பாடல் மூலமாக நாம் எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்

பாடல் மூலமாக நாம் எப்படி தேவனை தொழுது கொள்ள வேண்டும்?

ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ளவேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.

ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்பது நம்முடைய உள்ளான மனுஷனுடைய பாகமாகிய இருதயத்தோடு தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து ஏற்கனவே கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டில் முற்பிதாக்களும் இஸ்ரவேல் ஜனங்களும் பூமிக்குரிய பொருள்களோடும் (பலிகள், காணிக்கைகள் போன்ற) தங்கள் விசுவாசமுள்ள இருதயத்தோடும் தேவனை அவருடைய கட்டளையிட்ட பிரகாரம் ஆராதனை செய்யும்போது தான் தேவனை அதை ஏற்றுக் கொண்டார் என்று கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது புதிய ஏற்பாட்டில் ஆராதனையில் ஒரு பங்காக இருக்கிற பாடலைக் குறித்து தேவன் என்ன கட்டளையிட்டு இருக்கிறார் என்று கற்றுக்கொள்ளுவோம்.

புதிய ஏற்பாட்டில் ஆராதனையில் இசையோடு பாட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறாரா?

பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் மோசேயின் சகோதரி மிரியாம் முதன் முதலாக தம்புரு வைத்து பாடி ஆடினாள்.

Exo 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

அதற்கு பின்பு நியாயதியாகிய யெப்தாவின் மகள் யெப்தாபோரில் ஜெயித்து விட்டு வரும் போது அவனுக்கு தம்புரு வாசித்து நடனம் பண்ணி அவனுக்கு எதிர் கொண்டு போனாள்.

Jdg 11:34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.

  • ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இசையோடு பாடுங்கள் என்று தேவன் எந்தவொரு கட்டளையும் கொடுக்கவில்லை ஆனால் இதை குறித்து எதுவும் அவர் சொல்லவில்லை.

ஆனால் தாவீது உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்கு கொண்டுவரும் போது இஸ்ரவேலை ஜனங்கள் சகலவீத கீதவாக்கியங்களோடு கூட பெட்டிக்கு முன்பாக ஆடிபாடிக் கொண்டு வந்தார்கள்.

2Sa 6:5 தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.

ஆனால் பிற்பாடு தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு கைத்தாளங்கள், தம்புருகள்,சுரமண்டலங்கள் ஆகிய இவைகளைக்கொண்டு தான் தன்னை மகிமைப்படுத்த வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்.

2Ch 29:25 அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.

  • தாவீதின் காலத்தில் தேவன் இசைக்கருவிகளோடு பாட வேண்டும் என்கிற கற்பனையை தாவீதிடம் கொடுத்து இருந்தார்.
  • தேவனுடைய ஆலயத்தில் ஆராதனை செய்வதற்கு இசையோடு பாட வேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளை கொண்டு கொடுக்கப்பட்டது.

தாவீது அநேக கீதவாக்கியங்களை உண்டு பண்ணின போதும் தேவன் இந்த இசைக்கருவிகளை வைத்து தான்  தேவனுடைய ஆலயத்தில்தான் தன்னை மகிப்படுத்தவேண்டும் என்று சொன்ன போது அதை அவர் தாழ்மையாக ஏற்றுக் கொண்டு அதற்கு கீழ்ப்படிந்தார்.

1Ch 15:16 தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாள முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

  • தாவீது இந்த வாத்தியங்கள் தவிர வேறு எந்தவொரு கீதவாக்கியத்தை அவர் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அது தேவனுடைய கட்டளை.

தேவன் தாவீதின் காலத்தில் எப்படிப்பட்ட கீத வாக்கியங்களை கொண்டு பாட வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தாரோ அதே மாதிரியைத் தான் அடிமைத்தனத்திலிருந்து வந்த நெகேமியாவின் நாட்களில் இருந்த இஸ்ரவேலர்களும் அப்படியே செய்தார்கள்.

Neh 12:27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

  • தேவனுடைய கட்டளைகளோடு கூட்டுவதற்கோ குறைப்பதற்கே தேவன் நமக்கு ஒருபோதும் அனுமதி கொடுப்பதில்லை.
  • தேவனுடைய வார்த்தைகளோடு நாம் ஒரு வார்த்தையை கூட்டும் போதோ குறைக்கும் போதோ அது தேவனுடைய வார்த்தைகள் இல்லை அப்படி செய்யும் போது அந்த வார்த்தைகள் ஜீவனாய் இருப்பதும் இல்லை.

தாவீதின் காலத்தில் கீதவாத்தியங்களோடு பாடுங்கள் என்ற கற்பனையை தேவன் இஸ்ரவேலர்களுக்கு கொடுத்தபடியால் அவர்கள் அதை கொண்டு தேவனை துதித்து பாடினார்கள்.

புதிய ஏற்பாட்டில் தேவன் தன்னை கீதவாக்கியங்களோடு துதித்து பாடுங்கள் என்று கட்டளையிட்டு இருக்கிறாரா என்பதை நாம் கண்டுபிடித்து சத்தியங்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பழைய உடன்படிக்கையில் தேவனை துதிப்பதற்கு லேவியர்கள் கீத வாக்கியங்களை இசைத்து பாடல்  பாடி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

1Ch 15:16 தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாள முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

Neh 12:27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.

