நமது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமா

நமது இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியமா?

Is Baptism Necessary for Salvation?

ஞானஸ்நானம் இல்லாமல் ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட முடியுமா?

பெரும்பாலான பிரிவினைக் கூட்டங்கள் ஆம் இரட்சிக்கப்பட முடியும் என்று சொல்லுகிறது. ஆனால் வேத வாக்கியங்கள் இல்லை என்று போதிக்கிறது.

பிதாவுக்கு கீழ்ப்படிகிறவன் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு கிறிஸ்து போதித்தார்.

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபடியினாலே தான் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

1கொரிந்தியர் 15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,

  • பாவம் இல்லாத போது பரலோகம் போக முடியும் என்று சிலர் விசுவாசிக்கிறார்கள் அது போதும் என்கிறார்கள்.
  • ஆனால் அவர்கள் கர்த்தரை அன்பு கூர்ந்து அவரைப் பிரியப்படுத்த வேண்டும். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கு அநேக காரணங்கள் இருக்கிறது.

இயேசு மற்றொரு காரணத்திற்காகவும் மரித்திருக்கிறார். அது அவருக்கு முக்கியமானதாய் இருக்கிறது.

ரோமர் 14:9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

கர்த்தர் முழுமையான கீழ்ப்படிதலை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

லூக்கா 6:46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான்

சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?

புதிய மனதை அளிப்பது இயேசுவின் மரணத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாய் இருக்கிறது.

2கொரிந்தியர் 5:15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

தனக்காக வாழ மாட்டேன் என்கிற புதிய மனதை உடையவர்களாய் இருப்பது என்பதின் அர்த்தம் என்ன?

மரித்து எழுந்த ஒருவருக்காக பிழைத்து இருப்பது என்பதின் அர்த்தம் என்ன?

மரித்து எழுந்த ஒருவருக்காக பிழைத்து இருப்பது என்பது கர்த்தருக்காகவும் அவருடைய சித்தத்தின்படி வாழ்வதாகும்.

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிதாவுடைய கிரியைகளை செய்வதை தவிர இயேசு கிறிஸ்து வேறு எதற்காகவது பிழைத்து இருந்தாரா?

யோவான் 5:19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.

சிலுவைக்கு முன்பு இருந்த இரட்சிப்பு.

சிலுவைக்கு முன்பு தேவனைப் பிரியப்படுவது இரட்சிப்பின் திறவுகோலாக இருந்தது.

எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.

ஏனோக்கு தேவனை எப்படி பிரியப்படுத்தினார்?

விசுவாசத்தின் மூலம் தேவனை அவர் பிரியப்படுத்தினார்.

கர்த்தர் ஏன் லோத்துவை காப்பாற்றி சோதோம் கொமொராவை அழித்து போட்டார்?

2பேதுரு 2:7 அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

2பேதுரு 2:8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

தீமையை வெறுப்பவர்களுக்கு தேவன் தயவு அளிக்கிறார்.

எசேக்கியேல் 9:4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

எசேக்கியேல் 9:5 பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,

எசேக்கியேல் 9:6 முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள்.

இயேசு கிறிஸ்து அக்கிரமத்தை வெறுத்ததால் பிதா அவருக்கு பலன் அளித்தார்.

எபிரெயர் 1:8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.

எபிரெயர் 1:9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்;

சிலுவைக்கு முன்பு பழைய ஏற்பாட்டின் கீழ் உள்ள மனிதர்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள்?

எசேக்கியேல் 20:11 என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.

எசேக்கியேல் 20:12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.

எசேக்கியேல் 20:13 ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

தேவனுடைய கட்டளைகளின்படியும் நியாயங்களின் படியும் கீழ்ப்படிகிற யாவரும் பிழைப்பார்கள்.

எசேக்கியேல் 18:9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

பழைய ஏற்பாட்டில் கர்த்தருக்கு பயப்படுதல் தேவனுடைய இரட்சிப்பின் ஒரு பாகமாக இருந்தது.

சங்கீதம் 85:9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

தேவனுக்கு  பயந்து அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்களுக்கு அவருடைய நித்தியமான இரக்கம் இருக்கிறது.

சங்கீதம் 103:17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

சங்கீதம் 103:18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

கர்த்தருக்கு பயப்படுகிற ஒவ்வொருவரையும் தேவன் அறிந்து இருப்பார். அவர்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதையும் அவர் கவனித்து கேட்பார்.

மல்கியா 3:16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

மல்கியா 3:17 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

மல்கியா 3:18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

ஆபிரகாமின் பிள்ளைகள் சிலுவைக்கு முன்பே தேவனுக்குள் இருந்தார்கள்.

மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தம்முடைய எல்லா பிள்ளைகளையும் தேவன் ஒன்று சேர்ப்பதாக தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார்.

யோவான் 11:49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;

யோவான் 11:50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.

யோவான் 11:51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

யோவான் 11:52 அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

சிலுவைக்கு முன்பு தேவனுக்கு ஆவிக்குரிய பிள்ளைகள் இருந்தார்கள்.

சிலுவைக்கு பின்பு இருக்கிற இரட்சிப்பு.

சிலுவைக்கு பிறகு பிரமாணத்தில் மாற்றம் உண்டானது.

அப்போஸ்தலர் 17:30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

இப்பொழுது எல்லா மனதிரும்ப வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.

புதிய ஏற்பாட்டின் பிரமாணம் புதியது. ஆனால் யாரெல்லாம் கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கு இரட்சிப்பு தொடர்ந்து இருந்தது.

அப்போஸ்தலர் 10:34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,

அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

தேவனுக்கு பயந்தவர்களில் கொர்நேலியும் ஒருவர்.

அப்போஸ்தலர் 10:1 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்.

அப்போஸ்தலர் 10:2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான்.

புதிய ஏற்பாட்டில் கர்த்தர் தொடர்ந்து தேவனுக்கு பயப்படுகிறவர்களை கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

அப்போஸ்தலர் 13:16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.

கொர்நெலியு தேவனுக்கு பயந்து நடப்பதினால் அவரும் அவர் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படவில்லை.

அப்போஸ்தலர் 10:6 அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

அப்போஸ்தலர் 11:14 நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.

ஆரோனிலிருந்து கிறிஸ்துவிடமாய் ஆசாரியத்துவம் மாற்றப்பட்டது. அதற்கு புதிய பிரமாணம் அவசியமாய் இருந்தது.

எபிரெயர் 7:12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.

இயேசு கிறிஸ்து நம்மிடம் புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தார்.

எபிரெயர் 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.

எபிரெயர் 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எபிரெயர் 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

நம்முடைய பிரதான ஆசாரியர் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்.

எபிரெயர் 8:1 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,

எபிரெயர் 8:2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

நமது பிரதான ஆசாரியர் புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்துள்ளார்.

எபிரெயர் 8:6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

பழைய ஏற்பாட்டின் கீழ் உள்ளவர்களுக்கும் இரட்சிப்புக்கு இப்பொழுது சில புதிய சட்டங்கள் உள்ளது.

தனது நித்தியமான சபையை இயேசு கிறிஸ்து கட்டுவேன் என்று வாக்குத்தத்தம் செய்திருந்தார்.

மத்தேயு 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

அந்த ஜனங்களில் ஜீவிய நாட்களிலேயே தேவனுடைய ராஜ்யமானது வந்தது.

மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பவுலும் கொலோசெய சபையாரும் அந்த ராஜ்யத்திற்குள் இருக்கிறார்கள்.

கொலோசெயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பவுல் இருக்கிறார்.

புதிய ஏற்பாடு அநேக மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

பெந்தெகொஸ்தே நாளில் எத்தனை பேர் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளை பெற்றார்கள்?

அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

  • சிலுவைக்கு முன்பு இரட்சிக்கப்பட்டவர்கள் சிலுவைக்கு பிறகும் அதே நபர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தார்களா?
  • சிலுவைக்கு முன்பு ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட நிலையிலிருந்தவர்கள் ஞானஸ்நானம் பெற கட்டளையிடப்பட்டு ரகள்

சிலுவைக்கு பிறகு விசுவாசமும் ஞானஸ்நானமும் இரட்சிப்பில் உள்ளடங்கி உள்ளது.

மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

மாற்கு 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

சிலுவைக்கு பிறகு ஞானஸ்நானம் பேதுருவை இரட்சித்ததா?

1பேதுரு 3:19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

1பேதுரு 3:20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

1பேதுரு 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;

  • ஜலப்பிரளயம் மற்ற எல்லாரையும் அழித்துப் போட்டது அதே தண்ணீரில் நோவா அவருடைய குடும்பத்தார் ஏன் காப்பற்றப்பட்டார்கள்?
  • தண்ணீரினால் மாத்திரம் நோவா காப்பற்றப்பட்டாரா அல்லது அவருடைய கீழ்ப்படிதலினால் தண்ணீரிலிருந்து நோவாவை தேவன் இரட்சித்தாரா?
  • அதே ஜலப்பிரளயமே நோவாவின் பேழையை எளிதாக உடைத்து போட்டிருக்க கூடும்.
  • தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றது பேதுருவை இரட்சித்ததா அல்லது தேவன் பேதுருவின் கீழ்ப்படிதலினாலே தேவன் தண்ணீரினாலே இரட்சித்தாரா?

மறுபடியும் பிறப்பது என்பது மெய்பொருளில் பரத்திலிருந்து பிறப்பதாய் இருக்கிறது.

யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பரலோக ராஜ்யத்தை காண்பதும் அதில் பிரவேசிப்பதும் வித்தியாசமாய் இருக்கிறதா?

ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பது என்பது ஜலத்தையும் ஆவியையும் இரண்டையும் உட்படுத்துகிறது.

யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

மாம்சத்தினால் பிறப்பது சாதாரணமாக தாயின் கர்ப்பத்தில் இருந்து பிறப்பது.

யோவான் 3:6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.

யோவான் 3:7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

யோவான் 3:8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.

  • ஆவியினாலே பிறப்பது என்பது ஆவிக்குரிய வகையில் பிறப்பதாய் இருக்கிறது.
  • எந்த வகையான பிறப்பும் ஜீவனோடு(உயிர்) வாழ்வதற்கு ஆரம்பிக்கிற ஆரம்பமாய் இருக்கிறது.
  • மாம்ச பிறப்பை உடையவர் பொதுவாக குடும்பத்திற்குள்ளும் மற்றும் தேசத்திற்குள்ளும் இரண்டிலும் பிறக்கிறார்கள்.

அப்படியானால் ஆவிக்குரிய பிறப்பில் என்ன சம்பவிக்கிறது?

ஆவிக்குரிய பிறப்பு என்பது தேவனுடைய வார்த்தையின் மூலமாய் பிறப்பது.

1பேதுரு 1:23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

தேவனுடைய வார்த்தை ஒருவருக்கு எப்படி ஆவிக்குரிய பிறப்பை கொடுக்கிறது?

தேவனுடைய வீட்டாராக ஒருவர் எப்படி பிரவேசிக்க முடியும்?

எபேசியர் 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

பிதா ஒருவர் தான் நமக்கு பிறப்பை கொடுக்க கூடியவராய் இருக்கிறார்.

1பேதுரு 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

1பேதுரு 1:4 அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

நாம் தேவனால் பிறந்திருப்போமானால் யாருடைய குடும்பத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்?

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய வகையில் ஜீவனோடு இருக்கும்படி அவர்களுக்கு பிறப்பைக் கொடுத்துள்ளார்.

எபேசியர் 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

கிறிஸ்துவைக் கொண்டு பிதா நமக்கு பிறப்பைக் கொடுத்துள்ளார்.

எபேசியர் 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

இங்கே நம்மையும் என்பது பவுலையும் உட்படுத்துகிறது.

பவுல் மரித்தவராய் இருந்தார். ஆனால் தேவன் அவரை எப்போதும் ஜீவனை உடையவராய் இருக்கும்படி செய்தார்.

ஞானஸ்நானத்தில் தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவுடன் அடக்கம் செய்யப்பட்டு எழுந்திருக்கிறார்கள்.

கொலோசெயர் 2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.

கிறிஸ்துவுக்கு வெளியில் இருக்கிறவர்கள் இரட்சிக்கப்படவில்லை மற்றும் அந்த நிலையில் அவர்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை.

எபேசியர் 2:12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 2:13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.

சிலுவைக்கு முன்பு இயேசு உள்ளே மற்றும் வெளியே இருந்தவர்களிடம் பேசினார்.

மாற்கு 4:11 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

மாற்கு 4:12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

உள்ளே இருந்தவர்கள் மாத்திரம் உவமையை புரிந்துக் கொண்டார்கள்.

யார் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கிறவர்கள் என்று யார் இல்லை என்கிற அதே மொழியை இங்கே பயன்படுத்துகிறார்.

1கொரிந்தியர் 5:12 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?

1கொரிந்தியர் 5:13 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

பவுல் மீண்டும் வெளியே இருக்கிற கிறிஸ்துவின் அவயவத்தில் அல்லாதவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

கொலோசெயர் 4:5 புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

பவுல் மீண்டுமாக ஒரு தரம் சபையில் இல்லாமல் வெளியே இருப்பவர்களை அவர் இங்கே குறிப்பிடுகிறார்.

1தெசலோனிக்கேயர் 4:11 புறம்பேயிருக்கிறவர்களைப் பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,

ஒருவர் கிறிஸ்துவுக்குள் வருகிற போது தேவனுடைய குடும்பத்தில் பறக்கிறார்.

கலாத்தியர் 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

தேவன் நமக்கு பிறப்பைக் கொடுத்துள்ளார். அது நம்மை அவருடைய குடும்பத்திற்குள் உட்படுத்தியுள்ளது.

