காணிக்கை செலுத்துவதின் மூலமாக தேவனை எப்படி தொழுது கொள்ளுகிறோம்?
ஒன்றான மெய் சபையிலே தேவனை எப்படி தொழுது கொள்ள வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.
புதிய ஏற்பாட்டு கிறிஸ்துவின் உடன்படிக்கையில் இருக்கிற நாம் காணிக்கை செலுத்துவதின் மூலமாக நாம் எப்படி தொழுது கொள்ளுகிறோம்?
இன்றைக்கு அநேக சபைகளில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட பழைய உடன்படிக்கையிலே சொல்லப்பட்ட தசமபாக காணிக்கை செலுத்தி தேவனை ஆராதிக்கிறார்கள் இது சரியா?
தேவனுக்கு காணிக்கை கொடுக்கக்கூடிய விசயத்தில் பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் உள்ள பெரிய மாற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் காணிக்கை (தசமபாகம்) கொடுப்பீர்கள் என்றால் அந்த ஆராதனை வீணான ஆராதனையாக தான் இருக்கும்.
கிறிஸ்தவர்கள் எப்படி காணிக்கை கொடுக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்?
நாம் வாரத்தின் முதல் நாளிலே (ஞாயிறு) தேவனுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பது பரிசுத்த ஆவியானவரின் கட்டளை.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு புதிய ஏற்பாட்டில் (உடன்படிக்கையின்) வாரத்தின் முதல் நாளிலே ஞாயிறு) நாம்பிதாவாகிய தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் கட்டளையிட்டு இருக்கிறார்.
1Co 16:1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
- வாரத்தின் முதல் நாள் தோறும் அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வரும் போது அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டமாக இருந்தது.
- வாரத்தின் முதல்தோறும் என்று வேத வாக்கியங்கள் சொல்லும் போது ஒவ்வொரு வாரமும் என்பது இங்கே கட்டளையாக இருக்கிறது.
இன்றைக்கு நாம் தேவனுக்கு கொடுக்கும் போது மனதில் (இருதயத்தில் என்று தான் கிரேக்கவேதாகமத்தில் இருக்கிறது) நியமித்தபடியே கொடுக்க வேண்டும்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
நம்முடைய இருதயத்திலிருந்து உற்சாகமாய் கொடுக்க வேண்டும்.
2Co 9:6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
- தேவனுக்கு மனஉற்சாகமாய் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார்.
- விசனமாயோ அல்லது கட்டாயமாயோ காணிக்கை கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தேவன் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை.
- நம் இருதயத்தில் என்ன நியமிக்கிறோமா அதை கொடுக்கும்படி தான் தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.
- தசமபாகம் கொடுக்கிறவர்களிடத்திலா அல்லது மன உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்திலா யாரிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்? மன உற்சாகமாய் யார் கொடுக்கிறார்களோ அவர்களிடத்தில்தான் தேவன் பிரியமாய் இருக்கிறார்.
நாம் நலமான வேலை செய்து காணிக்கை கொடுக்க வேண்டும்.
Eph 4:28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.
- பாவம் செய்ய தூண்டுகிற எந்த வேலையையும் செய்யாமல் நலமான வேலையிலிருந்து வரக்கூடிய வருமானத்தை தான் தேவனுக்கு செலுத்த வேண்டும்.
நம்முடைய சொந்த கைகளினால் வேலை செய்து அதினால் வரக்கூடிய வருமானதிலிருந்து தேவனுக்கு செலுத்த வேண்டும்.
1Th 4:12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
லஞ்சம் வாங்கி அதில் கர்த்தருக்கு கொடுப்போம் என்றால் அது அருவருப்பானது.
Luk 3:13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
- புதிய ஏற்பாட்டின் உபதேசத்தின் படி சபையின் காணிக்கையானது சபையில் இருக்கக்கூடிய எந்தவொரு தனிமனிதனுக்கும் சொந்தமானது இல்லை. அது தேவனுடைய காரியங்களுக்காக செலவு பண்ணப்பட வேண்டும்.
