கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்

தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்?

தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்?

ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்றும் அந்த ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்றும் பார்த்து இருக்கிறோம்.

நாம் நியாயப்பிரமாணத்திற்கு நாம் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை என்று வசனங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இயேசு நாம் ராஜாவாக ஏற்றுக் கொண்டு இருப்போம் என்றால் அவருடைய கட்டளைகளுக்கு மாத்திரமே நாம் கீழ்ப்படிவோம்.

நாம் ஏன் கிறிஸ்துவின் பிரமாணத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும்?

2Co 11:2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

  • கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு நாம் ஒப்புக் கொடுக்கப்பட்டு இருக்கிறோம். அதனால் தான் நாம் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு  மாத்திரம் செவி கொடுக்க வேண்டும்.
  • நாம் கிறிஸ்துவின் பிரமாணத்தையும் கைக் கொண்டு நியாயப்பிரமாணத்தையும் கைக்கொள்ள முயற்சி செய்தால் நாம் கற்புள்ள கன்னிகையாக இருக்கிறோமா?
  • இன்றைக்கு அநேக பிரிவினைக் கூட்டங்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

கிறிஸ்து நம்மை கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள கன்னிகையாக வைத்து இருக்கிறார்.

Eph 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக 

  • நாம் கிறிஸ்து என்னும்புருஷனை விட்டு நியாயப்பிரமாணத்தையோ அல்லது வேறோரு சுவிசேஷத்திற்கு திரும்பும் போதுநாம் விபச்சாராக்காரராக இருக்கிறோம்.

நியாயப்பிரமாணம் ஏன் மாற்றப்பட்டது?

Heb 7:18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.

Heb 7:19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

  • நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ளதாகவும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தமும் மாற்றப்பட்டது.
  • நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை.
  • அதிக நன்மையான நம்பிக்கை என்பது நியாயப்பிரமாணத்தில் இல்லை ஆதலால் நாம் தேவனிடத்தில் சேரா முடியாத நிலை இருந்தது.
  • கிறிஸ்துவின் பிரமாணமே அதிக நன்மையான நம்பிக்கையை கொடுத்து நம்மை பூரணப்படுத்தி தேவனிடத்தில் சேர்க்கிறது.

இயேசு கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருந்தார்.

Heb 8:6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

புதிய உடன்படிக்கைக்காக கிறிஸ்து தம்முடைய ஜீவனைக் கொடுத்து இருக்கிறார்.

Heb 9:16 ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.

Heb 9:17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.

புதிய உடன்படிக்கை மனதில் வைக்கப்பட்டு இருதயத்தில் எழுதப்பட்டு  இருக்கிறது.

Heb 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

கிறிஸ்துவின் பிரமாணம் சுயாதீனப்பிரமாணமாக இருக்கிறபடியால் அந்த பிரமாணத்தை நாம் கை கொள்ள வேண்டும்.

Jam 1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.

சுயாதீனப்பிரமாணத்தின்படி தான் நாம் நியாயந்தீர்க்கப்படப் போகிறோம்.

Jam 2:12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.

Jam 2:13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

Joh 12:48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

Joh 12:49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

Joh 12:50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

இன்றைக்கு நியாயப்பிரமாணத்தினால் எந்த மனுஷனும் நீதிமானாக முடியாது.

Gal 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

Gal 2:16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.

நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் கிறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையிலிருந்து விழுகிறார்கள்.

Gal 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷம் இல்லை.

Gal 1:6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;

Gal 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவன் சபிக்கப்பட்டவன்.

Gal 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

Gal 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

  • தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக இருக்கிற நாம் கிறிஸ்துவின்(ராஜா) பிரமாணத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME