மந்தையில்

தேவனுடைய மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம்?

ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் தேவனுடைய ஆலயமாகவும் இருக்கிறது என்றும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாகவும் அந்த மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையும் கற்றுக் கொள்ளுவோம்.

தேவன்(கிறிஸ்து) தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட சபையை மந்தை என்று பரிசுத்த ஆவியானவர் அழைக்கிறார்.

Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

ஒன்றான மேய் சபை தேவனுடைய மந்தை என்று அழைக்கப்படுகிறது.

1Pe 5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, 

தேவனுடைய மந்தையில் நாம் என்னவாக இருக்கிறோம்?

தேவனுடைய மந்தையில் இஸ்ரவேலர்களும் நாமும் ஆடுகளாக இருக்கிறோம்.

Mat 10:6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

1Pe 2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.

அப்போஸ்தலர்கள் தேவனுடைய மந்தையில் என்னவாக இருக்கிறார்கள்?

Mat 26:31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.

Joh 21:15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

  • தேவனுடைய மந்தையில் அவர்கள் ஆடுகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கிறார்கள்.
  • அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவுக்குஆடுகளாய் இருந்தார்கள். அவர்கள் இப்போது நமக்கு மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள்

தேவனுடைய மந்தையில் மேய்ப்பர் யாராக இருக்கிறார்?

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய மந்தையிலே பெரிய மேய்ப்பராக இருக்கிறார்.

Joh 10:11 நானே நல்ல மேய்ப்பன்

Heb 13:20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,

நம்முடைய மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து நமக்காக என்ன செய்து இருக்கிறார்?

நமக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்து இருக்கிறார்.

Joh 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Joh 10:15  ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

ஆடுகளுக்கு வாசல் யார்?

இயேசு கிறிஸ்து மேய்ப்பனாகவும் இருக்கிறார், ஆடுகளுக்கு வாசலாகவும் இருக்கிறார்.

Joh 10:7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தேவனுடைய மந்தையில் இருக்கும் இயேசு கிறிஸ்து எப்படிஇருக்கிறார்?

இயேசு கிறிஸ்து வாசல் வழியாகவந்த நல்ல மேய்ப்பானாக இருக்கிறார்.

Joh 10:2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

நாம் அவருடைய ஆடுகளாய் இருக்கிறபடியால் அவருக்கு மாத்திரமே செவி கொடுக்க வேண்டும்.

Joh 10:3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. 

இயேசுகிறிஸ்து நாம் அவருடைய ஆடுகளையாய் இருக்கிறபடியால் பேர் சொல்லி கூப்பிட்டு அழைத்துகொண்டு போகிறார்.

Joh 10:3 அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான்.

இயேசுகிறிஸ்துவின் ஆடுகள் அவரை மாத்திரமே பின்பற்றும்.

Joh 10:4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

அந்நியருடைய (கள்ளனும்கொள்ளைகாரனுமாகிய கள்ள போதகர்கள்) அறியாதபடியினாலே அவனை பின்பற்றாமல் அவனைவிட்டோடி விடும்.

Joh 10:5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

  • நாம்இயேசு கிறிஸ்துவின் ஆடுகளாய் இருப்போம் என்றால் அவருடைய வார்த்தைகளுக்கு மாத்திரமே செவி கொடுத்து அவரை பின்பற்றுவோம்.

இயேசுகிறிஸ்து ஆடுகளுக்கு வாசலாக இருக்கிறார்.

Joh 10:7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசு கிறிஸ்து வாசலாய் இருப்பதினால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது?

Joh 10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

  • இயேசுகிறிஸ்து மூலமாக மாத்திரமே ஒருவன் மந்தைக்குள்ளாக பிரவேசிக்கும் போது தான் அவன் உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான்.

இயேசுகிறிஸ்து தம்முடைய ஆடுகளை நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்.

Joh 10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

Joh 10:15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

Joh 10:16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

ஒன்றான மெய் சபையாகிய தேவனுடைய மந்தையில் கிறிஸ்து பிரதான மேய்ப்பராகவும் தேவனுடைய பிள்ளைகள் செம்மறி ஆடுகளாகவும் இருக்கிறார்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME