நாம் பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்

நாம் பிதாவாகிய தேவனை எப்படி ஆராதிக்க (தொழுது கொள்ள) வேண்டும்?

ஒன்றான மெய் சபையிலே யாரை ஆராதிக்க வேண்டும் என்கிற சத்தியத்தை கற்றுக் கொண்டு வருகிறோம்.

பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பிதாவாகிய தேவனுக்கு ஆராதனை செய்தார்கள் என்பதைக் குறித்து அநேக வேத வசனங்களோடு கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் ஐந்து வகையான ஆராதனைகள் இருக்கிறது.

  • வீணான ஆராதனை (மத்15:9).
  • சுய இஷ்டமான ஆராதனை(கொலோ 2:23).
  • தேவ தூதர்களுக்குசெய்யும் ஆராதனை (கொலோ 2:19).
  • புத்தியுள்ள ஆராதனை(ரோம 12:1).
  • ஆவியோடும் உண்மையோடு தொழுது கொள்ளும் ஆராதனை (யோவா 4:24).

இந்த ஐந்து வகையான ஆராதனைகளில் நீங்கள் எந்தவகையான ஆராதனையை செய்கிறீர்கள் என்பதை நிதானித்து பார்த்து கொள்ள வேண்டும்.

முதலில் வீணான ஆராதனையைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

நாம் செய்யக்கூடிய ஆராதனை வீணான ஆராதனையாக இருக்கும் என்றால் தேவன் அந்த ஆராதனையை ஏற்றுக்கொள்ளுவாரா?

நாம் தேவனுக்கு வீணானஆராதனை செய்தால் தேவன் அதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.

Mat 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:

Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

இந்தவேத வாக்கியத்தில் இயேசு கிறிஸ்து வீணான ஆராதனை என்றால் என்ன என்பதை தெளிவாக போதிக்கிறார்.

வீணான ஆராதனை செய்கிறவர்கள் எதினால் தேவனிடத்தில் சேருகிறார்கள்?

தங்கள் வாயினால் தேவனிடத்தில் சேருகிறார்கள்.

வீணான ஆராதனை செய்கிறவர்கள் எதினால் தேவனை கனம்பண்ணுகிறார்கள்?

தங்கள் உதடுகளில் தேவனை கனம் பண்ணுகிறார்கள்.

அவர்களுடைய இருதயம் எங்கே இருக்கிறது?

அவர்களுடைய இருதயம் தேவனைவிட்டு தூரமாய் விலகி இருக்கிறது.

  • தேவன் தம்மை தொழுது கொள்ளக்கூடிய ஜனங்களின் இருதயம் தம்மிடத்தில்  கிட்டி சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
  • ஆனால் இந்த ஜனங்கள் புறம்பான மனுஷனில் தேவனை ஆராதிக்கிறார்கள்.
  • ஆனால் உள்ளான மனுஷனில் தேவனை விட்டு தூரமாய் விலகி இருக்கிறார்கள்.

இந்த ஜனங்களைக் குறித்து தேவன் என்ன சொல்லுகிறார்?

Mat 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து:

  • மனுஷர்களுடைய கற்பனைகளை வீணானய் போதித்து ஆராதனை செய்கிறவர்கள் மாயக்காரராய் இருக்கிறார்கள்.

வீணான ஆராதனை செய்கிற இந்த ஜனங்களில் இருதயம் ஏன் தேவனை விட்டு தூரமாய் விலகி இருந்தது?

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

  • மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து அதின்படி செய்து கொண்டு இருந்தபடியால்தான் அவர்களுடைய இருதயம் தேவனை விட்டுவிலகி இருந்தது.

வீணானஆராதனை செய்கிறவர்கள் தேவனுக்கு பயப்படுகிறார்கள். அந்த பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

  • தேவனுடைய வார்த்தையின்படி  நடக்காத எந்தவொரு ஆராதனையும் அது வீணான ஆராதனையாக தான் இருக்கிறது.

வேதாகமத்தில் அநேகர் வீணான ஆராதனை செய்து இருக்கிறார்கள் அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்த்தருக்கு சித்தமானால் இந்த வீணான ஆராதனையைக் குறித்து கற்றுக் கொள்ளுவோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME