தேவன் பூமியில் இன்றைக்கு யாரைத் தேடிக் கொண்டு இருக்கிறார்?
அநேகர் போதிக்க கூடிய காரியம் என்னவென்றால் பாவிகளைத் தேவன் நேசிக்கிறார் என்பது தான்.
உண்மையிலேயே தேவன் பாவிகளை நேசிக்கிறாரா இல்லை மனந்திரும்புவதற்கு அழைக்கிறாரா?
பாவத்தில் நிலைத்து இருக்கக் கூடிய எந்த பாவியை தேவன் நேசிப்பது இல்லை.
பாவிகளுக்கு ஜீவனையும் சுவாசத்தையும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து தம்மை அவர்கள் தேடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்கிறார்.
பாவிகள் தேவனைத் தேடி மனந்திரும்பி அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப் படியும் போது அவர்களை ஏற்றுக் கொள்ளுகிறார்.
எந்த ஒரு வேத வாக்கியம் தன்னுடைய பாவத்தில் நிலைத்து இருக்க கூடிய எந்த பாவிகளையும் தேவன் நேசிக்கிறார் என்று போதிப்பது இல்லை.
இன்றைக்கு அநேகர் இப்படி சாட்சி சொல்லுவதைக் கேட்டு இருக்கிறீர்களா?
1) நான் கடன் மிகுதியால் தற்கொலை பண்ண போனேன் இயேசு என்னை காப்பாற்றி ஊழியத்திற்கு அழைத்தார்.
2) குடும்ப பிரச்சனையால் இரயில் தண்டவாளத்தில் தலைவைக்க போனோன் இயேசு என்னை காப்பாற்றி ஊழியத்திற்கு அழைத்தார்.
3) குடும்ப பிரச்சனையில் விஷம் குடிக்க போனேன் இயேசு என்னை காப்பாற்றி ஊழியத்திற்கு அழைத்தார்.
இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக பெரிய ஊழியர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்கள் எல்லாம் இப்படி சொல்லி தான் அநேகரை தங்களுடைய பக்கம் இழுத்து இருக்கிறார்கள்.
அப்படியென்றால் இன்றைக்கு உலகமெங்கும் பல தற்கொலைகள் நடக்கிறதே அவர்களை எல்லாம் இயேசு ஏன் காப்பாற்றவில்லை ஊழியத்திற்கு அழைக்கவில்லை?
உண்மையில் வேதவாக்கியம் தற்கொலை பண்ண முயற்சி செய்கிறவர்களைக் குறித்து என்ன சொல்லுகிறது?
பிரசங்கி 7:17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?
எல்லாருக்கும் தேவன் மரிப்பதற்கு காலங்களை வைத்து இருக்கிறார், ஆனால் தற்கொலை செய்கிறவர்கள் அந்த காலத்திற்கு முன்னே செத்து பாதாளத்தில் வேதனையுள்ள ஸ்தளத்திற்கு போய் சேர்ந்து விடுகிறார்கள்.
தற்கொலை செய்கிறவர்கள் தேவனை பரீட்சைபார்க்கிறார்கள்
மத்தேயு 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்,,,,,
மத்தேயு 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்
கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தற்கொலைக்கு முயற்சி செய்கிறவர்கள் எல்லாம் நீதிமான்களா?
இல்லை அவர்கள் துன்மார்க்கர்கள்.
சங்கீதம் 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; …
குடும்பத்தை நடத்த தெரியாமல் தற்கொலை செய்கிறவர்கள் தைரியமுள்ளவர்களா?
இல்லை இவர்கள் எல்லாம் கோழைகள் (பயப்படுகிறவர்கள்).
இவர்களுக்கு தேவன் என்ன வைத்து இருக்கிறார்?
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், ,,,,,அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
தற்கொலை செய்யப்போகிற துன்மார்க்கனுக்கும் கோழைகளுக்கும் தேவன் ஒரு போதும் செவி கொடுக்கிறதில்லை.
அப்படியென்றால் தேவன் இந்த பூமியில் யாரைத் தேடிக் கொண்டு இருக்கிறார்?
தேவனைத் தேடக்கூடிய உணர்வு உள்ளவனைத் தான் தேவன் தேடிக் கொண்டு இருக்கிறார்.
சங்கீதம் 14:2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
துன்மார்க்கனையும் பாவிகளையும் தேவன் கண்ணோக்கி பார்க்கிறது இல்லை, மனந்திரும்பக் கூடிய பாவிகளையும் துன்மார்க்கார்களையும் தேவன் கண்ணோக்கி பார்க்கிறார்.
ஆபிரகாம் இருதயத்தில் உண்மையுள்ளவராக இருந்தபடியால் அவரை தேவனை அழைத்தார்.
நெகேமியா 9:7 ஆபிராமைத் தெரிந்துகொண்டு……
நெகேமியா 9:8 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, ,,,,அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராக இருந்தார்.
எண்ணாகமம் 12:7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
தானியேல் தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார்.
தானியேல் 6:4 …. அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தபடியால் தேவன் அந்த ஊழியத்தை அவர்களிடத்தில் ஒப்பு கொடுத்தார்.
1தீமோத்தேயு 1:12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
கொர்நேலியு தேவனைத் தேடக்கூடிய உணர்வு இருந்தபடியால் அவருக்கு தேவன் தம்முடைய சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 10:2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அப்போஸ்தலர் 10:6 அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
லீதியாள் தேவனை தேடக்கூடிய உணர்வு இருந்தபடியால் அவளுக்கு தேவன் தம்முடைய சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 16:14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
கொரிந்து பட்டணத்திலே தேவனை தேடக்கூடிய உண்மையுள்ள மனுஷர்கள் இருந்தபடியால் அங்கே தங்கி தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கும்படி பவுலுக்கு கர்த்தர் கட்டளையிடப்பட்டார்.
அப்போஸ்தலர் 18:10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
அப்போஸ்தலர் 18:11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.
உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் தான் தேவனுடைய வாக்கியங்களை ஒப்புவிக்கும்படி தேவன் கட்டளையிட்டுள்ளார்
2தீமோத்தேயு 2:2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.
உண்மையுள்ள மனிதர்களிடத்தில் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை போதிக்கும் போது என்னவாகிறது.
லூக்கா 8:15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
அவர்கள் அதை உண்மையும் நன்மையான இருதயத்தில் அதை காத்துப் பொறுமையுடனே பலன் கொடுப்பார்கள்.
உண்மையுள்ளவர்கள் தான் தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் அவரை தொழுது கொள்ள முடியும்
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
ஆகையால் இன்றைக்கும் தேவனைத் தேடக்கூடிய உணர்வு உள்ளவனையும் உண்மையுள்ள இருதயம் உள்ளவனையும் தான் தேவன் தேடிக் கொண்டு இருக்கிறார், அவர்களுக்கு தான் தம்முடைய சத்தியங்களை தெரியப்படுத்துகிறார்.