இயேசுகிறிஸ்து என்ன சரீரத்தில் உயிர்த்தெழுந்தார்?
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பிரேத சீலைசாட்சியாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்து நான்கு சுவிசேஷ புத்தகங்களில்ஆவிக்குரிய சரீரத்தில் தான் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு நிறைய வேத ஆதாரங்கள் இருக்கிறது.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு முதல் ஆதாரம் கிறிஸ்துவின் பிரேத சீலை.
- இன்றைக்கு உலகத்தார் போதிக்கும் போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய கல்லறை கலியாக இருந்தது என்று போதிக்கிறார்கள்.
- ஆனால் வேத வாக்கியங்கள் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய கல்லறையில் இருந்த பிரேத சீலைகள் பலமான சாட்சியாக இருந்தது.
- இஸ்ரவேலர்கள் மரித்த சரீரத்தை அடக்கம் பண்ணுவதற்கு எகிப்திய முறையைத் தான் பயன்படுத்தினார்கள்.
பாதம் முதல் கழுத்துவரை தனிசீலைகளால் சுற்றுவார்கள், தலையை தனி சீலைகளால் சுற்றுவார்கள் அதற்கு மேல்கந்தவர்க்கங்களை பூசுவார்கள்.
யோவான் 11:44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது,,,,,
பேதுருவும் யோவானும் கல்லறைக்குள்ளே வந்த போது அங்கே அவர்கள் என்ன பார்த்தார்கள்?
யோவான் 20:3 அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள்.
யோவான் 20:4 பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து,
யோவான் 20:5 அதற்குள்ளே குனிந்து பார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.
யோவான் 20:6 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து,
கல்லறையில் சீலைகள் எப்படி இருந்ததை அவர்கள் கண்டார்கள்?
யோவான் 20:7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
- தமிழில் இப்படி மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். ஆனால் கிரேக்க வேதாகமத்தில் தலையில் சுற்றியிருந்த சீலைக்கும் சரீரத்தில் சுற்றி இருந்த சீலைக்கும் இடையிலே இடைவெளி இருந்தது என்று தான் இருக்கிறது.
அந்த சீலையை பேதுரு பார்த்த போது சீலைகள் வைக்கப்பட்ட விதத்தை பார்த்த போது ஆச்சரியப்பட்டார்.
லூக்கா 24:12 பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து விட்டார். ஆனால் இந்த வசனங்களை கவனியுங்கள்.
யோவான் 20:12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
- இரண்டு தூதர்கள் தலைமாட்டில் ஒருவன் கால் மாட்டில்ஒருவன் உட்கார்ந்து இருந்தார்கள். அப்படியென்றால் இந்த வசனத்தை கவனிக்கும் போது இயேசு கிறிஸ்துவின் பிரேதத்தை சுற்றப்பட்டு இருந்த சீலைகள் அப்படியே கழற்றப்படாமல் அப்படியே இருந்தது. ஆனால் அவருடைய சரீரம் அந்த பிரேத சீலைக்குள் இல்லை.
இந்த பிரேத சீலைகள் இருக்கக்கூடிய விதத்தைக் கண்டு தான் பேதுருவும் ஆச்சரியப்பட்டார் யோவானும் கண்டுவிசுவாசித்து இருக்கிறார்.
யோவான் 20:8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான்.
- அந்த பிரேத சீலை கலைத்துப் போடப்பட்டு இருக்கும் என்றால் அவர் கண்டு விசுவாசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்திரீகள் என்ன கண்டார்கள் யாரை காணவில்லை?
லூக்கா 24:24 அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
மற்ற ஸ்திரீகளும் கல்லறையில் கண்டார்கள் என்ன கண்டார்கள்?
அவருடைய பிரேத சீலை
யாரை காணவில்லை?
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அவர்கள் காணவில்லை
லாசரு மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்த போது அவருடைய பிரேத சீலைகளை கவிழ்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது.
யோவான் 11:44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
- ஆனால் இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தபடியால் அந்த பிரேதசீலையிலிருந்து கட்டவிழ்க்கப்படாமல் வெளியே வந்து விட்டார்.
- கிறிஸ்துவை சுற்றி இருந்த பிரேத சீலை அப்படியே வைக்கப்பட்ட இடத்தில் இருந்தது.
- அவர் பூமிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்து இருப்பார் என்றால் லாசருவை போல் அவரை சுற்றியிருந்த சீலையை யாரோ ஒருவர் கழற்ற வேண்டும். அப்படி கழற்றி இருப்பார்கள் என்றால் அந்த பிரேத சீலை கலைந்து போடப்பட்டு இருக்கும்.
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு இந்த பிரேத சீலை சாட்சியாக இருக்கிறது.
கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் அநேக சாட்சிகளை குறித்துக் கற்றுக் கொள்ளுவோம்.