தேவனுடைய மந்தையில் வேறு வழியாக ஏறுகிறவர்கள் கள்ளனும் கொள்ளைக்காரனுமாய் இருக்கிறார்கள்.
ஒன்றான மெய் சபை தேவனுடைய மந்தையாக இருக்கிறது என்று பார்த்து இருக்கிறோம்.
தேவனுடைய மந்தையில் இருக்கிற நாம் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிற கள்ளப்போதகர்களுக்கும் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறித்து இப்போது பார்ப்போம்.
- இன்றைக்கு உலகத்தில் அநேக கள்ளப்போதகர்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் இருக்கிறார்கள்.
- இப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டுபிடித்து அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.
வாசல்வழியாக வராமல் வேறு வழியாக வருகிறவர்களுக்கு எச்சரிகையாக இருங்கள். அவர்கள் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிறார்கள்.
Joh 10:1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
- மந்தைக்குள்ளாக வேறு வழியாய் வந்தால் அவன் கள்ளனும் கொள்ளைகாரனுமாக இருக்கிறான்.
கள்ளப்போதகர்கள் (திருடன்) ஆடுகளாக கவலைப்பட மாட்டார்கள்.
Joh 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
கூலிக்கு மந்தை மேய்க்கிறவன் ஆடுகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டான்.
Joh 10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
Joh 10:13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய கள்ளபோதகர்களைப்போல தான் இருந்தார்கள்.
இஸ்வேலின் மேய்ப்பர்கள் தங்களையே மேய்த்து கொண்டார்கள்.
Eze 34:2 கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.
மேய்ப்பர்கள் எப்படி தங்களையே மேய்த்து கொண்டார்கள்?
Eze 34:3 நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள்.
பாருங்கள் இவர்கள் இன்றைக்கு இருக்கக்கூடிய கள்ள போதகர்களை போல இருக்கிறவர்கள் அல்லவா?
இஸ்ரவேலின் மந்தை மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு என்ன செய்து இருக்க வேண்டும்?
Eze 34:4 நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
மேய்ப்பர்களுடைய வேலை என்ன?
- பலவீமானவைகளைப பலப்படுத்த வேண்டும்
- நசல் கொண்டவைகளைக் குணமாக்க வேண்டும்
- எலும்பு முறிந்தவைகளை காயங்கட்ட வேண்டும்
- துரத்துண்டவைகளை திருப்பிக் கொண்டு வரவேண்டும்
- காணாமற்போனவைகளை தேடா வேண்டும்
ஆனால் இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் ஆடுகளிடம் எப்படி நடந்து கொண்டார்கள்?
பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டார்கள்.
அந்த ஆடுகளை இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் அப்படி ஆண்டதினால் என்னவாயிற்று?
Eze 34:5 மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
Eze 34:6 என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
- இன்றைக்கு இருக்கக்கூடிய அநேக போதகர்கள் தங்கள் தேவனுடைய மந்தையாகிய விசுவாசிகளிடம் இப்படித்தான் நடந்து கொள்ளுகிறார்கள்.
தங்களையே மேய்க்கிற இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கு தேவன் என்ன செய்ய போகிறார்?
Eze 34:10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
- தேவன் தம்முடைய ஆடுகளின்மீது அதிக கவனமுடையவராய் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- தேவனுடைய மந்தையை சரியாக மேய்க்காத மேய்ப்பர்களுக்கு நிச்சயமாக அதற்கான நியாயத்தீர்ப்பு இருக்கிறது.
தேவன் அந்த ஆடுகளுக்கு அவரே மேய்ப்பாராக இருந்து மேய்ப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
Eze 34:14 அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
Eze 34:15 என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Eze 34:16 நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
Eze 34:31 என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
யார் அந்த மேய்ப்பானாக இருக்கிறார்?
Eze 34:23 அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.
Eze 34:24 கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மேய்ப்பராக இருக்கிறார்.
Joh 10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
Joh 10:15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
Joh 10:16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
- நீங்கள் கிறிஸ்துவின் ஆடுகளாய் இருந்தால் அவருடைய வார்த்தைகளுக்க மாத்திரமே செவிகொடுப்பீர்கள்.