அவனிடத்தில் பொய் சொன்னான்
(1 இராஜா 13:1-10)
நாம் தேவனுடைய சத்தியங்களை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும், அப்படி உணர்ந்து கொள்ளாதபட்சத்தில் நாம் தேவனை விட்டு விலகி விழுந்து போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
யெரொபெயாம் தேவனை விட்டு விலகின போது அவனை எச்சரிப்பதற்காக தேவன் ஒரு வாலிப வயதுள்ள ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி வைத்தார்.
1 இராஜாக்கள் 13:1 யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,
1 இராஜாக்கள் 13:2 அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
1 இராஜாக்கள் 13:3 அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.
தேவனுடைய தீர்க்கதரிசியை யெரொபெயாம் பிடிக்க சொல்லி கையை நீட்டின போது அவனுடைய கை முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப் போயிற்று.
1இராஜாக்கள் 13:4 பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.
தேவனுடைய பலிபீடத்தை சொன்ன தீர்க்கதரிசனத்தின்படியே நடந்தது.
1இராஜாக்கள் 13:5 தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.
தேவனுடைய தீர்க்கதரிசி யெரொபெயாமுக்காக வேண்டுதல் செய்த போது அவனுடைய வேண்டுதலை கேட்டு தேவன் யெரொபெயாமின் கை சீர்ப்பட்டது.
1இராஜாக்கள் 13:6 அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.
யெரொபெயாம் தேவனுடைய மனுஷனுக்கு ஒரு வேண்டுதல் வைத்தார்.
1இராஜாக்கள் 13:7 அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
ஆனால் தேவனுடைய மனுஷனுக்கு தேவன் சில கட்டளைகளை கொடுத்து இருந்தார்.
1இராஜாக்கள் 13:8 தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
1இராஜாக்கள் 13:9 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,
1இராஜாக்கள் 13:10 அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.
வாலிபனான அந்த தீர்க்கதரிசிக்கு சோதனை வேறு ஒரு வழியில் வந்தது.
அந்த தேசத்திலே கிழவனான ஒரு தீர்க்கதரிசி குடியிருந்தான். அவன் அவனை பற்றி கேள்விபட்டு அவனை பின்தொடர்ந்து தன் வீட்டுக்கு வந்து அப்பம் புசிக்கும்படி கேட்டுக் கண்டான்.
1இராஜாக்கள் 13:11 கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.
1இராஜாக்கள் 13:12 அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
1இராஜாக்கள் 13:13 அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
1இராஜாக்கள் 13:14 தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.
1இராஜாக்கள் 13:15 அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.
ஆனால் அந்த வாலிபமான தீர்க்கதரிசி தேவன் தனக்கு கட்டளையிட்டதை கிழவனான தீர்க்கதரிசிக்கு கூறினான். 1இராஜாக்கள் 13:16 அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
1இராஜாக்கள் 13:17 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
கிழவனான தீர்க்கதரிசி அந்த தேவனுடைய மனுஷனிடத்தில் பொய் சொன்னான்.
1இராஜாக்கள் 13:18 அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
- இருவரும் தேவனுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசிகள் அவர்கள் தேவனுடைய வார்த்தையை (சத்தியத்தை) மாத்திரம் பேச வேண்டும் ஆனால் அந்த கிழவனான தீர்க்கதரிசி பொய் சொன்னான்.
- அவர்களுடைய சொந்த(மாம்ச) பெலவீனம் தேவனுடைய வார்த்தைகளுக்கு மாத்திரம் கீழ்ப்படிய வேண்டும் என்கிற பொறுப்பிலிருந்து அவர்களை மேற்கொண்டு விட்டது.
- இன்றைக்கும் இந்த இரண்டு தீர்க்கதரிசிகள் போல சொந்த (மாம்ச) பெலவீனத்தினால் நாமும் விழுந்து போவதற்கு அநேக சாத்தியக்கூறுகள் உள்ளன.
தேவன் அந்த வாலிபமான தீர்க்கதரிசியை கொன்று போட்டார் ஏனெனில் அவன் பொய்யை விசுவாசித்து கீழ்ப்படிந்தார்.
1இராஜாக்கள் 13:22 அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1இராஜாக்கள் 13:23 அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.
1இராஜாக்கள் 13:24 அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.
1இராஜாக்கள் 13:25 அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
ஏன் தேவன் வாலிப தீர்க்கதரிசியை கொன்று வயதான தீர்க்கதரிசியை ஜீவனோடு இருக்கும்படி விட்டு விட்டார்?
வாலிப தீர்க்கதரிசியின் பிரதியுத்திரத்தின் படி தேவன் தீர்ப்பு செய்துள்ளார்.
