யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப் போடலாமா

யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப் போடலாமா?

இன்றைக்கு அநேகர் தங்களுடைய சிநேகிதர்களோ அல்லது தங்களுடைய சொந்தபந்தங்களோ அல்லது அந்நியர்களோ கடன் (வங்கியிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ) வாங்கும் போது  ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள்.

கடன் வாங்கியவர்கள்  இவர்களை ஏமாற்றி விட்டு ஓடி விட்டாலோ அல்லது கடனை கட்டாமல் மரித்து விட்டாலோ ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் பெரும் கடன் தொல்லையில் சிக்கிக் கொள்ளுகிறார்கள். அநேகர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

ஆனால் ஜாமீன் கையெழுத்து போட்ட கிறிஸ்தவர்கள் தேவனை நோக்கி கெஞ்சி அழுகிறார்கள்.

ஆனால் தேவன் இதைக் குறித்து என்ன கட்டளையிட்டு இருக்கிறார் என்பதையும் என்ன ஆலோசனை கொடுக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

தேவனுடைய ஆலோசனை  என்னவென்றால் அந்நியனுக்காக பிணைக்கப்பட்டால் உங்களுக்கு வெகு பாடு வரும் என்று சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 11:15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

யார் தான் ஜாமீன் கையெழுத்து போடுவார்கள்?

ஜாமீன் கையெழுத்து போடுகிறவர்கள் தேவனுடைய பார்வையில் மதி கெட்டவர்களாய் இருக்கிறார்கள்

நீதிமொழிகள் 17:18 புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.

  • நாம் ஒருபோதும் யாருக்கும் நெருங்கின சிநேகிதனுக்கு கூட  ஜாமீன் கையெழுத்து போட்டு புத்தியீனனாக இருக்கக் கூடாது.

ஜாமீன் கையெழுத்து போட்டு அதில் சிக்கிக்கொண்டவர்கள் கடைசியில் படுத்து இருக்கக்கூடிய படுக்கையை கூட எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்று தேவன் எச்சரிக்கிறார்.

நீதிமொழிகள் 22:26 கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

நீதிமொழிகள் 22:27 செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே

  • யார் ஒருவர் வாங்கக்கூடிய கடனுக்கு நான் பொறுப்பாளியாக இருக்கிறேன் என்று ஒருபோதும் நாம் பிணைக்கப்படக்கூடாது என்று தேவன் எச்சரிக்கிறார்.
  • நாம் யாருக்காவது கடனுக்காக பிணைக்கப்பட்டு கடன் வாங்கிய நபர் அதை செலுத்தவில்லை என்றால் நாம் ஜாமீன் கையெழுத்து போட்டபடியால்  நமக்குரிய படுக்கை முதற்கொண்டு நாம் இழக்க வேண்டியதாய் இருக்கும்.

ஒருவேளை ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கிக் கொண்டால் நாம் என்ன செய்வது? அதற்கு தேவனுடைய ஆலோசனை என்ன?

நாம் வாயின் மொழிகளாலும் வார்த்தைகளாலும் பிணைக்கப்படும் போது நாம் சிக்கிக் கொண்டோம்.

நீதிமொழிகள் 6:1 என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

நீதிமொழிகள் 6:2 நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

நாம் சிக்கிக் கொண்டால் தப்புவித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

நீதிமொழிகள் 6:3 இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

நீதிமொழிகள் 6:4 உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

  • நாம் ஒருவரிடத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கி கொண்டால் கண்ணுக்கும் நித்திரை வரவிடாமல் கடன் வாங்கியவர்களிடத்தில் போய் நம்மை தாழ்த்தி வருந்திக் கேட்க வேண்டும். அப்படி அவர்கள் கொடுக்கும் போது தப்பித்துக் கொள்ள முடியும்.

தேவனுடைய ஆலோசனையின் படி கேட்கும் போது வேட்டைக்காரன் கைக்கும் வேடனுடைய கைக்கும் தப்புவித்துக் கொள்ள முடியு.

நீதிமொழிகள் 6:5 வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

  • கடன் கொடுத்தவர்கள் வேட்டைக்காரனுக்கும் வேடனுக்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.
  • கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் வெளிமானுக்கும்  குருவிக்கும் ஒப்பாய் இருக்கிறார்கள்.
  • தேவன் இந்த ஆலோசனையை நமக்கு ஏன் கொடுக்கிறார் என்றால் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கிக்கொண்டு தேவனிடத்தில் ஜெபித்தாலும் அதற்கு தேவன் செவி கொடுக்க மாட்டார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME