நேபாத்தின் குமாரன் யெரொபெயாம்
(1 இராஜாக்கள் 12:26-33)
ஒரு ராஜா செய்த செயல் பல நுற்றாண்டுகளுக்கு மிகவும் பெரிய பாதிப்பதை ஏற்படுத்தி இருந்தது.
அந்த ராஜா தான் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம்.
கிறிஸ்து வருவதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலைக் கர்த்தர் இரண்டாக பிரித்தார்.
இரண்டாவது ராஜ்யத்தின் முதல் ராஜாவாக தேவன் நேபாத்தின் குமாரனான பெரொபெயாமை தெரிந்து கொண்டார்.
யோசேப்பின் கோத்திரமான எப்பிராயீமின் மீது ஆளும்படி சாலமோன் இவரை தெரிந்து கொண்டார்.
1இராஜாக்கள் 11:28 யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
இஸ்ரவேலின் ராணுவத்தில் யெரொபெயாம் பராக்கிரமசாலியாகவும் காரிய சமர்த்தானாகவும் இருந்தார்.
இஸ்ரவேலின் வட ராஜ்யமாகிய பத்து கோத்திரத்தை யெரொபெயாமிற்கு தருவதாக தேவன் நேரடியாக சொல்லியிருந்தார்.
1இராஜாக்கள் 11:29 அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,
1இராஜாக்கள் 11:30 அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,
1இராஜாக்கள் 11:31 யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
1இராஜாக்கள் 11:32 ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
- யெரொபெயாமை இஸ்ரவேலை இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
- அவர் உடனடியாக இஸ்ரவேலை கெடுத்துப் போட்டார்.
- இவர் செய்த மோசமான செயலால் புற்றுநோய் போல முடிவில் இஸ்ரவேலை அழித்துப் போட்டது.
அவருடைய நாட்களுக்கு பிறகு வந்த எல்லா இஸ்ரவேலின் ராஜாக்களும் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வழியில் நடந்தார்கள்.
1இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
- பல வருஷங்களுக்கு பிறகு வந்த இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யெரொபெயாமின் அடிச்சுவடுகளை பின்பற்றினார்.
- யெரொபெயமின் ஆராதனை முறைமைகளை மாற்றி இஸ்ரவேலை கெடுத்து போட்டார்.
- யெரொபெயாமின் ஜீவிய நாட்கள் மற்றும் ஆளுகையிலே அநேக பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும்.
தேவனை ஆராதிப்பதை யெரொபெயாம் எப்படி மாற்றிப் போட்டார் என்பதை நாம் கவனிப்போம்.
1இராஜாக்கள் 12:26 யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.
1இராஜாக்கள் 12:27 இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
1இராஜாக்கள் 12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
1இராஜாக்கள் 12:29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
1இராஜாக்கள் 12:30 இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.
ஜனங்களை யெரொபெயாம் எப்படி வஞ்சித்தார் என்பதை கவனியுங்கள்.
- முதலில் யெரொபெயாம் ஆராதனை செய்தவர் என்பதை நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
- இவர் மார்க்க சம்பந்தமான காரியங்களில் சம்மந்தம் உடையவராய் இருந்தார்.
- அநேக ஜனங்களுடைய கண்களுக்கு மார்க்க சம்மந்தமான காரியம் மிக பெரிய காரியமாய் இருந்தது.
- மார்க்க சம்பந்தமான நடவடிக்கையில் முக்கிய வழிநடத்துனர் தொடர்ந்து தவறாய் இருக்க வாய்ப்பு உள்ளது.
கர்த்தர் மீண்டும் நேரடியாக யெரொபெயாமிடம் பேசினார்.
1இராஜாக்கள் 14:9 உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.
- தேவன் என்று அழைக்கப்படுவது பற்றி ஒரு காரியமல்ல. ஆனால் நாம் தேவனை தொடர்ந்து சரியாக ஆராதித்து வருகிறோமா என்பது தான் இங்கே கேள்வியாக இருக்கிறது.
- யெரொபெயாம் அந்நிய தேவர்களை வணங்கி இஸ்ரவேலை தேவன் நிர்மூலமாக்கும்படியான பலனை அதற்கு கொடுத்தார்.
