பிதாவாகிய தேவனை சத்தியத்தோடு (உண்மையோடு) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன

பிதாவாகிய தேவனை சத்தியத்தோடு (உண்மையோடு) தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.

நாம் ஏற்கனவே ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது நம்முடைய உள்ளான மனுஷனில் ஆவிக்குரிய இருதயத்தில் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளவேண்டும் என்பதை அநேக வேதவாக்கியங்களை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது பிதாவாகிய தேவனை எப்படி உண்மையோடு தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

பிதாவாகிய தேவனை  நாம் ஏன் ஆவியோடும் உண்மையோடும் (சத்தியத்தோடும்) தொழுது கொள்ள வேண்டும்?

ஏனென்றால் நம்முடைய பிதாவாகிய தேவன் ஆவியாயிருக்கிறார்.

Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

இந்த வேத வாக்கியத்தில் பிதாவை உண்மையோடு அவரைத்தொழுது கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் கிரேக்க வேதாகத்தில் சத்தியத்தோடுதொழுது கொள்ள வேண்டும் என்று தான் இருக்கிறது.

G225

ἀλήθεια

alētheia

al-ay’-thi-a

From G227; truth:

  • பிதாவாகிய தேவனை சத்தியத்தோடு தொழுது கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
  • தேவன் ஆவியாயிருக்கிறபடியால் நாமும் ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

சத்தியம் என்றால் அர்த்தம் என்ன?

Joh 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

  • பிதாவினுடைய வசனங்கள் (வார்த்தைகள்) எல்லாம் சத்தியம் இருக்கிறது.

பிதாவாகிய தேவன் எப்படி இருக்கிறார்?

Joh 7:28 . என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

Joh 8:26 , என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.

  • பிதாவாகிய தேவன் சத்தியமுள்ளவராக இருக்கிறார்.

இயேசுகிறிஸ்து தேவனுடைய மார்க்கத்தைக் குறித்து சத்தியமாக போதித்தார்.

Mar 12:14 ,,,, நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர்.

இயேசு கிறிஸ்து சத்தியத்தை யாரிடத்தில் கேட்டார்?

Joh 8:40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.

  • இயேசு போதித்த சகல சத்தியங்களையும் தேவனிடத்தில் கேட்டிருந்தார்அந்த சத்தியங்களைதான் அவர் போதித்தார் அவர் சுயமாய் ஒன்றும் போதிக்கவும் இல்லை சுயமாய் ஒன்றும் செய்யவும் இல்லை.

இயேசு கிறிஸ்து தேவனுடைய சத்தியத்தை போதித்தபடியால் அவர் சத்தியமாய் இருக்கிறார்.

Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் என்று அழைக்கப்பட்டார்.

Joh 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

Joh 15:26 ….. சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

பரிசுத்த ஆவியானவர் ஏன் சத்திய ஆவி என்று அழைக்கப்பட்டார்?

Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

  • பரிசுத்த ஆவியானவர் சகல சத்தியத்தையும் போதித்தபடியால் அவர் சத்திய ஆவி என்று அழைக்கப்பட்டார்.
  • பரிசுத்த ஆவியினாவரும் சுயமாய் பேசாமல் தான் கேள்விப்பட்ட யாவையும் குறித்தும் அவர் போதித்தார்.

இயேசு கிறிஸ்து சுயமாய் வந்தாரா?

Joh 8:42 …. ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

இயேசு கிறிஸ்து சத்தியத்தை சுயமாய் போதித்தாரா?

Joh 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; 

Joh 7:17 …. நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.

Joh 8:28 …. நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.

Joh 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

Joh 14:10 …. நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

Joh 17:8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.

  • இயேசுகிறிஸ்து சுயமாய் வரவும் இல்லை சுயமாய் ஒரு வார்த்தையும் போதிக்கவும் இல்லை
  • பிதா இயேசு கிறிஸ்துவுக்கு என்ன கட்டளையிட்டாரோ அதை மாத்திரமே போதித்தார் அதை மாத்திரமே செய்தார்.

பரிசுத்த ஆவியானவர் சுயமாய் வந்தாரா?

Joh 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

  • பரிசுத்த ஆவியானவரை பிதா தான் அனுப்பினார்.

பரிசுத்த ஆவியானவரை அனுப்பக்கூடிய அதிகாரம் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

Joh 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.

பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை சுயமாய் போதித்தாரா?

Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

Joh 16:14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

Joh 16:15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

  • வேதவாக்கியங்களில் சுயமாய் பேசினவர் பிதாவாகிய தேவன் மாத்திரம். இயேசு கிறிஸ்துவோ,பரிசுத்த ஆவியானவரோ சுயமாய் ஒரு வார்த்தை கூட போதிக்கவில்லை என்று தான் வேதவாக்கியம் நமக்கு போதிக்கிறது.

இயேசுகிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் சுயமாய் சத்தியத்தை போதிக்கவில்லை என்றால்  இன்றைக்கு அநேகர் இன்றைக்கு சுயமான சத்தியங்களை ஏற்படுத்திக் கொண்டு வேதாகமத்தில் பிதாவானவர் சொல்லாத காரியங்களை கொண்டு ஆராதனைசெய்கிறார்களே இந்த ஆராதனையை பிதாவாகிய தேவன் ஏற்றுக் கொள்ளுவரா?

வேத வாக்கியத்தில் இல்லாத சுயமான எந்தவொரு ஆராதனையையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.

கர்த்தருக்கு சித்தமானால் ஆராதனையில் ஒவ்வொரு காரியங்களும் (ஜெபம், பாடல், பிரசங்கம், கர்த்தருடைய பந்தி, காணிக்கை) வேத வாக்கியத்தோடு எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME