செய்தார்

இயேசு கிறிஸ்து ஒன்றான மெய் சபைக்காக என்ன செய்தார்?

அநேகர் இன்றைக்கு சபையினுடைய நாமங்களைக் (பெயரைக்) குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அநேகர் எல்லாரும் தேவனைத்தானே தொழுதுகொள்ளுகிறோம் எல்லாருக்காகவும் கிறிஸ்து தானே மரித்து இருக்கிறார் அதனால் எந்த சபைக்கு போனால் என்ன? எல்லாரும் தேவனுடைய வார்த்தையை தானே அறிவிக்கிறார்கள். அவர்களும் வேதாகமத்தில் இருந்து தானே போதிக்கிறார்கள் என்று தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

இன்றைக்கு உலகத்தில் நடக்கும் ஆராதனைகள் எல்லாம் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளும் ஆராதனை என்று நினைக்கிறீர்களா?

வீணான ஆராதனையாக கூட இருக்க முடியும் அந்த ஆராதனையினால் நம்முடைய நித்திய ஜீவனை இழந்து போய்விடுவோம் என்பது உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மையாக இருக்கிறது.

மனுஷர்களுடைய கற்பனைகளின்படி நடப்பீர்கள் என்றால் அதுதான் வீணான ஆராதனையாக இருக்கிறது.

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

ஒன்றான மெய்யான சபையை நீங்கள் அடையாளம் காணபட்சத்தில் தேவனை ஆவியோடும் உண்மையோடும் எப்படி நீங்கள் தொழுது கொள்ளுவீர்கள்?

ஒன்றான மெய்யான சபையில் அவயவமாய்  இருந்து  மெய்யான ஆராதனையோடு தேவனை தொழுது கொள்ளவேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினை சபைகளுக்குபோவீர்கள் என்றால் அது வீணான ஆராதனையாக தான் இருக்கும்.

கிறிஸ்து ஒன்றான மெய்யான சபைக்காக என்ன செய்தார் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.

இயேசு கிறிஸ்து தம்முடைய சுயரத்தத்தினாலே அந்த சபையை சம்பாதித்துக் கொண்டார்.

Act 20:28 ஆகையால், உங்களைக் குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை …..

  • பாருங்கள் இயேசுகிறிஸ்துவுக்கு சபையானது இலவசமாக கிடைக்கவில்லை அதை அவர் சம்பாதித்தார்.

அதை அவர் எப்படி சம்பாதித்தார்?

தம்முடைய சுய ரத்தத்தினாலே சம்பாதித்தார்.

  • இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சம்பாதிக்கப்பட்டதால் அது அவருக்கு சொந்தமானது.

யாருடைய இரத்தத்தினாலே சபையானது சம்பாதிக்கப்பட்டது?

  • பேதுருவா?
  • பவுலா?
  • மற்ற அப்போஸ்தலர்களா?
  • மரியாளா?
  • தீர்க்கதரிசிகளா?
  • உலகத்தில் வாழக்கூடிய மனுஷர்களா?

இவர்கள் யாருடைய இரத்தத்தினாலும் சபையானது சம்பாதிக்கப்படவில்லை.

அப்படியானல் இன்றைக்கு ஏன் இவர்களுடைய நாமங்களை சபைக்கு தரித்துக் கொள்ளுகிறார்கள்?

இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமான அவருடைய சபைக்கு எப்படி மற்றவர்களுடைய நாமங்களை (பெயரை) வைக்க முடியும்?

நீங்கள் மனுஷர்களால் ஏற்படுத்தப்பட்ட  சபைகளுக்கு போவீர்கள் என்றால் நீங்கள் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது என்பதை உங்கள் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த சபைக்காக கிறிஸ்து தன்னை எப்படி ஒப்புக் கொடுத்தார் என்று பாருங்கள்?

Eph 5:25 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

Eph 5:26 தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

கிறிஸ்து அந்த சபையை எப்படி பரிசுத்தமாக்கினார்?

1) கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்தார்.

2) அந்த சபையை திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்கினார்.

கிறிஸ்துவின் சபை எப்படி இருக்கிறது?

கறை திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக இருக்கிறது.

கிறிஸ்து மகிமையுள்ள சபையாக இருப்பதற்கு என்ன செய்தார்?

கிறிஸ்து தம்மை தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார்.

  • கிறிஸ்து தம்முடைய ஜீவனையே சபைக்காக  தரும் அளவுக்கு அந்த ஒன்றான மெய் சபை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME