இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரா?
இன்றைக்கு ஒரு பிரிவினை மதத்தினர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று அநேக வீடியோ ஆடியோ கேசட்டுகளை வெளியிட்டு கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை ஒழித்து போட முயற்சி செய்கிறார்கள்.
ஏன் கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று போதிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
கிறிஸ்தவர்களின் முழு விசுவாசமும் நம்பிக்கையும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்து இருக்கிறார்கள். அதனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை பொய்யாக்கிவிட்டால் அவர்களுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையும் அழித்து போட முடியும் என்று நினைக்கிறார்கள்.
கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் என்ன நடந்து இருக்கும்?
1Co 15:13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
1Co 15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
1Co 15:16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.
1Co 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
1Co 15:18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.
- கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் சுவிசேஷம் பிரயோஜனம் இல்லாமல் போய் இருக்கும்.
- நம்முடைய விசுவாசமும் பிரயோஜனமில்லாமல் போய் இருக்கும்.
- நாம் இன்னும் நம்முடைய பாவங்களில் இருந்து இருப்போம்
- கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்த எல்லா பரிசுத்தவான்களும் கெட்டிருப்பார்கள்.
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அநேக சாட்சிகள் நம்முடைய வேதாகமத்தில் இருக்கிறது.
Rom 1:4 இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர்,
Rom 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு பரலோகத்தின் தேவ தூதர்கள் சாட்சி.
Mat 28:5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
Mat 28:6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
Mar 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
Luk 24:6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
இயேசு கிறிஸ்துவின் கல்லறையை காவல் காத்துக் கொண்டு இருந்த சேவகர்கள் சாட்சி.
Mat 28:4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.
Mat 28:11 அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மகதலேனா மரியாளும்மற்ற மரியாளும் சாட்சி.
Mar 16:9 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
Mat 28:1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
Mat 28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அவருடைய பதினோரு அப்போஸ்தலர்களும் சாட்சி.
Mat 28:16 பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
Mat 28:17 அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
Mar 16:14 அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
Joh 21:14 இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.
Act 2:32 இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
Act 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.
- இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து நாற்பது நாளும் அப்போஸ்தலர்களுக்கு தரிசனமானர்.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு இன்னும் நிறைய திரளான சாட்சிகள் இருக்கிறார்கள்.
1Co 15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
1Co 15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
1Co 15:5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
1Co 15:6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
1Co 15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கு சாட்சியாக இருக்கிறார்.
1Co 15:8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.
இப்படிப்பட்ட கள்ள உபதேசங்கள் வரும் போது உங்கள் விசுவாசத்தை விட்டு விலகி போய் விடாதீர்கள். அப்படிப்பட்ட நபர்களுக்கு தேவனுடைய வேத வாக்கியங்களைக் கொண்டே அவர்களுடைய வாயை அடைத்து விடுங்கள்.
Heb 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
Heb 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
Heb 12:3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.