விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை அடைவான்.
whoever believes in Him have eternal life. (John 3:15)
Mt19:29; Mk10:17; Jn3:16,36; Jn4:36; Jn5:24,39; Jn6:27,68; Jn10:28; Jn17:2,3; Jn20:31; Ro2:7; Ro5:21; Ro6:22,23; Ga6:8; 1Tim1:16; 1Tim6:12,19; Ti1:3; Ti3:6; 1Pet3:7; 1Jn2:25; 1Jn5:11,13,20.
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.
(யோவான் 3:15)
மத்தேயு 19:29; மாற்கு 10:17; யோவான் 3:16,36; யோவான் 4:36; யோவான் 5:24,39; யோவான் 6:27,68; யோவான் 10:28; யோவான் 17:2,3; யோவான் 20:31; ரோமர் 2:7; ரோமர் 5:21; ரோமர் 6:22,23; கலாத்தியர் 6:8; 1தீமோத்தேயு 1:16; 1 தீமோத்தேயு 6:12,19; தீத்து 1:3; தீத்து 3:6; 1 பேதுரு 3:7; 1 யோவான் 2:25; 1 யோவான் 5:11,13,20.
நித்திய ஜீவன்:
தேவனுடைய ஜீவனாக வெளிப்பட்ட இயேசுகிறிஸ்துவை யார் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஜீவனே நித்திய ஜீவன்.
நித்திய ஜீவனை வாக்குதத்தமாகப் பெற்றிருப்பதினால்தான் விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைக்கிறான்.
பாவத்தினால் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராகவும், மரணவாசனையுடையவர்களாகவும் காணபட்டோம். விசுவாசம் வந்தபோதோ நம்மில் மரண வாசனை காணப்பட்டாலும், ஜீவ வாசனையும் நமக்கு தரப்பட்டுள்ளது.
நித்திய ஜீவனை வாக்குதத்தமாய் பெறுகிறவர்கள் மட்டுமே
– பரலோகில் பிரவேசிக்க முடியும்.
– மரணத்தினின்று ஜீவனுக்குள் செல்ல முடியும்.
– தேவ சாயலை அணிந்து கொள்ள முடியும்.
– அவரின் வார்த்தைகள் அவனுக்கு உணவாய் இருக்க முடியும்.
– அவரோடு நடப்பதை பாக்கியமாய் கொள்வான்.
– பாவம், உலகம், மாம்சம், அவனை மேற்கொள்ளாது.
முக்தியடைதலும், ஜீவ சமாதி அடைதலும், எல்லாம் பிரம்மன் – நானே பிரம்மன் என்பதும் இல்லாத பட்டணத்துக்கு வழி கேட்பது போன்றது.
கிறிஸ்து எனக்கு ஜீவன். சாவு எனக்கு ஆதாயம் – பவுல்.
நித்திய ஜீவனை தரும் இயேசுவையும், அவர் வார்த்தைகளையும், அவர் ஆவியையும், அவர் சபையையும் நாடுங்கள்.
கர்த்தாவே, மரணமே எங்கள் வாழ்வாயிருந்தபோது நீர் எங்களுக்கு விசுவாசத்தை தந்து உம் ஜீவன் எங்களோடு உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அநேகரை நித்திய ஜீவனுக்குள் வழி நடத்த உதவினீர். பெற்ற பெரும் பேற்றை நாங்கள் உம் வருகையில் சேர்க்கபடுவது வரையிலும் இழக்காமலிருக்க உதவிடும்.