நாம் மனதிலே வைத்துக் கொள்ள வேண்டும் தேவன் மனிதர்களுடைய கட்டளைகளை ஏற்றக் கொள்ளுவதில்லை என்று இயேசு கிறிஸ்து கட்டளையிட்டுள்ளார்.
மாற்கு 7:7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
- யெரொபெயாமின் ஆராதனை ஜனங்களிடம் செயல்பட்டது.
- அநேகர் புதிய காரியங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அது சரியா அல்லது தவறா என்பதை பற்றி எல்லாம் சிந்தித்து பார்ப்பது இல்லை.
- இஸ்ரவேல் ஜனங்கள் யெரொபெயாமின் அறிமுகப்படுத்தின ஆராதனையை முழு மனத்தோடு ஏற்றுக் கொண்டார்கள் அது தேவனுடையதா என்பதை அவர்கள் சிந்தித்திக் கூட பார்க்கவில்லை.
- அநேகர் மாற்றம் வேண்டும் என்று விரும்பிகிறார்கள் குறிப்பாக தேவனுடைய வார்தையில் மாற்றம் வேண்டும என்று எதிர்பார்க்கிறார்கள், தேவனுடைய வார்த்தையில் மாற்றம் கொண்டு வரும் போது அது தேவனுடைய வார்த்தையும் அல்ல அது சத்தியம் அல்ல.
இந்த மாற்றம் அல்லது புதிய என்ற வார்த்தையானது இன்றைக்கு பெரும்பாலும் ஒவ்வொரும் அதிக விரும்பக்கூடியதாக இருக்கிறது.
அப்போஸ்தலர் 17:21 அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
ஆனால் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தெளிவான கட்டளையைக் கொடுத்துள்ளார்.
யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
- நாம் தேவனை ஆராதிக்கிற காரியங்களில் நாம் புதிதாக எதுவொன்றையும் தேட வேண்டிய அவசியம் இல்லை.
- புதிய ஏற்பாட்டில் உள்ளவைகளே நமக்கு புதியதாய் உள்ளது.
- மார்க்கசம்பந்தமான மாற்றங்களை கொடுக்க தேவன் ஒருவரே அதிகாரம் உடையவர் அவர் அதை செய்து விட்டார்.
- தேவனுடைய மார்க்க சம்பந்தமான காரியங்களில் மனிதன் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் இல்லை.
நாம் அறிவை தேட வேண்டும் அந்த அறிவு வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரவேண்டும்.
மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
யெரொபெயாமின் ஆராதனை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
1இராஜாக்கள் 11:32 ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
தம்முடைய ஜனங்கள் தம்மை ஆராதனை செய்யும்படி கூடி வர தேவன் தெரிந்து கொண்ட ஸ்தலம் எருசலேம்.
யெரொபெயாம் காரிய சமர்த்தனானவராய் இருந்தார் ஆனால் தேவனை பிரியப்படுத்த இன்னும் அதிகமான நேர்மை அவசியமாய் இருந்தது.
1இராஜாக்கள் 11:28 யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.
ஆராதனை செய்யும்படி அவர் தாண் மற்றம் பெத்தேல் ஆகிய இரண்டு இடங்களை தெரிந்து கொண்டார்.
1இராஜாக்கள் 12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
1இராஜாக்கள் 12:29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
- இஸ்ரவேலின் வடக்கு எல்லையில் தாண் அமைந்துள்ளது தெற்கு எல்லையில் பெத்தேல் உள்ளது.
- ஜனங்கள் நேரத்தையும் ஆற்றலையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் அது அவர்களுக்கு வசதியாக இருந்தது.
- தெற்கு பகுதியில் எருசலேமிற்கு வடக்கு பகுதியில் தாண் பெத்தேல் அமைந்து இருந்தது.
- சுபாவமாக அவர்கள் எருசலேமில் ஆராதனைக்கு சென்று அக்கப்பட்டு விடுவார்கள் என்று யெரொபெயாம் நினைத்தார்.
- ஆராதனைக்கான காரியத்தில் தேவன் யூதர்களுக்கு தெரிந்து கொள்ளுதலை கொடுக்கவில்லை அவர்கள் ஆராதனை செய்வதற்கு எருசலேமிற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
- ஆனால் யெரொபெயாம் ஜனங்களுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார் ஒன்று தாண் அல்லது பெத்தேல் அது தான் அவர்களுக்கு வசதியாக இருந்தது.
சபை கூடி வருகிற இடத்திற்கு தொடர்பாக இன்றைக்கு அநேக மக்கள் பல தீர்மானங்களை எடுக்கிறார்கள் ஆராதனை தங்களுக்கு பிடித்ததை மாத்திரம் செய்ய வேண்டும் எண்ணம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
உண்மையாய் தொழுது கொள்ளுகிறவர்கள் தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் தொழுது கொள்ளுகிறார்கள்.
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய நாம் எவ்வளவு தூரம் செல்லுகிறோம் என்பது ஒரு காரியமே அல்ல.
அப்போஸ்தலர் 8:27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து;
- உண்மையுள்ள பரிசுத்தவான்களோடு நாம் கூடிவருவதற்கு எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் விருப்பத்துடன் பயணிக்கலாம்.
- நமக்கு வசதியாக இருக்கிறதா என்று நாம் நினைத்து ஒரு போதும் சுயநலமாக பிதாவை சேவிக்க கூடாது.
- கர்த்தரை பிரியப்படுத்துவது எது? அது தான் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.
இஸ்ரவேலர்கள் எல்லாரும் யெரொபெயாமின் ஆராதனையை விரும்பினார்கள்.
நாம் தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கும் போது அது சாத்தானுடைய தெரிந்து கொள்ளுதலாய் இருக்கிறது.
மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
யெரொபெயாம் புதிய ஆராதனையை ஸ்தாபித்த பிறகு ஜனங்கள் எருசலேமை விட்டு தூரத்தில் உள்ள இடத்திற்கு போவார்கள்.
1இராஜாக்கள் 12:30 இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.
- எந்த ஒரு போதனையோ அல்லது மார்க்க சம்பந்தமான நடவடிக்கைகள் பிரபலமாய் இருக்கிறதினால் அது ஒரு போதும் சரியானதாய் இருந்து விடாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
யெரொபெயாம் ஆராதனை செய்வதற்கு அநேகரை ஆசாரியராக நியமித்தார்.
1இராஜாக்கள் 13:33 இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.
- யெரொபெயாமின் மத சம்மந்தமான வழிநடத்துனர்களுக்கு எந்த ஒரு தகுதியும் அவசியம் இல்லை.
- யார் ஆசாரியனாக விரும்புகிறாரோ அவர்கள் எல்லோரையும் ஏற்றுக் கொண்டார்கள்.
லேவி கோத்திரத்திலிருந்து வருபவர் ஆசாரியனாய் இருப்பார் என்று தேவன் இஸ்ரவேலர்களிடம் சொல்லியிருந்தார் குறிப்பாக ஆரோனின் வம்சத்தில் உள்ளவர்கள்.
யாத்திராகமம் 28:1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.
யெரொபெயாம் தனது சுய இஷ்டமான ஆராதனைக்கு ஜனங்களை சம்மதிக்க பண்ண என்ன சொன்னார்?
1இராஜாக்கள் 12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
- நாம் மெய்யாய் கர்த்தரை பிரியப்படுத்த விரும்பினால் தூரம் ஒரு பிரச்சனை இல்லை.
- தேவனிடத்தில் அன்பு செலுத்தி அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு தூரம் என்பது ஒன்றுமில்லை.
நாம் பாடலை வழிநடத்த இல்லது ஜெபிக்க கூட பெண்களை பயன்படுத்துகிறது இல்லை என்று அநேகர் சொல்லுகிறார்கள்.
1தீமோத்தேயு 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1தீமோத்தேயு 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
1தீமோத்தேயு 3:3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
1தீமோத்தேயு 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
1தீமோத்தேயு 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
1தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
1தீமோத்தேயு 3:7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
- உலகத்திற்கு தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிற திட்டம் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- சபையின் வழிநடத்துதல் தொடர்பாக உள்ள கர்த்தருடைய போதனைகளை நாம் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- நாம் மதுபானத்தை பற்றி பிரசங்கிப்பதால் நாம் மிகவும் குறுகிய மனம் உடையவர்கள் என்று உலகம் நம்மை குற்றப்படுத்துகிறது.
