உபவாசத்தைப் பற்றி தேவனுடைய சத்தியம் என்ன

உபவாசத்தைப் பற்றி தேவனுடைய சத்தியம் என்ன?

கிறிஸ்தவர்களாகிய நமக்கு உபவாசம் இருக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருக்கிறது.

தேவன் புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் உபவாசம் இருந்த ஜனங்களிடத்தில் தேவன் என்ன எதிர்பார்த்தார் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.

பழைய ஏற்பாட்டில் உபவாசத்தைக் குறித்து தேவன் நியாயப்பிரமாணத்தில் எதுவும் கட்டளை கொடுக்கவில்லை.

ஆனால் இஸ்ரவேல் ஜனங்களும் சில புறஜாதி ஜனங்களும் மனந்திரும்பி தங்களை வருத்தி தாழ்மைப்படுத்திய போது தேவன் அதை கண்டு மனம் இறங்கி அவர்களுக்களுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

தேவனுக்கு எது உகந்த உபவாசம் என்பதை அவரே நமக்கு தமது வார்த்தையும் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஏசாயா 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,

ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

  • உபவாசம் இருக்கக்கூடியவர்களிடத்தில் தேவன் பழைய ஏற்பாட்டில் மேலே சொல்லப்பட்ட காரியங்களை அவர் எதிர்பார்த்தார்.
  • விசேஷமாக பசியுள்ளவனுக்கு ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதுமான கிரியைகளை தேவன் உபவாசம் இருக்கிறவர்களிடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் தேவன் சொன்னதற்கு மாறாக இஸ்ரவேல் ஜனங்கள் உபவாசம் இருந்தார்கள்.

இச்சையின் படி செய்வதற்காக இஸ்ரவேலர்கள் உபவாசம் இருந்தார்கள்.

ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

  • இஸ்ரவேல் ஜனங்களுடைய உபவாசத்தை தேவன் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்கள் தங்களுடைய இச்சையின்படி நடந்து தேவனை தேடாமல் அந்த நாளில் தங்களுடைய வேலையெல்லாம் கட்டயமாய் செய்தார்கள்.
  • தேவன் அவர்களுடைய உபவாசத்தை அறிந்து இருந்தார். ஆனால் அதற்கு அவர் செவிகொடுக்கவில்லை.

கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படிக்கு உபவாசித்தார்கள்.

ஏசாயா 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.

  • இஸ்ரவேல் ஜனங்களுடைய உபவாசம் நன்மைக்கேதுவாக இல்லாமல் தீமைக்கு ஏதுவாக இருந்தது.
  • தாங்கள் செய்யக்கூடிய தீமைகளுக்கு தேவன் செவி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
  • அவர்களுடைய வேண்டுதல் எல்லாம் அக்கிரமத்தின் செய்கைகளாக இருந்தது.

இப்படிப்பட்ட உபவாசம் தேவன் தனக்கு பிரியமில்லை என்று சொல்லுகிறார்.

ஏசாயா 58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

  • உபவாசத்தில் தேவன் ஒருபோதும் புறம்பான தாழ்மையை விரும்புவது இல்லை.
  • மனுஷர்களுடைய பார்வையில் ஆத்துமாவை ஒடுக்கி சாம்பலில் படுத்துக் கொண்டு உபவாசம் இருப்பது பிரியமாய் இருக்கும், ஆனால் தேவனுடைய பார்வையில் அது அருவருப்பான காரியமாய் இருக்கிறது.
  • அப்படி உபவாசம் பண்ணுவது கர்த்தருக்கு பிரியமான நாளாகவும் உபவாச நாளாகவும் ஒருபோதும் இருக்க முடியாது.

இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் தேசத்தில் அடிமையாக இருந்த போது எழுபது வருஷங்களும்  ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம் இருந்தார்கள் அதைக்குறித்து தேவன் என்ன சொல்லுகிறார்?

சகரியா 7:5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்?

சகரியா 7:6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?

  • உபவாசம் நாள் என்பது தேவனை பிரியப்படுத்துக்கூடிய நாளாக இருக்க வேண்டும்.
  • உபவாச நாளில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை புசித்துக் குடித்து தங்களை பிரியப்படுத்திக் கொண்டார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களின் எழுபது வருஷ உபவாசத்தை தேவன் கவனித்தார். ஆனால் அவர்களுக்கு செவி கொடுக்கவில்லை காரணம் தேவனுடைய கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை.

சகரியா 7:12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

  • தேவனுடைய வார்த்தைகளை கேளாதபடிக்கு இருதயத்தை வைராக்கியமாக்கி உபவாசம் இருக்கும் போது தேவன் அதை எப்படி அங்கிகரிப்பார்.
  • தேவனுடைய கட்டளைகளை புறம்பே தள்ளி விட்டு உபவாசம் இருப்பதை தேவன் ஒருபோதும் அங்கிகரிப்பது இல்லை.
  • அவர்கள் மேல் தேவனுடைய கடுங்கோபம் வைக்கப்பட்டு இருந்தது.

புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைக்குறித்து தேவனுடைய கட்டளை என்ன?

உபவாசத்தைக் குறித்து கிறிஸ்து என்ன கட்டளையை கொடுத்து இருக்கிறார்?

மத்தேயு 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.

மத்தேயு 6:18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

  • புதிய ஏற்பாட்டில் உபவாசம் என்பது கட்டாயம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • ஒருவேளை நாம் உபவாசம் இருக்கும் போது மாயக்காரரைப் போல மனுஷர் காண வேண்டும் என்று  முகவாடலாய் இருக்க கூடாது.
  • நாம் உபவாசம் இருக்கும் போது மனுஷர்களுக்கு அது காணப்படாதபடிக்கு தலைக்கு எண்ணெய் பூசி முகத்தைக் கழுவி இருக்க வேண்டும். அதுவே பிதாவுக்கு பிரியமானதும் அதற்கே அவர் வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

கொர்நேலியு தன் வீட்டிலே உபவாசித்து ஜெபம் பண்ணின போது தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.

அப்போஸ்தலர் 10:30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:

அப்போஸ்தலர் 10:31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.

  • கொர்நேலியுவின் உபவாசமும் ஜெபமும் தேவனுக்கு உகந்ததாக இருந்தது.
  • தேவன் அவருடைய உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் பதில் கொடுத்தார்.

தன்னுடைய உபவாசத்தைக் குறித்து பெருமையாக இருந்த பரிசேயனுடைய ஜெபத்திற்கு தேவன் பதில் கொடுக்கவில்லை.

லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

லூக்கா 18:13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

லூக்கா 18:14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

  • உபவாசம் இருப்பது என்பது பெருமையான காரியம் அல்ல. அது தேவனிடத்தில் சேருவதற்கான தாழ்மையான காரியம்.
  • தாழ்மையுள்ளவர்களுக்கே தேவன் பதில் கொடுக்கிறார். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்
  • உபவாசம் என்பது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கட்டாயம் கிடையாது. ஆனால்  தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளின்படி உபவாசம் இருக்கும் போது தான் தேவன் அதற்கு பலன் அளிக்கிறார்.

இன்றைக்கு பெரிய பேனர்கள் மூலம் உபவாச திருவிழா, உபவாச பெருவிழா என்று அறிவித்து விளம்பரப்படுத்துகிறார்களே அவர்களை பற்றி என்ன?

மத்தேயு 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நாம் இப்படி உபவாசம் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Comments
  1. அருள்

    suber

ADD YOUR COMMENT

Powered By Indic IME