1பேதுரு 1:4 அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

நம்மை என்று சொல்லும் போது பேதுருவையும் உட்படுத்துகிறது.

தேவன் பேதுருவுக்கு பிறப்பைக் கொடுத்துள்ளார்.

ஞானஸ்நானமானது தேவனுடைய பிள்ளைகளை கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக மற்றும் கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணினது.

ரோமர் 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

ரோமர் 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

பெந்தெகொஸ்தே நாளுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் இயேசு கிறிஸ்து தன்னுடைய சபையை ஸ்தாபிக்க போவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார்.

மத்தேயு 16:18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

கி,பி 33ல் இயேசு கிறிஸ்து கிறிஸ்து தம்முடைய சபையைக் கட்டினார்.

அப்போஸ்தலர் 2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

பெந்தெகொஸ்தே நாளில் தேவனுடைய சபையில் ஆத்துமாக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக முதல் பதிவு உள்ளது.

கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கிறார்கள்.

1கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

ஞானஸ்நானத்தின் மூலம் கொரிந்தியர்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் னார்கள்.

1கொரிந்தியர் 12:13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

நாம் என்பது பவுலையும் உட்படுத்தி பேசப்படுகிறது.

பவுலும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்.

சரீரம் என்பது மற்றொரு பதமாக அதே நிர்வாகத்தைக் குறித்து பேசப்படுகிறது.

கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரம் அதே சரீரம் தான் சபை என்கிற சரீரமாய் இருக்கிறது.

எபேசியர் 1:22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

எபேசியர் 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

ஒருவன் ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்திற்க்குள் பிரவேசித்தானானால் கிறிஸ்துவின் சரீரமானது கிறிஸ்துவின் சபையாக இருக்கிறபடியால் அவன் கிறிஸ்துவின் சபையில் ஞானஸ்நானத்தின் மூலம் பிரவேசிக்கிறார்.

இயேசு தமது சபையை இரட்சிக்கப் போகிறார்.

எபேசியர் 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.

  • ஒரு சபையை மாத்திரம் ஸ்தாபிப்பதாக இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
  • இயேசுவுக்கு ஒரே ஆவிக்குரிய சரீரம் மாத்திரம் இருக்கிறது.

சபையில் இல்லாத யார் ஒருவரையும் இயேசு கிறிஸ்து இரட்சிக்க போகிறது இல்லை.

மத்தேயு 15:12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.

மத்தேயு 15:13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

  • கிறிஸ்துவின் சரீரத்திற்கு வெளியே உள்ள ஆத்துமா இரட்சிக்கப்படும் என்று வேத வாக்கியம் போதிக்கிறதா?
  • கிறிஸ்துவின் சபைக்கு வெளியே உள்ள ஆத்துமா இரட்சிக்கப்படும் என்று எந்த வேத வாக்கியம் போதிக்கிறது?

திராட்சை செடி கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தோடு என்ன தொடர்பு உடையதாய் இருக்கிறது?

யோவான் 15:1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்.

யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

யோவான் 15:3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

கிறிஸ்துவின் சரீரத்திற்கு செம்மறியாட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது?

யோவான் 10:1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

யோவான் 10:2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

யோவான் 10:3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான்.

யோவான் 10:4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.

யோவான் 10:5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.

கிறிஸ்துவின் சரீரத்திற்கும் ஒலிவ மரக்கிளைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

ரோமர் 11:17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,

ரோமர் 11:18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்.

ரோமர் 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.

ரோமர் 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு.

ரோமர் 11:21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.

ரோமர் 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.

ரோமர் 11:23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே.

ரோமர் 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?

கிறிஸ்துவின் சரீரத்திற்கும் தேவனுடைய வீட்டில் உள்ளவைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

1கொரிந்தியர் 3:9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.

கிறிஸ்துவின் ராஜ்யத்தோடும் கிறிஸ்துவின் சரீரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

கொலோசெயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

கிறிஸ்துவின் சரீரமும் கிறிஸ்துவின் சபையும் ஒன்றாய் இருக்குமானால் செம்மறியாடு ஒளிவமரக் கிளைகள் மற்றும் கிறிஸ்துவின் சபையின் ராஜ்யத்திற்கும் தொடர்பு பற்றி என்ன?

பவுல் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இருக்கிறார்.

கொலோசெயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

அப்போஸ்தலனாகிய யோவான் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இருக்கிறார்.

வெளி 1:9 உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

இயேசு தமது ராஜ்யத்தை நியாயத்தீர்ப்பு நாளில் பிதாவிடம் ஒப்புக் கொடுக்க போகிறார்.

1கொரிந்தியர் 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

1கொரிந்தியர் 15:25 எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.

1கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

1கொரிந்தியர் 15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME