புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை தொழுது (ஆராதனை) கொண்டார்களா

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவை தொழுது (ஆராதனை) கொண்டார்களா?

ஆராதனை (தொழுது கொள்ளுதல்) என்ன என்பதைக்குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்.

புதிய ஏற்பாட்டில் ஆராதனை என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை கிரேக்க வார்த்தைகளோடு நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

வேத வாக்கியங்களுக்கு நாம் செவி கொடுத்து கீழ்ப்படியும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம்.

ஆராதனை என்ற வார்த்தைக்கு பிரிவினைக் கூட்டங்கள் என்ன அர்த்தங்களை வேண்டுமானாலும்  கொடுக்கட்டும். ஆனால் தேவன் நமக்கு கொடுக்கும் வார்த்தைகளே சத்தியங்களாகவும் உண்மையுள்ளவைகளாகவும் இருக்கிறது.

பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும்.இங்கே பிதாவை தொழுது கொள்ளுதல் என்ற வார்த்தைக்கு கிரேக்க எண் தான் 4352.

Joh 4:24 (KJV+)  God2316 is a Spirit:4151 and2532 they that worship4352 him846 must1163 worship4352 him in1722 spirit4151 and2532 in truth.225

Joh 4:24 (Tamil OV) தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

G4352

προσκυνέω

proskuneō

pros-koo-neh’-o

From G4314 and probably a derivative of G2965 (meaning to kiss, to fawn or crouch to – (do reverence to, adore) worship.

ஆராதனை (தொழுதுகொள்ளுதல்) என்றால் ஒன்றுக்கு ஏதுவாக முத்தமிடுவது, மிகத்தாழ்மையாக குனிவது. மிகஉயர்வாக மதிப்பது.

பிதாவை தொழுது கொள்ள வேண்டும் என்ற வார்த்தைக்கு என்ன கிரேக்க எண் (4352) பயன்படுத்தப்பட்டு இருக்கிறதோ அதே எண் தான் இயேசு கிறிஸ்துவை பணிந்து (தொழுது கொள்ளுதல் worship) கொள்ளுதலுக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கீழே உள்ள எல்லா வசனங்களுக்கும் இதே கிரேக்க வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது

இயேசு கிறிஸ்து பிறந்தபோது சாஸ்திரிகள் அவரை தொழுது கொண்டார்கள்.

Mat 2:11 KJV+  And2532 when they were come2064 into1519 the3588 house,3614 they saw1492 the3588 young child3813 with3326 Mary3137 his846 mother,3384 and2532 fell down,4098 and worshiped4352 him:846 and2532 when they had opened455 their848 treasures,2344 they presented4374 unto him846 gifts;1435 gold,5557 and2532 frankincense,3030 and2532 myrrh.4666

Mat 2:11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு,

இயேசு கிறிஸ்து பிறந்தபோது தேவ தூதர்கள்யாவரும் அவரை தொழுது கொண்டார்கள்.

Heb 1:6 KJV+  And1161 again,3825 when3752 he bringeth in1521 the3588 first begotten4416 into1519 the3588 world,3625 he saith,3004 And2532 let all3956 the angels32 of God2316 worship4352 him.846

Heb 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.

இயேசு கிறிஸ்துவை குஷ்டரோகி தொழுது கொண்டான்.

Mat 8:2 KJV+  And,2532 behold,2400 there came2064 a leper3015 and worshiped4352 him,846 saying,3004 Lord,2962 if1437 thou wilt,2309 thou canst1410 make me clean.2511, 3165

Mat 8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

இயேசு கிறிஸ்துவை படை தலைவன் தொழுது கொண்டான்.

Mat 9:18 KJV+  While he846 spake2980 these things5023 unto them,846 behold,2400 there came2064 a certain1520 ruler,758 and2532 worshiped4352 him,846 saying,3004 My3450 daughter2364 is even now dead:5053, 737 but235 come2064 and2532 lay2007 thy4675 hand5495 upon1909 her,846 and2532 she shall live.2198

Mat 9:18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து

இயேசு கிறிஸ்துவை அவருடைய சீஷர்கள் தொழுது கொண்டார்கள்.

Mat 14:33 KJV+  Then1161 they3588 that were in1722 the3588 ship4143 came2064 and worshiped4352 him,846 saying,3004 Of a truth230 thou art1488 the Son5207 of God.2316

Mat 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

Mat 28:17 KJV+  And2532 when they saw1492 him,846 they worshiped4352 him:846 but1161 some3588 doubted.1365

Mat 28:17 அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

இயேசு கிறிஸ்துவை கானானிய ஸ்திரீ அவரை தொழுது கொண்டாள்.

Mat 15:25 KJV+  Then1161 came2064 she3588 and worshiped4352 him,846 saying,3004 Lord,2962 help997 me.3427

Mat 15:25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.

