நாம் தேவனைப் பின்பற்றுகிறமோ அல்லது மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறோமா?
Following God or Traditions
அநேக குழுவினர் தேவனைப் பிரியப்படுத்துவதாக விசுவாசிக்கிறார்கள். ஆனால் அவர்களில் அநேகர் தவறாய் இருக்கிறார்கள் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார்.
குறிக்கோள் இல்லாத போது மனிதன் தன் பார்வைக்கு சரியானது எதுவோ அதை தான் செய்வான்.
நியாயாதிபதிகள் 17:6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
மனுஷனுடைய இருதயங்களைக் கர்த்தர் நிறுத்துப் பார்க்கிறார்.
நீதிமொழிகள் 21:2 மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.
- இது சாதாரணமான மனிதனின் இருதயம் இன்றைக்கு இப்படிப்பட்ட இருதயத்தை உடையவர்களை காண்பதில் ஆச்சரியபட வேண்டாம்.
- வேதாகம முழுவதும் உள்ள சரித்திரங்களிலும் இப்படிப்பட்ட இருதயத்தைக் காணலாம்.
- கர்த்தருடைய உதாரணங்களில் சொல்லப்பட்ட இருதயத்தை நாம் இந்த நாட்களில் காண முடியும்.
இஸ்ரவேலர்கள் வெளிப்படையாய் பார்க்கும் போது தேவனை தேடினார்கள். ஆனால் அது தேவனால் அங்கிகரிக்கப்படவில்லை.
ஏசாயா 58:1 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
ஏசாயா 58:2 தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
ஏசாயா 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.
- தேவனுடைய சட்டத்தின்படி இவர்கள் தேவனைக் கூப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த சட்டத்தைப் பின்பற்றினார்கள்.
தேவனுக்காக வைராக்கியம் பாராட்டினதினால் இஸ்ரவேலர் தங்கள் பார்வையில் சரியாக இருந்தார்கள்.
ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
ரோமர் 10:2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
ரோமர் 10:3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
- இஸ்ரவேலர்கள் தங்கள் சுயநீதியை நிலைநிறுத்த தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
தேவனுக்கு சேவை செய்வதாக நினைத்து பவுல் தேடின காரியங்களினால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அப்போஸ்தலர் 9:5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
அப்போஸ்தலர் 9:6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
- தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள அவர் கமாலியேலை தெரிந்து கொண்டதே அங்கே பிரச்சனையாக இருந்தது.
தேவனுடைய வார்த்தைகளை நாம் திருடும் போது அவர்களை தேவன் வெறுக்கிறார்கள்.
எரேமியா 23:30 ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன் தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யூதர்கள் தங்களது பார்வையில் சரியாய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தவறாய் இருந்தார்கள்.
யோவான் 8:37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
யோவான் 8:38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.
யோவான் 8:39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.
யோவான் 8:40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
யோவான் 8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
யோவான் 8:43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
- இந்த யூதர்கள் அதிகமான தவறு உடையவர்களாய் இல்லை.
இவர்கள் செய்ய வேண்டிய தீர்வு என்ன?
தேவனுக்கு முன்பாக பரிசேயர் சதுசேயர் தாங்கள் சரியாய் இருப்பதாய் நினைத்தார்கள்.
மத்தேயு 15:1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
மத்தேயு 15:2 உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
மனுஷருடைய பாரம்பரியத்தைப் பின்பற்றி தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்தார்கள். மத்தேயு 15:3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
மத்தேயு 15:4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
மத்தேயு 15:5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
பரிசேயர்கள் மனுஷருடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கினார்கள்.
மத்தேயு 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
பரிசேயர்கள் மனுஷருடைய பாரம்பரியத்தை பின்பற்றினபடியினாலே அவர்கள் இருதயம் தேவனை விட்டு தூரமாய் விலகி இருந்தது.
மத்தேயு 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:
மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
பரிசேயர்கள் மனுஷர்களுடைய பாரம்பரியங்களை பின்பற்றினபடியால் அவர்களுடைய ஆராதனை வீணாக தான் இருந்தது.
