நமது உடலில் உள்ள இரத்தத்தைத் தேவன் எப்படி உருவாக்கியுள்ளார்

நமது உடலில் உள்ள இரத்தத்தைத் தேவன் எப்படி உருவாக்கியுள்ளார்?

நம்முடைய சரீரத்தின் ஒவ்வொரு உறுப்பின் செயல்பாடுகளும் பிரமிக்கத்தக்க ஆச்சரியத்தை கொடுக்கும்.

மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்று பரிணாம கொள்கையாளர்கள் கூறுகிறார்கள்.

சிருஷ்டிகர் ஒருவர் இல்லை எல்லாம் அதுவாக உண்டானது என்று சொல்லுகிறார்கள்.

அப்படி பேசுகிறவர்கள் ஆதாரத்தை தேடி உலகம் எங்கும் அலைந்து இருக்கிறார்கள். இப்போதும் அலைந்து கொண்டும் தேடி கொண்டும் தான் இருக்கிறார்கள்.

நம்முடைய சிருஷ்டிகர் (தேவன்) ஒருவர் இருக்கிறார் என்று எங்கேயும் ஆதாரம் தேடி அலைய வேண்டியது இல்லை.

ஏனென்றால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நம்முடைய சரீரமும் சரீரத்தின் செயல் பாடுகளுமே சாட்சியாக இருக்கிறது

நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டு இருக்கிறோம்.
சங்கீதம் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

நம்மை சிருஷ்டித்த சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதையும் நம்மை நேர்த்தியாக தேவன் சிருஷ்டித்து இருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏசாயா 51:12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

நம்முடைய உயிர் எங்கே இருக்கிறது?
ஆதியாகமம் 9:4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

லேவியராகமம் 17:11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது…..

இரத்தத்தில் என்ன இருக்கிறது?
1) இதில் திரவப்பகுதியும், திடப்பகுதியும் அடங்கியுள்ளன, மற்ற திசுக்களைப் போல் இரத்தமும் ஒரு திசுதான் அதாவது செல் கூட்டமே

2) இரத்தம் இரு பகுதிகளைக் கொண்டது, ஒன்று மங்கலான மஞ்சல் நிறமுள்ள திரவம், இது தண்ணீரை விடச் சற்று தடிப்பானது. மற்றொன்று இரத்ததில் மிதக்கும் கோடிக்காணக்கான நுண்ணிய செல்கள்.

3) இரத்ததின் திரவப்பகுதி பிளாஸ்மா எனப்படும். இதில் தண்ணீர் உள்ளது. இத்தண்ணீரில் புரோட்டீன் தன்மையுள்ள பொருள் கனத்துள்ளது.

4) இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் இருக்கிறது.

சிவப்பணுக்களில் என்ன இருக்கிறது?
1) மனித உடலின் இரத்தத்தில் பத்தில் ஒன்பது பாகங்கள் சிவப்பணுக்களால் ஆனாது. இவ்வணுக்கள் மிகச் சிறியவை, ஒரு பெரிய துளி இரத்தத்தில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட அணுக்கள் உள்ளன.

2) சிவப்பணுக்களெல்லாம் செல்களே. ஒவ்வொரு செல்லிலும் ஒரு நுக்லியஸ் உள்ளது. ஆனால் சிவப்பணுக்களில் நியூக்லியஸ் இல்லை.

3) மனித உடலில் உள்ள மற்ற செல்களைப் போலவே சிவப்பணுக்கள் சில நாள் வாழ்ந்து அழியுந்தன்மையுள்ளன. இவை ஒரு மாத காலத்திற்கு மேல் வாழ்வதில்லை.

4) அழிந்து போன சிவப்பு செல்களுக்கு ஈடு செய்யப் புதிய சிவப்பு செல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு உற்ற இடம் எலும்பின் உட்புறம் உள்ள மஜ்ஜை என்பதே.

வெள்ளை அணுக்களில் என்ன இருக்கிறது?
1) 500 சிவப்பணுக்களுக்கு ஒரு வெள்ளை அணு வீதம் வெள்ளை அணுக்கள் அமைந்துள்ளன. வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்களை விடப் பெரியவை அமைப்பிலும் செயலிலும் வேறுபட்டவை.

2) சில வெள்ளை அணுக்களில் சிறிய வட்டமான நியூக்லியஸ் உள்ளது.

3) வெள்ளணுக்கள் உடலின் பாதுகாப்புப் படையினர் என்றும் நோய்த்தடுப்பாளர்கள் என்றும் கூறுவார்கள். ஏனென்றால் உடலில் நோய் கிருமிகள் நுழைந்து நோயுண்டாக்கும் காலத்தில் வெள்ளணுக்கள் அக்கிருமிகளை தாக்கி அழிகின்றன.

4) உடலுக்குத் தேவையில்லாத புது பொருள் உடலில் எங்காவது காணப்பட்டால் வெள்ளை அணுக்கள் அதனை உடனே அகற்ற விரைந்து செல்கின்றன.

இரத்தத்தைப் பற்றி தேவனுடைய எச்சரிப்பு என்ன?
ஆதியாகமம் 9:6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

இவ்வளவு நேர்த்தியாக நம்முடைய தேவனை தவிர யார் சிருஷ்டிக்க முடியும்?
அவருக்கே கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக

தேவன் இல்லை என்று யார் சொல்ல கூடும்?
ஏசாயா 45:12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME