ஒவ்வொரு பட்டணத்திலும் பவுல் ஞானஸ்நானத்தை குறித்து போதித்தாரா?
ஞானஸ்நானத்தைக் குறித்து அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகத்திலிருந்து அநேக காரியங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம்.
அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் பூமியெங்கும் அநேக பட்டணங்களுக்கு சென்று சுவிசேஷத்தை அறிவித்து பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.
இப்போது பிலிப்பு பட்டணத்திலும் இன்னும் சில பட்டணங்களிலும் எப்படி சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது என்று பார்ப்போம்.
லீதியாள் என்பவளுக்கு மற்ற ஸ்திரீகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
Act 16:12 அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.
லீதியாளின் இருதயத்தை கர்த்தர் திறந்தார்.
Act 16:14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
லீதியாளும் அவள் குடும்பத்தாரும் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Act 16:15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
லீதியாளும் அவள் வீட்டாரும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் என்பதை அவளும் அவள் வீட்டாரும் கர்த்தருடைய வசனங்களுக்கு கீழ்ப்படிந்து பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றதினால் காண்பித்து இருக்கிறார்கள்.
சிறைச்சாலைத்தலைவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
Act 16:30 அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.
இதற்கு பவுலுடைய பதில் என்னவென்று பாருங்கள்.
Act 16:31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
இன்றைக்கு அநேகர் இந்த வசனத்தைதான் பயன்படுத்துகிறார்கள். என்னவென்றால் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் போதும் இரட்சிக்கப்படுவோம் என்று போதிக்கிறார்கள்.
ஆனால் வேத வசனம் இதோடு நின்று போய் விடவில்லை அங்கே மேற்கொண்டு பவுல் என்னபோதித்தார் என்று கவனியுங்கள்.
Act 16:32 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
அவர்கள்அவர்களுக்கு சுவிசேஷத்தை போதித்த போது அதில் ஞானஸ்நானமும் உள்ளடக்கமாக இருந்தது. அதனால் தான் சிறைச்சாலை தலைவன் தன் குடும்பத்தோடு ஞானஸ்நானம் பெற்றான்.
Act 16:33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
சிறைச்சாலைத்தலைவன்தன் குடும்பத்தோடு தேவனிடத்தில் விசுவாசமாய் இருந்தார்.
Act 16:34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
பவுல்மற்ற தீர்க்கதரிசிகளும் அநேக பட்டணங்களுக்கு போய் சுவிசேஷத்தை பிரசங்கித்தார்கள்.
Act 17:3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
அநேகர் விசுவாசித்தார்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அதாவது சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதாகும்.
Act 17:4 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள்.
பெரோயாபட்டணத்தார் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார்கள்.
Act 17:10 உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
Act 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
Act 17:12 அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள்.
- தேவனுடையவார்த்தைகளை விசுவாசித்தார்கள் அல்லது ஏற்றுக் கொண்டார்கள் அல்லதுவிசுவாசிகளானார்கள் அல்லது விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்தார்கள் என்று அப்போஸ்தலருடைய நடபடிகள்புஸ்தகத்தில் வரக்கூடிய அனைத்து வசனங்களுமே ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படிவதேகாண்பிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஞானஸ்நானம் என்பது நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருக்கிறது.
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
- ஞானஸ்நானம் என்பது தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருக்கிறது. அநேகர் இந்த நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையை தள்ளிவிட்டு தங்களையே ஆக்கினைக்குள்ளாக தீர்த்து கொள்ளுகிறார்கள்.