வேதத்திற்கு எதிராக விவாகரத்து செய்தவர்களோடு நாம் ஐக்கியம் கொள்ளாதிருப்பதினால் நாம் மிகவும் கடுமையானவர்கள் என்று நம்மை சொல்லுகிறார்கள்.
மத்தேயு 19:9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
- இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தோராயாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நாம் படிக்கிறோம், ஆனால் அதற்கு நாம் ஒத்துப் போக வேண்டாம் என்கிறார்கள்
- மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடிய யெரொபெயாமின் ஆராதனை பழைய ஏற்பாட்டு ஆராதனைக்கு மிகவும் நெருக்கமாக தான் இருந்தது.
- சாத்தான் பொய்யன் பிதா அவன் மிக பெரிய வஞ்சகன்.
- சத்தியத்தை போலவே பொய்யை உண்டாக்கக்கூடியவன்.
- அவனுடைய தவறான ஆராதனை பழைய ஏற்பாட்டின் சரியான ஆராதனையை போலவே காணப்படும்.
- பிரிவினைக் கூட்டத்தார் வெளியே இயேசுவின் சபை போலவே காணப்படுவார்கள்.
- தேவன் இஸ்ரவேலர்கள் எங்கே ஆராதனை செய்ய வேண்டும் யார் ஆசாரியர்களை இருக்க வேண்டும் யார் பலி செலுத்த வேண்டும் என்று பிரமாணங்களையும் கட்டளைகளையும் கொடுத்து இருந்தார்.
- மேலும் விசேஷத்த நாட்களையும் விசேஷித்த பண்டிகைகளையும் தேவன் அவர்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்.
யெரொபெயாம் இந்த ஆராதனை தொடர்புடைய எல்லாவற்றிலேயும் உட்புகுந்தார்.
புதிய ஆசாரியத்துவத்தை புதிய பலிபீடங்களில் பலி செலுத்த ஆராதனை செய்ய புதிய இடத்தை விசேஷித்த நாட்களை மற்றும் விசேஷித்த பண்டிகைகளை அவர் ஸ்தாபித்தார்.
1இராஜாக்கள் 12:31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
1இராஜாக்கள் 12:32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
1இராஜாக்கள் 12:33 தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.
தன்னுடைய புதிய ஆராதனை எல்லாம் சரியாக இருக்கிறது என்று யெரொபெயாம் எப்படி ஜனங்களை சம்மதிக்க பண்ணினார்.
தேவன் 7 ம் மாதம் 15ம் தேதிதான் கூடாரப்பண்டிகையை இஸ்ரவேலர்கள் அநுசரிக்கும்படி கட்டளையிட்டு இருந்தார்
எண்ணாகமம் 29:1 ஏழாம் மாதம் முதல் தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
லேவியராகமம் 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
யெரொபெயாம் 8ம் மாதம் 15ம் தேதியை பண்டிகையாக அநுசரிக்கும்படி கட்டளையிட்டார்.
1இராஜாக்கள் 12:32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
- ஒரு மாதம் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறது? அது துள்ளியமாக இல்லை தான் ஆனால் பூரணமாக உள்ளது அது போதுமான நெருக்கமாக உள்ளது.
- நமக்கு தெரியும் அது நெருக்கமாக இல்லை என்பது ஏனென்றால் நாம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சர்வ வல்லமையுள்ள கர்த்தரை நாம் சேவிக்கிறோம்.
- சத்தியத்திற்கு நெருக்கமாக இருகக்க் கூடிய ஆராதனையை நாம் செய்யும்படி விரும்புகிறது இல்லை நமக்கு சத்தியம் மாத்திரம் வேண்டும், தேவனிடத்திலிருந்து வந்தது எதுவோ அது மாத்திரம் தான் நமக்கு வேண்டும் இரட்சிப்புக்கு நெருக்கமானது நித்திய ஜீவனுக்கு நெருக்கமானது போன்ற சத்தியங்கள் நமக்கு போதுமானது இல்லை.
யெரொபெயாமின் ஆராதனை ஏன் தவறாய் இருந்தது?
முதலாவது இதை தேவன் அதிகாரமாக கொடுக்கவில்லை.
