குடும்ப பிரச்சனைகள்
குடும்ப பிரச்சனைகளின் நிமித்தம் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா?
இன்றைக்கு உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டு தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
நமக்கு என்ன பிரச்சனைகளுக்காக தற்கொலை எண்ணங்கள் வருகிறதோ அதை வசனத்தைக் கொண்டு அந்த பிரச்சனைகளை எப்படி மேற்கொள்ளுவது என்பதைக் கற்றுக் கொண்டோம்.
இன்றைக்கு குடும்ப வாழ்க்கையில் இருக்கக்கூடிய கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்குள் இருக்கக் கூடிய பிரச்சனையின் நிமித்தமாக தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
இன்றைக்கு அற்பான காரணங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.
புருஷன் தொலைக்காட்சி சேனலை மாற்றி விட்டார் என்பதற்காக ஒரு மனைவி கோபத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள்.
இது போல காரணங்களுக்காக கூட நிறைய தற்கொலைகள் நடக்கிறது.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏன் பிரச்சனைகள் ஏற்படுக்கிறது?
1)கணவன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்தாத போது.
2)மனைவி தன் கணவனுக்கு எல்லா காரியத்திலும் கீழ்ப்படியாத போது.
3)கணவனோ அல்லது மனைவியோ மற்றவர்களுக்கு முன்பாக தறைகுறைவாக நடத்துவது.
4)கணவன் தன் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத்தை சம்பாதிக்காத போது.
5)கணவனோ அல்லது மனைவியோ தங்களுடைய விவாக கடமையை செய்யாத போது.
பண ஆசை உள்ள கணவனையோ அல்லது மனைவியையோ நீங்கள் ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. அவர்களுடைய பிரச்சனைகள் ஒரு போதும் ஓயாது.
ஒரு விசயத்தை எப்போதும் நம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பம் கிறிஸ்துவுக்குள் சரியாக கட்டப்பட்டால் தான் அவர்கள் சபை கூடி வருவது பிரயோஜனமாய் இருக்கும்.
கணவன் தன் மனைவியினிடத்தில் மெய்யான அன்பு செலுத்துவான் என்றால் அங்கே பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும்.
கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்தது போல புருஷன் தன் மனைவியினிடத்தில் அன்பு செலுத்த வேண்டும்.
எபேசியர் 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
நிறைய மனைவிகள் தன் புருஷன் தன்னிடத்தில் மாத்திரம் அன்பு செலுத்தவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.
மனைவி தன் கணவனுக்கு எல்லா காரியத்திலும் கீழ்ப்படிந்தால் அங்கே பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும்.
எபேசியர் 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
மனைவி எப்படி கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்?
சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல மனைவி புருஷனுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிய வேண்டும்.
எபேசியர் 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
புருஷனும் மனைவியும் வேசித்தனம் இராதபடிக்கு தங்களுடைய விவாக கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
1கொரிந்தியர் 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
1கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.
1கொரிந்தியர் 7:5 ,,,,, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
புருஷன் தன் சொந்த குடும்பத்தை விசாரித்து நன்றாய் நடத்துகிறவனுமாயும் இருக்க வேண்டும்.
1தீமோத்தேயு 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
புருஷன் தன் சொந்த குடும்பத்தை நடத்த தெரியவில்லை என்றால் தேவனுடைய சபையைப் பற்றிய அக்கரை அவனுக்கு ஒருபோதும் வராது.
1தீமோத்தேயு 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
நிறைய புருஷர்கள் சம்பாதித்து வந்து கொடுத்தால் போதும் அதோடு நம்முடைய கடமை முடிந்து விட்டது என்று எண்ணுகிறார்கள்.
நிறைய மனைவிகள் புருஷன் கொடுக்கக்கூடிய வருமானத்தை கொண்டு சமைத்து போட்டால் போதும் கடமை முடிந்து விட்டது என்று எண்ணுகிறார்கள்.
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொல்ல வேண்டும்.
1தெசலோனிக்கேயர் 2:12 தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
தாய் தன் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.
நீதிமொழிகள் 6:20 என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
தீமோத்தேயு விசுவாசத்தில் வளருவதற்கு காரணமாய் இருந்தவர்கள் அவருடைய தாயும் பாட்டியும் தான்.
2தீமோத்தேயு 1:5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
2தீமோத்தேயு 3:14 நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்.
2தீமோத்தேயு 3:15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
புருஷன் மற்றவர்களுக்கு முன்பாக தன் மனைவியை கனத்தோடு நடத்த வேண்டும்.
1பேதுரு 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை எழும்பும் போது அதை விட்டு விட வேண்டும்.
நீதிமொழிகள் 17:14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
கணவனோ அல்லது மனைவியோ தவறு செய்து இருப்பார்கள் என்றால் கிறிஸ்து மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்ள வேண்டும்.
கொலோசெயர் 3:13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோசெயர் 3:14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கணவன் மனைவிக்குள்ளாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ள முடியும்.
கணவன் தன் மனைவியை அடிப்பதோ அல்லது மனைவி தன் கணவனை அடிப்பதோ ஒரு போதும் செய்யக் கூடாது.
புருஷன் தன்னுடைய சாயலின் படி இருக்கிற மனைவியை அடித்தால் புருஷன் தன் சரீரத்தை தானே அடிப்பதற்கு சமம்.
புருஷன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு இருப்பதினால் மனைவி புருஷனை அடித்தால் அவர்கள் யாரை அடிப்பதற்கு சமம்?
அற்பான காரியங்களுக்காக இருவரும் சண்டை போட்டு தற்கொலை செய்து கொண்டு உங்கள் ஆத்துமாக்களையும் அழித்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்காதீர்கள்.
தற்கொலை செய்து கொண்டால் மீளமுடியாத துன்பத்திற்குள் போய் நித்திய ஜீவனை இழந்து போய் விடுவீர்கள்.
ஆகையால் தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தோடு கர்த்தரை சேவித்து நித்திய ஜீவனை பெறுவதற்கு அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து உபத்திரவங்களை சகித்து சந்தோஷமாய் வாழுங்கள்.