தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவன் எப்படி பிரவேசிக்க முடியும்?
ஆவிக்குரிய அந்த தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி ஒருவன் பிரவேசிக்க முடியும்?
இயேசு கிறிஸ்து நிக்கொதேமு என்னும் பரிசேயனிடத்தில் ஒருவன் தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி பிரவேசிக்க முடியும் என்று போதித்தார்.
நமக்கு இரண்டு ஆவிக்குரிய பிறப்புகள் இருக்கிறது.
- தேவனுடைய ராஜ்யத்தை காண்பதற்கு ஒருவன் பரத்திலிருந்து ஒருவன் பிறக்க வேண்டும்.
- தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்க வேண்டும்.
முதல்பிறப்பு: தேவனுடைய ராஜ்யத்தை காண்பதற்கு பரத்திலிருந்து பிறக்க வேண்டும்.
Joh 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- தேவனுடைய ராஜ்யத்தை ஒருவன் காணாமல் அதில் பிரவேசிக்க முடியாது என்பதை நாம் இந்த வசனத்தில் கவனிக்க வேண்டும்.
தமிழ் வேதாகமத்தில் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் என்று இருக்கிறது. ஆனால் ஒருவன் பரத்திலிருந்து பிறவாவிட்டால் என்று தான் கிரேக்க வேதாகமம் போதிக்கிறது.
Joh 3:3 (KJV) Jesus answered and said unto him, Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God.
Joh 3:3 (KJV+) Jesus2424 answered611 and2532 said2036 unto him,846 Verily,281 verily,281 I say3004 unto thee,4671 Except3362 a man5100 be born1080 again,509 he cannot1410, 3756 see1492 the3588 kingdom932 of God.2316
Joh 3:3 : இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மறுபடியம் (Again) என்ற வார்த்தைக்கான கிரேக்க எண் 509
G509
ἄνωθεν
anōthen
an’-o-then
From G507; from above
பாருங்கள் ஒருவன் பரத்திலிருந்து பிறந்தால் தான் ராஜ்யத்தை காண முடியும்
பரத்திலிருந்து பிறப்பது என்பது தேவனால் பிறப்பதாகும்
பரத்திலிருந்து ஒருவன் எப்படி பிறக்க முடியும்?
ஒருவன் இயேசு கிறிஸ்துவை சிருஷ்டிகர் என்று ஏற்றுக் கொள்ளும் போது அவன் தேவனால் பிறக்கிறான்
Joh 1:10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
Joh 1:11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
Joh 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
Joh 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
1Jo 5:1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; …
- யூதர்கள் இயேசுவை உலகத்தை சிருஷ்டித்தவர் என்றோ கிறிஸ்து என்றோ ஏற்றுக் கொள்ளவில்லை.
- இயேசுகிறிஸ்துவை சிருஷ்டிகர் என்றும் கிறிஸ்து என்று நாம் ஏற்றுக் கொள்ளும் போது தேவன் தம்முடையபிள்ளைகளாகும்படி ஆவிக்குரிய பிறப்பை அவர்களுக்கு கொடுக்கிறார்.
- நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் ஆகும் போது தான் பரத்திலிருந்து பிறக்கிறீர்கள். அப்போது தான் நீங்கள் தேவனுடைய ஆவிக்குரிய ராஜ்யத்தை பார்க்க முடியும்.
நிக்கொதேமு ஆவிக்குரிய பார்வை இல்லாதபடியால் அவர் குருடாய் இருந்தார்.
Joh 3:4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
- ஆவிக்குரிய பிறப்பு என்பது தாயின் கர்ப்பத்தில் பிறக்கக்கூடிய மாம்ச சம்பந்தமான பிறப்பு அல்ல
இரண்டாவதுபிறப்பு: தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்கவேண்டும்.
Joh 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு ஜலத்தினாலும் ஆவியினால் பிறக்க வேண்டும்.
எப்படி ஜலத்தினால் பிறப்பது?
Eph 5:26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
ஆவியினால் பிறப்பது என்றால் என்ன அர்த்தம்?
நிறைய பேர் ஆவியினால் பிறப்பது என்றால் பரிசுத்த ஆவியினால் பிறப்பது என்று சொல்லுகிறார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்து இங்கே உள்ளான மனுஷனில் பிறப்பதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்.
Rom 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு வெளியே வரும் போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் இருக்கிறோம்.
ஞானஸ்நானத்தின் மூலமாக உள்ளான மனுஷனில் பிறந்து அந்த தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்.
Joh 3:6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
ஆவியினால் பிறந்தவனை நாம் பார்க்க முடியுமா?
ஆவியினால் பிறப்பதை எந்த மனிதனும் மாம்ச கண்களினால் பார்க்க முடியாது. ஆனால் அதை உள்ளான மனுஷனில் உணர்ந்துகொள்ள முடியும்.
Joh 3:7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.
Joh 3:8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
- ஞானஸ்நானத்தின் மூலமாக நாம் சபைக்குள்ளாக கர்த்தரால் சேர்க்கப்படுகிறோம். அதே வேளையில் தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளாகவும் பிரவேசிக்கிறோம்.