடும் அளவுக்கு அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தை அவர்கள் பற்றி பிடித்து இருந்தார்கள்.

ஆனாலும் அவர்களிடத்தில் குறை இருந்தது என்று கிறிஸ்துவெளிப்படுத்தினார்.

வெளி 2:14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

வெளி 2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

பெர்கமு சபையிலே இருந்த குறை இதுதான்

1) விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்தார்கள்.

2) வேசித்தனம்

3) நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொண்டார்கள்.

இந்தகுறையின் நிமித்தம் இயேசு கிறிஸ்து அவர்களை எச்சரித்தார்.

வெளி 2:16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

  • பாவத்திலிருந்து நாம் வெளியே வராதபட்சத்தில் நமக்கு இது தான் சம்பவிக்கும்.
  • மனந்திரும்பாத பட்சத்தில் நாம் கிறிஸ்துவோடு யுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்.

கிறிஸ்துவோடு யுத்தம் பண்ணி யார் ஜெயிக்க முடியும்?

பெர்கமுசபையின் விசுவாசிகள் தங்கள் குறைகளை நிவிர்த்தி செய்து ஜெயங் கொள்ளும் போது அவர்களுக்கு என்ன கிடைக்கும்?

வெளி 2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

ஜெயங்கொள்ளும் போது இதை தருவேன் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார்.

1) மறைவான மன்னா

2) வெண்மையான குறிக்கல்

3) புதிய நாமம்

பாடம்:  பாவங்களிலிருந்து வெளியே வராதபட்சத்தில் நாம் அதற்கான தண்டனையை பெறுவோம். மனந்திரும்பி ஜெயங் கொள்ளும் போது தான் நாம்கிறிஸ்துவினால் பலனை பெறுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME