காதல் தோல்வி பிரச்சனைகள்

காதல் தோல்வி பிரச்சனைகள்

காதல் தோல்வி நிமித்தமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுப்பது சரியா?

இன்றைக்கு உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் அற்பமான காரியங்களுக்காக எல்லாம் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார்கள்.

இன்றைக்கு வாலிப பிள்ளைகள் காதல் தோல்வி பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது.

வாலிப பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் மறந்து இப்படி தற்கொலை செய்து கொள்ளும் போது தங்களுடைய வீட்டார் எவ்வளவு மனம் உடைந்து போய் விடுவார்கள் என்பதெல்லாம் யாரும் நினைப்பது இல்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எவ்வளவோ தியாகங்களைச் செய்து அவர்களைப் படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பிரயாசப்படும் போது இந்த வாலிப பிள்ளைகள் யாருடைய பிடியிலாவது சிக்கி கொண்டு அவமானப்பட்டு கடைசியில் யாரைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள்.

இன்றைக்கு உலகத்தில் 95 சதவீத காதல் திருமணங்கள் பிரச்சனைகளிலும் போராட்டங்களின் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் பலர் வாழ முடியாமல் தற்கொலையும் செய்து கொள்ளுகிறார்கள்.

எங்கள் காதல் புனிதமானது என்று அநேகர் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த காதலும் புனிதமானது எல்லாம் அல்ல.

திருமணம் செய்யாமல் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கும் போது அது எப்படி புனிதமாகும்?

அது ஒரு போதும் புனிதம் ஆகாது.

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அந்த ஸ்திரீயோடு தன் இருதயத்தில் விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு கிறிஸ்து போதித்து இருக்கிறார்.

மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

வாலிபனாக இருந்தாலும் வாலிப பெண் பிள்ளைகளாக இருந்தாலும் இச்சையோடு யார் ஒருவரை பார்த்தாலும் அவர்கள் தங்கள் இருதயத்தில் அவர்களோடு விபசாரம் செய்தாயிற்று.

ஒரு ஸ்திரீயையோ அல்லது ஒரு புருஷனையோ தொட வேண்டும் என்றால் அவர்களுக்குள் திருமண உடன்படிக்கை ஏற்பட்டு கணவன் மனைவியுமாக இருந்தால் மாத்திரமே அது பரிசுத்தமாய் இருக்கும்.

எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக;,,,,,,,

காதலிப்பதைப் பற்றி வேத வாக்கியம் என்ன போதிக்கிறது?

தேவன் ஆதாமுக்கு ஏற்ற துணையை உருவாக்கி ஆதாமிடம் கொண்டு வந்தார்.

ஆதியாகமம் 2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

தேவன் ஏற்ற துணையைக் கொண்டு வருவார் என்கிற விசுவாசம் வாலிப பிள்ளைகளிடம் இருக்க வேண்டும்.

ஆபிரகாம் ஈசாக்கு பெண் பார்த்தபோது அவருக்கு நாற்பது வயது அது வரை ஈசாக்கு பொறுமையோடு காத்திருந்தார்.

ஆதியாகமம் 25:20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்

ஈசாக்கும் ரெபெக்காளும் பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று பொறுப்பை அவர்கள் கையில் ஒப்புக் கொடுத்து காத்திருந்தார்கள்.

ஈசாக்கு ரெபெக்காளை மனைவியாக்கிக் கொண்டு அதற்கு பின்பு தான் அவளை நேசித்தார்.

ஆதியாகமம் 24:67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

யாக்கோபின் திருமண ஒழுங்கு என்பது சரியாக இருந்ததா?
இல்லை ஏனென்றால் அவருக்கு நிறைய குழப்பமான சூழ்நிலைகள் வந்தது அதற்கு காரணம் அவருடைய பெற்றோர்கள் அவருக்கான திருமண காரியங்களை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதினால் தான்.

இன்றைக்கு உலகத்தில் இருக்கக்கூடிய காதலுக்கு உதாரணம் ஒன்று வேத வாக்கியத்தில் இருக்கிறது.

தாவீதின் குமாரன் அம்னோன் அப்சலோமின் சகோதரியின் மேல் மோகங்கொண்டான்.

2சாமுவேல் 13:1 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.

அம்னோன் அவள் நிமித்தமாக ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான்.
2சாமுவேல் 13:2 தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.

பலர் இப்படி தான் பேசுகிறார்கள். உன்னைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை உன்னிடத்தில் பேசாமல் இருக்க முடியவில்லை நீ இல்லைனா நான் செத்துவிடுவேன் என்கிறார்கள்.

இப்படி பேசுவது எல்லாம் அம்னோனைப் போல ஏக்கத்தின் வியாதி தான் இது.

இது போன்ற வார்த்தைகளைக் கேட்டு தான் அநேகர் இப்படிப்பட்ட வலையில் வீழ்ந்து போகிறார்கள்.

இப்படி பேசுவது எல்லாம் அவர்களுடைய ஆசை நிறைவேறும் வரை தான். அவர்களுடைய காரியம் நிறைவேறிய பிறகு தான் அவர்களுடைய சுய ரூபமே வெளிப்படும்.

அம்னோன் ஒருவனுடைய யோசனையைக் கேட்டு அதின் படி செய்து அவளை கற்பழித்து விட்டான்.

2சாமுவேல் 13:14 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

அம்னோனுக்கு தாமாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் எல்லாம் இல்லை. அவளை அடைய வேண்டும் என்று நினைத்தான் அதை அவன் தந்திரமாய் சாதித்தான்.

அம்னோன் இதற்கு பின்பு செய்த செயல் தான் இன்றைக்கு நிறைய பேர் செய்கிறார்கள்.

2சாமுவேல் 13:15 பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

அம்னோன் தாமாரிடத்தில் அதிக வெறுப்பாய் நடந்து கொண்டான் என் முன்னால் நிக்காதே என்றான்.

தங்களுடைய காரியம் முடிந்த பிற்பாடு இன்றைக்கு அநேகர் இந்த அம்னோனைப் போல் தான் செய்கிறார்கள்.

தாமார் அவன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்தாள்.
2சாமுவேல் 13:16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

அவள் சொன்ன விசயத்தை அம்னோன் காது கொடுத்து கூட கேட்கவில்லை.

இன்னும் அம்னோன் என்ன செய்தான் என்று பாருங்கள்.

தன்னுடைய வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தாமாரை வெளியே தள்ளி கதவைப் பூட்டுங்கள் என்றான்.

2சாமுவேல் 13:17 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.

காதல் என்கிற இச்சையில் விழுந்த விழப்போகிற பெரும்பாலான மக்களுக்கு இது தான் சம்பவிக்கும்.

காதல் திருமணம் செய்து கொண்ட நிறைய ஸ்திரீகள் இன்றைக்கு தன்னுடைய கணவனால் விரட்டி விடப்பட்டு தங்கள் பெற்றோர்களின் வீட்டில் தான் அவமானத்தை சகித்துக் கொண்டு காலத்தை கழித்து கொண்டு இருக்கிறார்கள்.

2சாமுவேல் 13:18 அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.

2சாமுவேல் 13:19 அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.

2சாமுவேல் 13:20 ,,,,,,,,,அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.

இன்றைக்கு இருப்பது எல்லாம் பெரும்பாலும் காதல் அல்ல. எல்லாம் அம்னோனின் மோகமாய் தான் இருக்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான சபைகளில் காதல் திருமணம் தான் நடக்கிறது. இதில் ஊழியர்களுடைய வீட்டாரும் அடங்குவார்கள்.

சபையில் விசுவாசிகளாய் இருக்கிற ஒவ்வொரு வாலிப பிள்ளைகளுக்கும் சுய ஒழுக்கங்களையும் சுய கட்டுப்பாட்டையும் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படியென்றால் சபைகளில் இன்றைக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

சபைக்கு வரக்கூடிய ஒரு சகோதரனையோ ஒரு சகோதரியையோ பிடித்து இருக்கும் என்றால் சம்பந்தப்பட்ட வீட்டாரிடத்தில் விசாரித்து கேட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.

யார் ஒருவராக இருந்தாலும் மனைவியாக்கி கொண்டு தான் நேசிக்க வேண்டுமே தவிர அந்த தகுதி வருவதற்கு முன்பதாக நேசிக்க கூடாது.

காதல் என்கிற பெயரில் சபைகளில் விபச்சாரம் நடந்து கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் யார் யோசிக்கிறார்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள்?

காதல் என்கிற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டு இருக்கிற விபசாரக்காரனை சபையில் இருந்து புறம்பே தள்ளிப்போட வேண்டிய அவசியம் இருக்கிறது.

1கொரிந்தியர் 5:11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.

1கொரிந்தியர் 5:9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

தேவனுடைய சபை எப்படி இருக்க வேண்டும்?
எபேசியர் 5:27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

திருமணத்திற்கு முன்பு எந்த புருஷனையோ அல்லது ஸ்திரீயையோ நேசித்தாள் அது விபசாரமாய் இருக்கிறது.

திருமணத்திற்கு பின்பு எந்த புருஷனையோ அல்லது ஸ்திரீயையோ நேசித்தாள் அது வேசித்தனமாய் இருக்கிறது.

காதலிப்பதே தேவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கும் போது காதலில் தோல்வி என்று தற்கொலை செய்து கொண்டால் தேவன் ஒருபோதும் உங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

நீங்கள் காதல் தோல்வி என்று தற்கொலை செய்து கொண்டால் மீண்டு வர முடியாத நித்திய ஆக்கினைக்கு போய் விடுவீர்கள்.

இப்படிப்பட்ட காதலில் சிக்கி இருக்கிறவர்கள் மனந்திரும்பி குணப்பட வேண்டும்.
அப்போஸ்தலர் 3:20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.

கள்ளக்காதலைப் பற்றி என்ன?
எபிரெயர் 13:4 ,,,,, வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

திருமணத்திற்கு முன்பு காதலித்தாலும் சரி திருமணத்திற்கு பின்பு தன்னுடைய சரீரம் அல்லாத யார் ஒருவரை காதலித்தாலும் சரி தேவனுடைய பார்வையில் அது எல்லாம் கள்ள காதலாக தான் இருக்கும்.

வாலிப பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
நீதிமொழிகள் 6:25 உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

யாரும் யாருடைய அழகையும் இச்சிக்கவும் கூடாது யாரையும் கண்ணிமைகளில் பிடிக்கவும் கூடாது.

வாலிப பிள்ளைகள் திருமண விசயத்தில் தேவனையும் உங்கள் பெற்றோர்களை மாத்திரம் சார்ந்து இருங்கள்.

மனைவி மாத்திரமே நேசிக்கப்படத்தக்கவளும் அழகான வரையாடுகளும் ஒப்பாய் இருக்கிறாள்.

நீதிமொழிகள் 5:19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

புருஷன் மாத்திரமே நேசிக்கப்படதக்கவரும் சிநேகிதருமாய் இருக்கிறார்.

உன்னதப்பாட்டு 5:16 ,,,,, அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME