கொரிந்துபட்டணத்திலும் மற்ற பட்டணங்களிலும் பவுல் என்ன பிரசங்கித்தார்?
அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் சபையின் விசுவாசிகளும் எங்கும் திரிந்து சுவிசேஷத்தை தான் பிரசங்கித்தார்கள்.
அதற்கு காரணம் அந்த சுவிசேஷத்தில் தான் மனந்திரும்புதலும் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானமும் தான் உள்ளடக்கமாக இருந்தது.
கொரிந்தியர்கள் அநேகர் சுவிசேஷத்தை கேட்டு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Act 18:8 ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.
- ஒருவன் சுவிசேஷத்தை கேட்பதினால் விசுவாசியாக முடியாது. அவன் அந்த சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியும் போது தான் விசுவாசியாக முடியும்.
- ஒருவன் எப்படி சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிய முடியும் என்றால் கிறிஸ்துவின் பிரதான கட்டளை ஒன்றாகிய பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் போதுதான் அவன் அந்த சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்தான் என்பது அங்கே சத்தியமாய் இருக்கிறது.
பவுல் சுவிசேஷத்தை அறிவித்த போது அவருக்கு கிடைத்த உபத்திரவத்தினிமித்தம்(அடிகள்) சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பயந்து சுவிசேஷத்தை பேசாமல் இருந்தார்.
Act 18:9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;
அதனால் தான் கர்த்தர் அவரை பெலப்படுத்தினார்.
Act 18:10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
பவுல் திடங்கொண்டு ஒருவருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி இருந்து தேவ வசனத்தை அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்.
Act 18:11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
சுவிசேஷத்தின் நோக்கம் இது தான்
- சகலஜாதிகளையும் சீஷராக்க வேண்டும்.
- சீஷரானபின்பு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின். நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்.
- கிறிஸ்துகட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும்.
இன்றைக்கு எத்தனை சுவிசேஷ கூட்டங்களில் இந்த சத்தியத்தை பின்பற்றுகிறார்கள்?
எபேசுவிலே இருந்தவர்கள்அப்போஸ்தலனாகிய பவுலால் சுவிசேஷம் போதிக்கப்பட்டு எப்படி கிறிஸ்துவின் சபையிலே சேர்க்கப்பட்டார்கள் என்பதை கவனியுங்கள்.
Act 19:1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
- இங்கே சீஷர்கள் என்று வேதவாக்கியம் சொல்லும் போது அவர்கள் யோவான் ஸ்நானகனுடைய சீஷர்களாக இருந்தார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
- அவர்கள் யோவான் ஸ்நானகன் கிறிஸ்துவில் விசுவாசிகளாய் இருக்க வேண்டும் என்பதற்காக கொடுத்த மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தை பெற்று இருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தில் மாத்திரம் பரிசுத்த ஆவியின் வரம் வாக்குத்தத்தம் செய்யப்பட்டு இருந்ததால் தான் பவுல் இந்த கேள்வியை கேட்டார்.
Act 19:2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
அவர்கள் யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்து இருந்தார்கள்.
Act 19:3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.
யோவான் கொடுத்த ஞானஸ்நானம் மனந்திரும்புதலுக்கு ஏற்றது என்றும் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாய் இருப்பதற்கு கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் மறுபடியும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றும் போதித்தார்.
Act 19:4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்
Act 19:5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
நாம் மனந்திரும்பி பாவமன்னிப்புகென்று கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெறும் போது தான் அது தேவனை பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருக்கிறது.
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
எபேசுவில் இருந்த யோவான் ஸ்நானகனுடைய சீஷர்கள் ஏன் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியம் இருந்தது?
அது இயேசு கிறிஸ்துவின் கட்டளையாக இருந்தது.
Mat 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Mat 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Mat 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
Act 2:39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது ,,
- எபேசுவின் விசுவாசிகள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று கொண்ட போது கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் வரத்தை பவுல் அவர்கள் மேல் கைகளை வைத்த போது பெற்றுக்கொண்டார்கள்.
எபேசுவின் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய இரண்டு வரங்கள் கிடைத்தது.
Act 19:6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
Act 19:7 அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
- மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்ற எபேசுவின் விசுவாசிகள் ஒன்றான மெய் சபையிலே சேர்க்கப்பட்டார்கள்.
கொரிந்துபட்டணத்திலும் எபேசு பட்டணத்திலும் மற்ற பட்டணத்திலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு அவர்கள் அந்த சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்து பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்ற போது அவர்கள் எல்லாரும் ஒன்றான மெய்சபையிலே சேர்க்கப்பட்டார்கள்.
ஆசியா முழுவதும் பவுல் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.
Act 19:10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்.
Act 19:17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
சுவிசேஷத்தில் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Act 8:36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானடிணுபமளைம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
1Co 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
- நீங்கள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்று ஒன்றான மெய்சபையிலே கர்த்தரால் சேர்க்கப்பட்டு இருக்கிறீர்களா?
- அப்படியில்லையென்றால் இன்றே உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.