புதிய உடன்படிக்கையில் ஆசாரியத்துவம் மாற்றப்பட்டு இருக்கிறது.

Heb 7:12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.

இன்றைக்கு நம்முடைய பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருக்கிறார்.

Heb 6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து மாம்ச சம்பந்தமான கட்டளைகளுக்கு அவர் இப்போது ஆசாரியராய் இருப்பது இல்லை.

Heb 7:16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,

Heb 7:17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

  • இன்றைக்கு இயேசு கிறிஸ்து என்னும் மகா பிரதான ஆசாரியர் மூலமாய் தேவனை நாம் தொழுது கொண்டு வருகிறோம்.

அப்படியென்றால் நாம் தேவனை எப்படி மகிமைப்படுத்தி பாட வேண்டும்?

புதிய ஏற்பாட்டில் எப்படி பாட வேண்டும் என்று தேவன் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார்?

புதிய ஏற்பாட்டில்  நாம் எப்படி பாட வேண்டும் என்று கீழே உள்ள வசனங்கள்  தான்  நமக்கு போதிக்கிறது.

  • Act16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
  • 1Co14:15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.
  • Eph5:19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
  • Col3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
  • Heb 2:12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்;
  • Jam 5:13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இந்த வேத வாக்கியங்களில் எந்த வசனத்திலாவது இசையோடு(கீத வாத்தியங்கள்) பாடுங்கள் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறாரா?

நாம் சபை கூடும் போது பாடல் பாடுவதின் நோக்கம் என்ன?

நோக்கம் என்னவென்று எபே 5:19  கொலோ 3:16ல் தேவன் நமக்கு தெளிவாக சொல்லுகிறார்.

  1. பாடலின் மூலம் ஒருவருக்கொருவர் போதிக்கிறோம்.
  2. பாடலின் மூலம் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொள்ளுகிறோம்.

எப்படி நாம் பாட வேண்டும்?

இருதயத்தில் கர்த்தரை பக்தியோடு பாட வேண்டும், இது தான் புதிய ஏற்பாட்டு தொழுது கொள்ளுதல்.

Col 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

  • புதிய ஏற்பாட்டில் தேவன் நமக்கு இசைக்கருவிகளோடு பாடுங்கள் என்று தேவன் கட்டளை கொடுக்கவில்லை.
  • தேவன் நம்மை இருதயத்திலிருந்து பக்தியோடு பாடுங்கள் என்று தான் கட்டளையிட்டு இருக்கிறார்.
  • பாடல் மூலமாக போதிக்கவும் புத்தி சொல்லவும் தான் தேவன் நமக்கு கட்டளை கொடுத்து இருக்கிறார்.
  • தேவன் கொடுத்த பாடுங்கள் என்ற கட்டளையோடு இசையை நாம் கூட்டுகிறபோது நாம் பொய்யராய் இருப்போம்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் எப்படி பாடுகிறார்கள்?

  • ஒருவர் இசையோடு பாடுகிறார். அதற்கு இன்னொருவர் வாயசைக்கிறார்.
  • திரைப்படங்களை மிஞ்சும்பாடல்களும், நடனங்களும் அருவருப்பான நடன அசைவுகளும் மிகவும் அபத்தம்.
  • மிரியாம் மற்றும் தாவீது நடனமாடி தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்கிறார்கள் அங்கே அதை தேவன் அனுமதித்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில் இருதயத்தில் பக்தியோடு பாடு என்று தான் கட்டளையிட்டு இருக்கிறார். நாம் தேவனுடைய கட்டளையை மீறலாமா?
  • இசையில்லாமல் பாடினால் ஜீவனில்லை என்கிறார்கள் ஆனால் அப்போஸ்தலனாகிய பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் கைகளும் கால்களும் தொழுமரத்தில் மாட்டபட்ட நிலையில் தேவனை நோக்கி இருதயத்தில் பக்தியோடு பாடினார்கள். அந்த சிறைசாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தது. பின்பு அந்தசிறைசாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தினார்களும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டுஇரட்சிக்கப்பட்டார்கள் (அப் 16:24-34)

புதிய ஏற்பாட்டில் கீதவாக்கியத்தோடு பாடுங்கள் என்று தேவன் கட்டளையிடாத போது இப்படி இசையோடு பாடினால் தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக்கொள்ளுவாரா?

தேவன் கட்டளையிடாத எதுவொன்றை நாம் செய்து ஆராதனை செய்தாலும் தேவன் நம்மை ஒருகாலும் கவனிக்க மாட்டார்.

புதிய ஏற்பாட்டில் எங்கேயாவது ஆடிபாடி குதித்து இசையோடு பாடி இருக்கிறார்களா என்று தேடிப்பாருங்கள். உங்களால் அப்படி கண்டுபிடிக்க முடியாது.

1Co 14:33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

1Co 14:40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.

நீங்கள் மனுஷருடைய கற்பனைகளின்படி ஆராதனை செய்வீர்கள் என்றால் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும். அதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

கர்த்தருக்கு சித்தமானல் தொடர்ந்து தொழுதுகொள்ளுதலை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME