சர்தை சபை உயிருள்ள சபை என்று பெயர் பெற்றும் செத்த சபை

சர்தை சபை:- உயிருள்ள சபை என்று பெயர் பெற்றும் செத்த சபை

சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்ன?

ஏழு சபைகளைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்

இப்போது சர்தை சபையைக் குறித்து சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்.

இயேசு கிறிஸ்து இந்த சபைக்கு தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?

வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது;

ஏழு ஆவிகள் என்பது தேவனுடைய ஆவிகள் என்று மாத்திரம் தெரிகிறது ஒருவேளை அது பரிசுத்த ஆவியானவராக இருக்கலாம்.

ஏழு நட்சத்திரங்கள் என்பது எழு சபைகளின் தூதர்கள்.

Rev 1:20 ….. அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; …

ஏழு தூதர்களை தம்முடைய கரத்தில் ஏந்திக் கொண்டு சபையின் மத்தியில் அவர் உலாவுவது ஆசீர்வதிக்க மட்டும் தானா?

இல்லை சபையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சபையின் விசுவாசிகளுடைய கிரியைகளையும் கிறிஸ்து அறிந்து கொண்டே இருக்கிறார்.

இந்த சர்தை சபையைக்குறித்து கிறிஸ்து என்ன சொல்லுகிறார்?

வெளி 3:1 ,,, உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

  • புறம்பான தோற்றத்தில் இந்த சபையார் எல்லாருடைய பார்வையிலும் ஜீவனோடு இருப்பதாக காண்பித்தார்கள். ஆனால் உள்ளான மனுஷனில் செத்தவர்களாய் இருந்தார்கள்.
  • இன்றைக்கும் வாரந்தோறும் ஆராதனைக்கு போவதும் கர்த்தருடைய பந்தியிலே பங்கு பெறுவதும் காணிக்கை கொடுப்பதும் மாத்திரம் தேவனுடைய பார்வையில் நிறைவுள்ளதாக இருக்காது.

புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட எல்லா தேவனுடைய கட்டளைகளுக்கும் கீழ்படிந்து நடக்கும்போது உள்ளான மனுஷனில் நாம் ஜீவனோடு இருக்க முடியும்.

மத்தேயு 23:28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

சர்தை சபையின் விசுவாசிகளை கிறிஸ்து எச்சரிக்கை செய்தார்.

வெளி 3:2 நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

  • கிறிஸ்து நம்முடைய உள்ளான மனுஷனைக் குறித்து இன்றைக்கு ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
  • சர்தை சபையைப் போலதேவனுக்கு முன்பாக நம்முடைய கிரியைகள் நிறைவுள்ளவைகளாக இருக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

சர்தை சபைக்கு சத்தியமானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது அதை அவர்கள் நினைவு கூர்ந்து மனந்திரும்ப வேண்டும் என்று கிறிஸ்து எச்சரித்தார்.

வெளி 3:3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

  • தேவனுடைய வார்த்தையை நினைத்து அந்த வார்த்தையை கைக்கொண்டு தான் மனந்திரும்ப வேண்டும்.
  • அப்படி சர்தை சபையின் விசுவாசிகள் மனந்திரும்பா பட்சத்தில் கிறிஸ்து அவர்கள் மேல்திருடனைப்போல் வருவேன் என்கிறார்.

கிறிஸ்து அவர்கள் மேல் அப்படி வரும்போது அவர்களால் தப்பிக்க முடியுமா?

சர்தை சபையில் சில பரிசுத்தவான்கள் இருந்ததை கிறிஸ்து வெளிப்படுத்தினார்.

வெளி 3:4 ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

  • சபையிலே தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாதவர்கள் இருந்தாலும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நீதிமான்களாக இருக்க முடியும். சர்தை சபையின் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வஸ்திரங்களை அசுசிப்படுத்தாமல் வாழ்ந்து இருக்கிறார்கள்.
  • அவர்கள் கிறிஸ்துவோடு வெண் வஸ்திரந்தரித்து அவரோடு கூட நடப்பார்கள் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்து இருகிறார்.

அவர்களுக்கு மாத்திரமா இந்த ஆசீர்வாதம்?

இல்லை தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியக்கூடிய எல்லா பிள்ளைகளுக்கும் இந்த ஆசீர்வாதம் இருக்கிறது.

தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து ஜெயங்கொள்ளக்கூடிய எல்லாருக்கும் அந்தவாக்குத்தத்தம் இருக்கிறது.

வெளி 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

இந்த சத்தியமானது சர்தை சபைக்கு மாத்திரம் தானா?

வெளி 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

பாடம்: கிறிஸ்து சபையில்இருக்கக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுடைய இருதயங்களை அவர் ஆராய்ந்து அறிந்துவைத்து இருக்கிறார். அநீதிமான்களின் நடுவிலும் நாம் நீதியுள்ளவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ முடியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME