பரலோக ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று அப்போஸ்தலர்கள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பிரசங்கித்தார்களா

பரலோக ராஜ்யம் அல்லது தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று அப்போஸ்தலர்கள் சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்பு பிரசங்கித்தார்களா?

அநேகர் இன்றைக்கு இனிமேல் தேவனுடைய ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் என்று விசுவாசிக்கிறார்கள்.

ஆனால் இயேசு கிறிஸ்துவின்  ராஜ்யம் இந்த  பூமிக்குரியது அல்ல (மாம்சத்திற்குரியதல்ல) என்பதை இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார்.

Joh 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

  • மத்தேயு மாற்கு லூக்கா யோவான் போன்ற சுவிசேஷ புஸ்தகங்ளில் யோவான் ஸ்நானகனும் இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது அல்லது பரலோக சமீபமாய் இருக்கிறது என்றும் போதித்து இருக்கிறார்கள்.
  • ஆனால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஒன்றான மெய் சபையானது ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது பரலோக சமீபமாய் இருக்கிறது என்கிற ஒரு வார்த்தையை கூட நீங்கள் கண்டு பிடிக்க முடியாது.
  • ஏனென்றால் தேவனுடைய ராஜ்யம் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டு விட்டது.

அதைக் குறித்து தான் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் போதித்தார்கள்.

சுவிசேஷகனாகிய பிலிப்பு என்ன போதித்தார் என்று பாருங்கள்.

Act 8:12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

  • அவர் தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்று போதிக்கவில்லை அந்த ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பதைக் குறித்து அவர் பிரசங்கித்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய ராஜ்யத்தில்(இது நித்திய ராஜ்யமாகிய பரலோகம்) எப்படி பிரவேசிக்கிறோம் என்பதை போதித்தார்?

Act14:22  நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

கொரிந்து பட்டணத்திலே பவுல் தேவனுடைய ராஜ்யத்திற்குரியவை குறித்து போதித்தார்.

Act 19:8 மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்  குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.

எபேசு பட்டணத்திலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்து இருந்தார்?

Act20:25 இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும்.

சபையார் யாவரும் அந்த ராஜ்யத்தில் இருந்தார்கள்.

தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டவில்லையென்றால் பவுல் ஏன் சாட்சி கொடுத்து விஸ்தரித்து பேச வேண்டும்?

Act28:23  தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.

Act 28:31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

நாம் ஞானஸ்நானம் பெறும் போது எதிலே சேர்க்கப்படுகிறோம்?

Col 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

  • நாம் ஞானஸ்நானம் பெறுகின்ற போது கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பிதாவினால் உட்படுத்தப்படுகிறோம்.

அந்த ராஜ்யமும் எப்படிப்பட்டதாய் இருக்கிறது?

Rom 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

தேவனுடைய ராஜ்யம் எதிலே இருக்கிறது?

1Co 4:20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

யார் தேவனுடைய ராஜ்யத்தில் சுதந்திரமாக இருப்பதில்லை?

Eph 5:5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.

அந்த தேவனுடைய ராஜ்யத்திற்காக அநேகர் வேலை செய்தார்கள்.

Col 4:11 இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள்.

இயேசு கிறிஸ்து வரும் போது இந்த ராஜ்யமாகிய சபையைத் தான் தேவனுக்கு ஒப்புக் கொடுப்பார்.

1Co 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

நாம் தேவனுடைய ராஜ்யத்திலே நிலைத்து இருந்தால் தான் பரம ராஜ்யத்தை (பரலோகம்) தேவன் நமக்கு தருவார்.

2Ti 4:18 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Heb 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

2Pe 1:11 இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

  • தேவனுடைய ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது என்கிற வேத வாக்கியத்தை அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு  வேறு எந்த நிருபங்களிலும் நாம் பார்க்க முடியாது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME