முற்பிதாக்கள் (ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு) யாரைத்தொழுது (ஆராதனை) கொண்டார்கள்?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்ற சத்தியங்களை வேத வாக்கியத்தோடு கற்றுக் கொண்டு வருகிறோம்.
இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே இருந்தபோது ஜனங்கள் அவரை எப்படித் தொழுது (ஆராதனை) கொண்டார்கள் என்பதைப் பற்றி கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது பழைய ஏற்பாட்டில் யாரை தொழுது கொண்டார்கள் என்பதை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.
நம்முடைய விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிராகம் யாரை தொழுது (ஆராதனை) கொண்டார்?
ஆபிரகாம் கர்த்தராகிய(யெகோவா) தேவனை தொழுதுகொண்டார்.
Gen 12:8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Gen 12:8 And he removed6275 from thence4480, 8033 unto a mountain2022 on the east4480, 6924 of Bethel,1008 and pitched5186 his tent,168 having Bethel1008 on the west,4480, 3220 and Hai5857 on the east:4480, 6924 and there8033 he built1129 an altar4196 unto the LORD,3068 and called7121 upon the name8034 of the LORD.3068
கர்த்தர் என்ற வார்த்தைக்கான எபிரெய எண் 3068.
கர்த்தர் என்று தமிழில் மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் எபிரெய வேதாகமத்தில் அவர் கர்த்தராக(யெகோவா) இருக்கிறார்.
H3068
יהוה
yehôvâh
yeh-ho-vaw’
From H1961; (the) self Existent or eternal; Jehovah, Jewish national name of God: – Jehovah, the Lord. Compare H3050, H3069.
ஆபிரகாம் எப்படி தேவனை தொழுது கொண்டார்?
கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி அதின் மேல் பலி செலுத்தி தொழுது கொண்டார்.
ஆபிரகாம் எதை தொழுது கொண்டார்?
கர்த்தருடைய நாமத்தை (அதிகாரத்தை) தொழுது கொண்டார்.
ஆபிரகாம் தான் உண்டாக்கின பலிபீடத்திலே மறுபடியும் வந்து பலியிட்டு கர்த்தருடைய(யெகோவா) நாமத்தை மறுபடியும் தொழுது கொண்டார்.
Gen 13:4 தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
ஆபிரகாம் பெயர்செபாவிலே சதாகாலமுள்ள கர்த்தராகிய(யெகோவா) தேவனுடைய நாமத்தை தொழுது(ஆராதனை) கொண்டார்.
Gen 21:33 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.
மோரியாதேசத்து மலையில் ஆபிரகாம் ஈசாக்கை கர்த்தராகிய(யெகோவா) தேவனுக்கு பலியிட்டு தான் தொழுது கொண்டார்.
Gen 22:14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ஈசாக் யாரை தொழுது (ஆராதனை) கொண்டார்?
ஈசாக்கும் கர்த்தராகிய(யெகோவா) தேவனை தான் தொழுது கொண்டார்.
Gen 26:25 (KJV+) And he built1129 an altar4196 there,8033 and called7121 upon the name8034 of the LORD,3068 and pitched5186 his tent168 there:8033 and there8033 Isaac’s3327 servants5650 digged3738 a well.875
Gen 26:25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
கர்த்தர் (எபிரெய எண் 3068) என்ற வார்த்தை அதே கர்த்தராகிய(யெகோவா) தேவனை தான் குறிக்கிறது.
யாக்கோபு யாரை தொழுது (ஆராதனை) கொண்டார்?
யாக்கோபும் கர்த்தராகிய(யெகோவா) தேவனை தான் தொழுது கொண்டார்.
Gen 28:13 (KJV+) And, behold,2009 the LORD3068 stood5324 above5921 it, and said,559 I589 am the LORD3068 God430 of Abraham85 thy father,1 and the God430 of Isaac:3327 the land776 whereon834, 5921 thou859 liest,7901 to thee will I give5414 it, and to thy seed;2233
Gen 28:13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
ஆபிராகம், ஈசாக், யாக்கோபு இவர்கள் எல்லாரும் யாரை தொழுது கொண்டார்கள்?
தேவனாகிய கர்த்தராகிய(யெகோவா) தேவனை தொழுது(ஆராதனை) கொண்டார்கள்.
Exo 3:15 (KJV+) And God430 said559 moreover5750 unto413 Moses,4872 Thus3541 shalt thou say559 unto413 the children1121 of Israel,3478 The LORD3068 God430 of your fathers,1 the God430 of Abraham,85 the God430 of Isaac,3327 and the God430 of Jacob,3290 hath sent7971 me unto413 you: this2088 is my name8034 forever,5769 and this2088 is my memorial2143 unto all generations.1755, 1755
Exo 3:15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
- பழைய ஏற்பாட்டு முற்பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் கர்த்தராகிய(யெகோவா) தேவனைதான் தொழுது கொண்டார்கள்.
- இந்த சத்தியங்களை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இஸ்ரவேல் ஜனங்கள் யாரை தொழுது கொண்டார்கள்என்பதைக் குறித்து வேத வாக்கியங்களோடு தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்.