உபாகமம் 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
- யெரொபெயாம் தன்னுடைய சொந்த ஆராதனைக்காக தேவனுடைய ஆராதனையை மாற்றி போட்டார்.
- யெரொபெயாமிற்கு தவறான குறிக்கோள் இருந்தது
- யெரொபெயாம் கர்த்தரை பிரியப்படுத்துவதை விட தன்னுடைய சொந்த வல்லமையை குறித்து மிகவும் கவனமாக இருந்தார்.
- இவர் தன்னுடைய ஆராதனையை நிறுவிய பிறகு இஸ்ரவேலர்கள் ஆராதனை செய்ய எருசலேமிற்கு இஸ்ரவேலர்கள் போகவில்லை.
இஸ்ரவேலர்கள் எருசலேமிற்கு சென்றால் அவர்கள் திரும்ப ரெகொபெயாமிடம் சென்று விடுவார்கள் என்றும் தம்மை கொன்று போடுவார்கள் என்றும் யெரொபெயம் பயந்தார்.
1இராஜாக்கள் 12:26 யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.
1இராஜாக்கள் 12:27 இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
- இப்படியாக யெரொபெயாம் தன்னுடைய சொந்த பாதுகாப்பிற்காக இந்த ஆராதனையை ஸ்தாபித்தார்.
இரண்டாவதாக அவர் தவறான வஸ்துவாகிய பொன் கன்றுக்குட்டியை வணங்கினார்கள்.
1இராஜாக்கள் 12:28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
மூன்றாவதாக அவர்கள் வித்தியாசமான ஆசாரியத்துவத்தையும் வித்தியாசமான நாட்களையும் வித்தியாசமான பலிபீடத்தையும் பயன்படுத்தினார்.
1இராஜாக்கள் 12:31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
1இராஜாக்கள் 12:32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
1இராஜாக்கள் 12:33 தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.
- இந்த அதிகாரத்தின் மூலக்காரணமே தவறாய் தான் இருக்கிறது.
அவருடைய புதிய ஆராதனையின் இந்த ஆலோசனையை எல்லாம் யெரொபெயம் எங்கிருந்து பெற்றுக் கொண்டார்?
யெரொபெயாம் இஸ்ரவேலை பாவம் செய்ய பண்ணினார் எனவே தேவன் தம்முடைய ஜனங்களை மன்னியாமல் போனார்.
1இராஜாக்கள் 15:34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
- இன்றைக்கு நமக்கு இது சம்பவிக்கிறது என்பது மிகவும் துக்கமாய் இருக்கிறது.
- சில ஜனங்கள் புதிய ஏற்பாட்டின் துய்மையான ஆராதனையில் திருப்தி இல்லாமல் சபையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்கிற சிலரால் இவைகள் சம்பவிக்கிறது.
- ஆராதனையை மாற்றுகிறார்கள் சபையின் நிர்வாகத்தை மாற்றுகிறார்கள் எந்த வகையான மாற்றமாக இருந்தாலும் அதை செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட நடவடிக்கை சபையை அழித்து விடுகிறது கொஞ்சம் புளித்த மா பிசைந்த மா அனைத்தையும் புளிப்பாக்கும்.
கலாத்தியர் 5:9 புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
- இஸ்ரவேலின் ஆராதனையை மாற்றியதினாலே யெரொபெயாமின் ஆத்துமா விலையேறப் பெற்றதாக ஆகி விட்டாதா?
- அவர் ராஜாவாக 22 ஆண்டுகள் இருந்தார் ஆனால் அவருடைய நித்தியத்துவம் இருளில் உள்ளது.
- நாம் நமது இருதயத்தை திடப்படுத்திக் கொண்டு மற்றவர் என்ன செய்கிறார்களோ அல்லது மற்றவர் என்ன சொல்லுகிறார்களோ அதைப் பொருட்ப்படுத்தாமல் கர்த்தர் என்ன சொன்னாரோ அதை செய்யும்படி ஒன்று சேர்ந்து அவரை பின்பற்றுவோம்.
- நாம் தேவனை எப்போதும் பின்பற்றும்படி உற்சாகமாக இருக்க வேண்டும் அப்போது தான் அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.