1இராஜாக்கள் 13:20 அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,
1இராஜாக்கள் 13:21 அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
1இராஜாக்கள் 13:22 அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1இராஜாக்கள் 13:23 அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.
1இராஜாக்கள் 13:24 அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.
1இராஜாக்கள் 13:25 அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
- வாலிப தீர்க்கதரிசி வயதான தீர்க்கதரிசி பொய் சொல்லுகிறான் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
அது எப்படி அவன் அறிந்திருக்க கூடும்?
இந்த பாடத்தின் கருத்து என்னவென்றால் நாம் தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் கண்டுபிடித்து அவைகளுக்கு மாத்திரம் நாம் கீழ்ப்படிய வேண்டும்.
எந்த ஒரு வாக்கியமும் தேவனுடைய வார்த்தையுடன் முரண்பாடுள்ள வாக்கியமாக இருந்தால் அது தவறான வாக்கியம்.
தேவன் புதிய ஏற்பாட்டிலும் கூட இதே பொறுப்பை தான் நமக்க கொடுத்துள்ளார் ஒருவனும் நம்மை வஞ்சியாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
மாற்கு 13:5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
வஞ்சிக்கப்பட்டாதிருங்கள் என்று தேவன் அநேகதரம் நம்மை எச்சரிக்கிறார்.
விதைக்கிறவன் உவமையை கொடுத்த பிறகு இயேசு கேட்கிற விதத்தைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்.
லூக்கா 8:18 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
தேவன் நம்மை எச்சரித்து வழிநடத்தும் போது நாம் சாத்தானுடைய பொய்களில் விழுந்து போவது இல்லை.
எபேசியர் 4:14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
வாலிப தீர்க்கதரிசி விழுந்து போன கண்ணியில் இன்றைக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் விழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
2பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2பேதுரு 2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
பழைய ஏற்பாட்டிலும் கூட தேவன் தம்முடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைகளை மாத்திரம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனங்களிடம் நிச்சயித்து கொண்டு எதிர்பார்த்தார்.
உபாகமம் 13:1 உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:
உபாகமம் 13:2 நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,
- வேறே தேவர்கள் என்பது மற்ற சட்டதிட்டங்கள் அதாவது நாம் முன்பு அறிந்திராதது.
- நாம அறிந்திராத வேறு சட்டங்களை இந்த புதிய ஏற்பாட்டில் மாற்றங்களை கொண்டு வருகிறதற்காக தேடிக் கொண்டு இருப்பவர்கள் (The new patterns the change agents).
- மாற்றம் என்பது ஒரு மாயமான வார்த்தை மாற்றங்கள் என்பது கார், வீடுகள் கம்யூட்டரில் வரலாம் ஆனால் தேவனுடைய வார்த்தைகளில் வரக்கூடாது.
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் நடந்த பூர்வ பாதையை அநேகர் விட்டு விட்டார்கள்.
எரேமியா 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
- இஸ்ரவேலர்களான பூர்வ பாதைகள் என்பது எல்லா தேவனுடைய தீர்க்கதரிசிகளும் நடந்த பாதை அந்த பாதைகளை கேட்டு விசாரித்து நடக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்.
இன்றைக்கு அநேக பிரசங்கியார்கள் வேதத்தை தவிர மற்ற அநேக காரியங்களையே பிரசங்கிக்கிறார்கள் ஆனால் நாம் அப்படிப்பட்டவர்களாய் இருக்க கூடாது.
2தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.
சபைக்கு விரோதமாக ஏன் இத்தனை ஆவிக்குரிய தாக்குதல்கள் இருக்கிறது?
உபாகமம் 13:3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
உபாகமம் 13:4 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
- தேவனுக்கு மாத்திரம் செவி கொடுத்து அவர் ஒருவரை மாத்திரம் பின்பற்ற வேண்டும்.
- தேவனுடைய வார்த்தையிலிருந்து (வேதாகமத்திலிருந்து) மாத்திரம் அவருடைய சத்தத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தையோடு எதையாவது கூட்டினால் குறைத்தால் அது தேவனுடைய வார்த்தைகள் அல்ல.
உபாகமம் 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
வேத வாக்கியத்தில் மாற்றங்களை கொண்டு வரும் போது அந்த வேத வாக்கியங்கள் செத்ததாக தான் இருக்கும்.
உபாகமம் 13:5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக.
நாம் கள்ளபோதகரை கொல்ல வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கள்ள போதகன் மரணத்திற்கு பாத்திரன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உபாகமம் 13:6 உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
உபாகமம் 13:7 உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
அப்படி ஏவி விடும் போது தேவன் அதற்கான தீர்ப்பை கொடுத்துள்ளார்.