மத்தேயு 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
மத்தேயு 15:10 பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.
மத்தேயு 15:11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
மத்தேயு 15:12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
மத்தேயு 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
மத்தேயு 15:14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
தங்களுடைய பார்வையில் சரியாய் இருந்தவர்கள் அநேகர் நியாத்தீர்ப்பு நாளில் வந்து நிற்பார்கள்.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
- இது பூமியில் உள்ள பிரச்சனை மாத்திரம் அல்ல நித்தியமான பிரச்சனையாய் இது உள்ளது.
இதன் தீர்வு என்ன?
தேவனுடைய சரியான அடிச்சுவடை கண்டுபிடித்துள்ளோமா என்பதை நாம் நம்பிக்கையோடு சரிபார்ப்பதே தீர்வு.
2கொரிந்தியர் 13:5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
Ø தேவனுடைய உண்மையுள்ள பிள்ளைகளுக்கே இந்த தீர்வு
பிரச்சனை என்ன தீர்வு என்ன?
முதலாவது யூதர்கள் தேவனுக்கு செவி கொடுக்காமல் மனுஷருக்கு செவி கொடுத்தார் கள்.
ரோமர் 10:1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது.
ரோமர் 10:2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.
ரோமர் 10:3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
நாம் தேவனுடைய வார்த்தைகளை கண்டுபிடித்து கவனம் செலுத்தாத போது நாமும் முன்னோர்களின் பாரம்பரியங்களை செவி கொடுக்கிறவர்களாய் தான் இருப்போம்.
அப்படியானால் நம்முடைய பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்?
பரிசேயர்களுக்கு இருந்த அதே பிரச்சனை தான் இன்றைக்கு நமக்கும் இருக்கிறது.
மத்தேயு 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
மத்தேயு 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
- பரிசேயர்கள் தேவனுடைய வார்த்தைகளை அல்ல மனுஷருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்ததால் தான் விழுந்து போனார்கள்.
யூதர்களுக்கு இயேசு கிறிஸ்து அவர்களது பிரச்சனை என்ன என்பதை விவரித்தார்.
யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
- யூதர்கள் தேவனுடைய வார்த்தைகளை அல்ல மனுஷருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுத்தப்படியால் தான் விழுந்து போனார்கள்.
எரேமியாவின் காலத்தில் தேவன் யூதர்களுக்கு தீர்வைக் கொடுத்தார்.
எரேமியா 23:1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தீர்வு என்னவென்றால் தேவனுடைய வாயின் வார்த்தைகளை மாத்திரம் பேச வேண்டும்.
எரேமியா 23:16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மனிதன் தன் வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும்.
எரேமியா 23:18 கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
- தேவனுடைய வார்த்தைகளைத் தேடும் போது அதை கவனமாய் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் போதிக்கவும் கவனிக்கவும் வேண்டும். மனுஷர்களுடைய உபதேசங்களை அல்ல என்பது தேவனின் தீர்வாக இருக்கிறது.
எரேமியா 23:21 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
எரேமியா 23:22 அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள்.
தமது வார்த்தைகளை பேசும்படி கேட்க தேவன் கூறுகிறார்.
எரேமியா 23:35 கர்த்தர் என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.
தேவன் அதையே மறுபடியும் திரும்ப கூறுகிறார்.
எரேமியா 23:37 கர்த்தர் உனக்கு என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.
பிதாவுக்கு கீழ்ப்படிந்து அடங்க வேண்டும் என்று நம்மை இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறார்.
மத்தேயு 22:1 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
பரலோக ராஜ்யம் ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
மத்தேயு 22:2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.
ராஜா தன்னுடைய குமாரனுடைய கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைத்தனுப்பினார்.
மத்தேயு 22:3 அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.