இயேசு கிறிஸ்துவை செபெதேயுவின் தாய் தொழுது கொண்டாள்.

Mat 20:20 KJV+  Then5119 came4334 to him846 the3588 mother3384 of Zebedee’s2199 children5207 with3326 her848 sons,5207 worshiping4352 him, and2532 desiring154 a certain thing5100 of3844 him.846

Mat 20:20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: 

இயேசு கிறிஸ்துவினால் பார்வையடைந்த குருடன் தொழுது கொண்டான்.

Joh 9:38 KJV+  And1161 he3588 said,5346 Lord,2962 I believe.4100 And2532 he worshiped4352 him.846

Joh 9:38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.

இயேசு கிறிஸ்துவை பணிந்து கொண்டார்கள் அல்லது தொழுது கொண்டார்கள்(worship) என்று வசனம் இங்கே  சொல்லும் போது எப்படி ஆராதனை செய்தார்கள்?

  • அவரை துதித்து பாடல் பாடினார்களா?
  • அவரிடத்தில் ஜெபித்தார்களா?
  • அவருக்கு காணிக்கை செலுத்தினார்களா?

வேறு ஏதாவது காரியங்களை செய்தார்களா?

அவர்கள் இயேசு கிறிஸ்துவை இப்படிதான் தொழுது கொண்டார்கள்.

  • அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டார்கள்.
  • அவரை பாதங்களை தழுவிகொண்டார்கள்.
  • சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள்.
  • இவர்கள் எல்லாரும் இயேசு கிறிஸ்துவை பிதாவினிடத்தில் இருந்து வந்தவர் என்றும்  தேவன்(சிருஷ்டிகர்) என்றும் ஏற்றுக் கொண்டு பணிந்து  (தொழுது)கொண்டார்கள்.
  • இந்த தொழுது (பணிந்து) கொள்ளுதலை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டார்.
  • இது எல்லாம் ஒருவகையான தொழுது கொள்ளுதலாக இருக்கிறது.

ஆனால் கீழே உள்ள இரண்டு உதாரணங்களை கவனியுங்கள்.

இயேசு கிறிஸ்துவை இவர்கள் எப்படி தொழுது கொண்டார்கள்?

இயேசு கிறிஸ்துவை இங்கே பிசாசு பிடித்தவன் தொழுது கொண்ட போது எப்படி தொழுது(பணிந்து) கொண்டான்?(இதுவும் தொழுது கொள்ளுதல் தான்).

இயேசு கிறிஸ்துவை பிசாசு பிடித்தவன் தொழுது கொண்டான்.

Mar 5:6 KJV+  But1161 when he saw1492 Jesus2424 afar off,575, 3113 he ran5143 and2532 worshiped4352 him,846

Mar 5:6 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு:

இயேசு கிறிஸ்துவை ரோமபோர் சேவகர்கள் தொழுது(பணிந்து) கொண்ட போது எப்படி தொழுது கொண்டார்கள்? (இதுவும் தொழுது கொள்ளுதல் தான்).

இயேசு கிறிஸ்துவை ரோமபோர் சேவகர்கள் அவரை பரியாசம் பண்ணி தொழுது கொண்டார்கள்.

Mar 15:19 KJV+  And2532 they smote5180 him846 on the3588 head2776 with a reed,2563 and2532 did spit upon1716 him,846 and2532 bowing5087 their knees1119 worshiped4352 him.846

Mar 15:19 அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.

  • இந்த தொழுது (பணிந்து) கொள்ளுதலை இயேசு கிறிஸ்து ஏற்றுக் கொண்டு இருப்பாரா?

இன்றைக்கு இயேசுகிறிஸ்துவை ஒருவேளை நான் பார்க்க நேரிட்டால் அவருடைய பாதங்களில் நீஷ்டாங்கமாய் விழுந்து தான் அவரை தொழுது (பணிந்து) கொள்ளுவேன். ஏனென்றால் அவர் என் (நம்முடைய)சிருஷ்டிகராக (தேவன்) என் (நம்முடைய) எஜமானாக இருக்கிறார்.

Rev 1:17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

இயேசுகிறிஸ்துவை தொழுது கொள்ளுதல் என்ற இந்த சத்தியங்களை மறுக்கிறவர்கள் இயேசு கிறிஸ்துவை இப்படி தொழுது கொள்ளாமல் வேறு எப்படி தொழுதுகொள்ள முடியும் என்பதை வேத வாக்கியத்தோடு சொல்லுங்கள்.

தேவனுக்கு சித்தமானால் தொடர்ந்து ஒன்றான மெய் சபைக்கான ஆராதனைக்குரிய சத்தியங்களை கற்றுக் கொள்ளுவோம்

ADD YOUR COMMENT

Powered By Indic IME