- காணிக்கையானது அந்தந்த சபையின் தேவைகளுக்காக செலவு பண்ணப்பட வேண்டும்.
சபையின் காணிக்கையானது எப்படி செலவு பண்ணப்பட்ட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார்.
சபையின் ஊழியருக்கு சபையார் காணிக்கையிலிருந்து கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
1Co 9:7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?
- சபையிலே தேவனுடைய சத்தியங்களை பகுத்து போதிக்கிற சபையின் ஊழியருக்கு சபையானது உதவி செய்ய வேண்டும்.
- கர்த்தருடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஊழியக்காரர்களுக்கு உதவிசெய்ய வேண்டியது சபையின் ஒழுங்காக இருக்கிறது.
- காணிக்கையிலிருந்து சபையின் ஊழியர் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுவதற்கு அவர் பாத்திரராய் இருக்கிறார் என்று இந்த வசனத்தில் சில உதாரணங்கள் மூலமாக தேவன் நமக்கு பவுல் மூலமாக நமக்கு போதிக்கிறார்.
எதில் வேலை செய்கிறார்களோ அதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறார்.
1Co 9:10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
- தேவனுடைய ஊழியத்தை செய்யக்கூடிய ஊழியக்காரனுக்கு சபையில் இருந்து தான் உதவி செய்யப்படவேண்டும்.
கர்த்தருடைய ஊழியக்காரரர்கள் நமக்கு ஞான நன்மைகளாகிய வசனத்தை விதைத்து இருக்கிறார்கள் அதற்காக அவர்களுக்கு நாம் சரீர நன்மைகளை கொடுத்து உதவி செய்யவேண்டும்.
1Co 9:11 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
நியாயப்பிரமாணத்தில் ஆசாரிய ஊழியம் செய்தவர்களுக்கு பலிபீடத்தில் வரக்கூடியது அவர்களுடைய சம்பளமாக இருந்தது. இது தேவன் அவர்களுக்கு இட்ட கட்டளையாக இருந்தது.
1Co 9:13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்பு உண்டாக வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார்.
1Co 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
Gal 6:6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்.
சபையின் காணிக்கையானது சபையின் மூலமாக தெரிந்து கொள்ளபட்ட மூப்பர்களுக்கு (pastors)உதவி செய்ய வேண்டும்
1Ti 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
1Ti 5:18 போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
சபையானது திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் உதவி செய்ய வேண்டும்.
1Ti 5:16 …….. சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் ………….
Jam 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
1Ti 5:3 உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.
- சபையின் காணிக்கையிலிருந்து விதவைகளையும் திக்கற்ற பிள்ளைகளுடைய தேவைகளை சந்திக்க வேண்டும்.
- சபையானது அப்படி செய்கின்ற போது அதுவே தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
விசுவாசிகளின் வீட்டில் உத்தம விதவை இருப்பார் என்றால் விசுவாச குடும்பத்தாரே அந்த விதவையை கவனித்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பாரத்தை சபையின் மேல்வைக்கக்கூடாது.
1Ti 5:16 விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.
- நீங்கள் காணிக்கை கொடுக்கக்கூடிய விசயத்தில் புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் படி இருதயத்தில் நியமித்தபடி கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் தேவனை ஆவியோடும் சத்தியத்தோடும் ஆராதிக்கிறீர்கள்.
- தசமபாகம் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எந்தவொரு கட்டளையையும் வேத வாக்கியமும் சொல்லவில்லை.
- பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர்கள் போல சடங்காசாரமாக தசமபாக காணிக்கை கொடுப்பீர்கள் என்றால் நீங்கள் வீணான ஆராதனை செய்கிறீர்கள்.
கர்த்தருக்கு சித்தமானால் ஆராதனைக் குரியகாரியங்களை தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்