பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்றால் அர்த்தம் என்ன?
ஒன்றான மெய் சபையிலே ஆராதனை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து கற்றுக் கொண்டு வருகிறோம்.
வித்தியாசப்பட்ட ஆராதனைகளை குறித்து நாம் கற்றுக்கொண்டு இருக்கிறோம்.
இப்போது ஆவியோடும் உண்மையோடும் எப்படி தொழுதுகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்.
பிதாவாகிய தேவனை ஆவியோடு தொழுது கொள்ளுதல் என்பது என்னவாக இருக்கிறது?
Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
- ஆவி என்பது நம்முடைய உள்ளான மனுஷனில் இருக்கிற மூன்று பாகங்களாய் (மனம், இருதயம்,ஆத்துமா) இருக்கிறது என்று பார்த்து இருக்கிறோம்.
- நம்முடையஉள்ளான மனுஷனில் ஆவிக்குரிய இருதயத்தில் சகல காரியங்களும் இருக்கிறது என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
நம்முடைய இருதயத்திற்கும் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
உள்ளான மனுஷனில் நாம் எதைக் கொண்டு தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
நாம் தேவனை ஆராதிக்கும்(தொழுது கொள்ளும்) போது நம்முடைய இருயத்திலிருந்து தான் தேவனை ஆராதிக்க வேண்டும்.
நாம் தேவனுக்கு ஆராதனை செய்யும் போது நம்முடைய இருதயம் தேவனிடத்தில் கிட்டி சேரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
ஆராதனையில் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய இருதயத்தின் மூலமாக தான் தேவனிடத்தில் சேருகிறோம்.
1Jo 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
1Jo 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
1Jo 3:22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
ஆராதனையில் நாம் பாடலை பாடும் போது அந்த பாடல் இருதயத்திலிருந்து வரவேண்டும்.
Col 3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
நாம் ஆராதனையில் காணிக்கை கொடுக்கும் போது இருதயத்தில் நியமித்துக் கொண்டதை கொடுக்க வேண்டும்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
- தமிழில் மனம் என்று மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள் .ஆனால் கிரேக்க வேதாகமத்தில் தேவன் இருதயம் என்று தான் சொல்லுகிறார்.
ஆராதனையில் தேவனுடைய வார்த்தைகளை கேட்கும் போது இருதயம் தான் குத்தப்படுகிறது.
Act 2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
1Co 14:25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
- தேவனுடைய சுவிசேஷத்தை கேட்கும் போது அந்த சுவிசேஷத்தின் வார்த்தைகள் இருதயத்தில் இருக்கக்கூடிய அந்தரங்கங்களை வெளியரங்கமாக்குகிறது.
ஆராதனையில் கர்த்தருடைய (இராபோஜன) பந்தியில் நாம் பங்குபெறுகின்ற போது இருதயத்தில் தான்சோதித்து அறிந்து பங்கு பெற வேண்டும்.
1Co 11:28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1Jo 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
- ஆராதனையில் முழுவதும் நம்முடைய இருதயத்தின் மூலமாக தான் தேவனை ஆராதிக்க வேண்டும்.
- ஆவியோடு தொழுது கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து சொல்லும் போது நம்முடைய உள்ளான மனுஷனில் ஒருபாகமாக இருக்கிற ஆவிக்குரிய இருதயத்தோடு பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட இருதயத்தோடு பிதாவாகிய தேவனை ஆராதனை செய்தால் அவர் ஏற்றுக் கொள்ளுவாரா?
Mat 15:19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
தேவனை ஆராதிக்கக்கூடிய நம்முடைய இருதயம் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.
Jam 4:8 … இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.
உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடு தான் தேவனிடத்தில் சேர வேண்டும்.
Heb 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
பயத்தோடும் பக்தியோடும் தான் நாம் தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும்.
Heb 12:28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
அப்படியென்றால் இன்றைக்கு கையை தட்டிக்கொண்டு, குதித்து, அழுது, கீழே புரண்டு மயக்கம் போட்டு விழுந்து போன்ற புறம்பான செயல்களால் தேவனுக்கு ஆராதனை செய்கிறோம் என்று சொல்லுகிறார்களே இதை தேவன் ஏற்றுக் கொள்ளுவாரா?
Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
- இங்கே இருக்கிற ஜனங்கள் பயந்து தேவனுக்கு ஆராதனை செய்கிறார்கள்.ஆனால் அந்த பயம் மனுஷரால் போதிக்கப்பட்ட கற்பனையிலிருந்து வருகிற பயமாய் இருக்கிறது, அதை தேவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை.
- தேவனுக்கு நாம் ஆராதனை செய்கிறோம் என்றால் அவருடைய வார்த்தையைகேட்டு அவருக்கு பயந்து நாம் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்.
- சபை கூடிவரும் போது தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் இருதயத்தில் தேவனிடத்தில் சேர்ந்து இருதயத்திலிருந்து அவரை ஆராதனை செய்ய வேண்டும்.
- மாம்சத்தில்(வாய், உதடு) மாத்திரம் தேவனிடத்தில் சேர்ந்தால் அப்படிப்பட்ட ஆராதனை அது வீணான ஆராதனையாக தான் இருக்கும், அந்த ஆராதனையை தேவன் ஏற்றுக்கொள்ளுவதில்லை.
கர்த்தருக்கு சித்தமானால்ஆவியோடும் உண்மையோடும் (சத்தியத்தோடும்) தொழுது கொள்ளுதலை குறித்து கற்றுக் கொள்ளுவோம்.