மத்தேயு 22:4 அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
அழைக்கப்பட்டவர்கள் ராஜாவிற்கு கீழ்ப்படிந்து அடங்கவில்லை அவர்கள் அவரை அசட்டை பண்ணினார்கள்.
மத்தேயு 22:5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள்.
ராஜா அனுப்பின அவனுடைய ஊழியக்காரரை அவர்கள் கொலை செய்தார்கள்.
மத்தேயு 22:6 மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
ராஜா கோபமடைந்து அவருடைய சேனையை அனுப்ப அவர்களை அழித்து பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
மத்தேயு 22:7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
ராஜா தன் ஊழியக்காரை அனுப்பி வழிகளிலே காணப்பட்ட யாவரையும் அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டார்.
மத்தேயு 22:8 அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.
மத்தேயு 22:9 ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது.
மத்தேயு 22:10 அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது.
ராஜா கலியாண வஸ்திரம் தரித்திராத மனிதனை அவர் தண்டித்தால.
மத்தேயு 22:11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:
மத்தேயு 22:12 சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
மத்தேயு 22:13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
மத்தேயு 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
மனிதர்களின் குழப்பங்களுக்கு என்ன தீர்வு உள்ளது?
அவருடைய வார்த்தைகளை தேடி அவற்றிக்கு கீழ்ப்படிவதே தீர்வு.
ஏதேன் தோட்டத்தில் சாத்தான் கூட்டினது ஒரு வார்த்தை தான் தேவனுடைய முழு வார்த்தையையே கெடுத்துப் போட்டார்.
ஆதியாகமம் 3:4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு கொடுத்த தீர்வு என்ன?
மத்தேயு 15:1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து:
பரிசேயர்கள் தேவனுடைய வார்த்தைகளை காட்டிலும் பாரம்பரியத்தை அதிகமாக மதித்தார்கள்.
மத்தேயு 15:2 உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள்.
- முன்னோர்களின் பாரம்பரியத்தை கைக்கொள்ளும் போது அங்கே தேவனுடைய கற்பனையை மீறி நடக்கிறோம்.
- எது நமக்கு முக்கியமாக இருக்கிறது முன்னோர்களின் பாரம்பரியமா அல்லது தேவனுடைய கற்பனைகளா?
முன்னோர்களின் பாரம்பரியத்தின்படி நடக்கும் போது தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறோம் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தார்.
மத்தேயு 15:3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
பரிசேயர்கள் இங்கே தேவனுடைய கற்பனைகளை புறம்பே தள்ளிவிட்டு மனுஷர்களுடைய பாரம்பரியத்தை பின்பற்றி தேவனுடைய கற்பனைகளை அவமாக்கி பட்டார்கள்.
மத்தேயு 15:4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.
மத்தேயு 15:5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து,
மத்தேயு 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.
நாம் மனுஷருடைய பாரம்பரியத்தையா அல்லது தேவனுடைய வார்த்தைகளையா எதை பின்பற்ற போகிறோம்?
மனிதனின் பாரம்பரியம் தேவனுடைய வார்த்தைகளை அவமாக்குகிறது.
நியாயப்பிரமாண சட்டத்திட்டங்கள் கூட ஒழிந்து போயின.
கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.
நாம் பந்தயப் பொருளை இழந்து போகதபடிக்கு ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
கொலோசெயர் 2:20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல,
கொலோசெயர் 2:21 மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
கொலோசெயர் 2:22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே.
கொலோசெயர் 2:23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கி இருக்க வேண்டும்.
1பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
நாம் அடங்கி இருக்கும் போது நாம் தேவனால் உயர்த்தப்படும்.
தங்களுடைய பார்வையில் சரியாய் இருந்தவர்கள் அநேகர் நியாத்தீர்ப்பு நாளில் வந்து நிற்கும் போது அதிர்ச்சியடைவார்கள்.
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
நாம் கீழ்ப்படிந்து அடங்கி இருப்போமானால் நாம் இரட்சிக்கப்பட்டவர்களாய் இருப்போம்.