உபாகமம் 13:8 நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
- தேவன் அவர்களை தீர்ப்பு செய்திருக்கிறார் எப்படியென்றால் அவர்கள் பழைய பிரமாணத்தின்படி மரணத்திற்கு பாத்திரவான்களாக இருக்கிறார்கள் அவர்களை பின்பற்றி செல்லுவதினால் நமக்கு என்ன பயனை கொடுக்கும்.
- அவர்கள் யார் இருந்தாலும் அவர்கள் மீது ஒரு போதும் இரக்கம் கொள்ளாமல் தப்பவிடாமலும் ஒளித்து வைக்காமலும் இருக்க வேண்டும்.
நாம் இப்படிசெய்யும் போது தான் தேவனுடைய செம்மறியாடுகளுக்கான மாதிரியாக இருக்கிறது.
யோவான் 10:8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
கள்ள போதகனுக்கு அருகே அவைகள் செல்லுமானால் அவைகள் கேளாத போது அவைகள் கொல்லப்படும்.
உபாகமம் 13:9 அவனைக் கொலை செய்துபோட வேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
உபாகமம் 13:10 அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய்.
உபாகமம் 13:11 இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
- முடிவான பலன் என்னவென்றால் உண்மையுள்ளவர்கள் பயந்து அவர்களை விட்டு விலகி இருப்பார்கள்.
இது தேவனுடைய பிள்ளைகளுடைய வேலையாய் இருந்தது, உலகத்தில் உள்ள எல்லா தேவனுடைய பிள்ளைகளிடமும் இது சம்பவித்தால் என்ன ஆகும்?
உபாகமம் 13:12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்ட மனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு,
உபாகமம் 13:13 நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது,
- எங்களுடைய சொந்த வேலையை செய்கிறோம் எங்களுடைய சொந்த மந்தையை கண்காணிக்கிறோம் மற்றதை அப்படியே விட்டு விடுவோம் என்று அநேகர் சொல்லுகிறார்கள்.
- இது தேவனுடைய மாதிரி அல்ல
- அவர்களை எல்லா தேவனுடைய ஜனங்களை குறித்துக் கொள்ள வேண்டும், மற்ற தேவர்களிடம் போகக்கூடியவர் யார் என்றும் குறித்துக் கொள்ள வேண்டும்.
பிரதியுத்திரம் அளிப்பதற்கு முன்பு அந்த காரியம் மெய்யாய் நடந்ததா என்று அந்த காரியத்தை குறித்து கேட்டாராய்ந்து இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
உபாகமம் 13:14 நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
- ஆனால் அநேகர் ஏதாவது சகோதரர்களைப் பற்றி பிரச்சனைகள் வரும் போது அந்த சகோதரர்களைப் பற்றி ஆராய்வதோ விசாரிப்பதோ கிடையாது.
எந்த சபையையும் உண்மையுள்ளது என்று நாம் யூகிக்க கூடாது எல்லாவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும்.
வெளி 3:1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.
- பாவத்தில் சகோதரன் இருப்பதை அறிந்தும் அதை பற்றி அநேக சகோதரர்கள் வெளிப்படுத்துவதற்கு அக்கரைப் படுவதில்லை அதைப் பற்றி ஒன்றும் சொல்லுவதும் இல்லை.
தேவனுடைய விசுவாசத்திற்காக நாம் எழுந்து நிற்காத போது அது நமக்கு விரோதமாகவே வந்து நேரிட வாய்ப்பு உள்ளது.
தீத்து 4:14 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக.
2தீமோத்தேயு 4:15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.
2தீமோத்தேயு 4:16 நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.
இது நம்முடைய வேலையாக இருக்கிறது நாம் தேவனுக்காக (உண்மையுள்ளவர்களுக்காக) நிற்காத போது தேவனுக்கு எதிராக இருக்கிறோம்.
இஸ்ரவேலர்கள் அந்த துன்மார்க்கமான கள்ள போதகருக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து ஒன்றையும் மீதியாக வைக்க கூடாது.
உபாகமம் 13:15 அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,
உபாகமம் 13:16 அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது.
அது திரும்ப கட்டப்படாமல் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்.
இஸ்ரவேலர்கள் அந்த கள்ள போதகர்களை விட்டு விலகாத போது கர்த்தருடைய கோபத்தின் உக்கிரம் அவர்களிடம் திரும்பும் என்று கர்த்தர் எச்சரிக்கை தருகிறார்.
உபாகமம் 13:17 சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால்,
உபாகமம் 13:18 கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயை செய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.
இந்த கள்ள போதகர்களை அழிப்பதை பற்றி தேவனுடைய கட்டளைக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் பயப்படுவார்கள் என்றால் என்ன ஆகும்?
கள்ள போதகர்கள் இருக்கும் வரை தேவனுடைய கோபத்தின் உக்கிரமும் இருக்கும்.
கள்ள போதகர்களைப் பற்றிய காரியத்தில் புதிய ஏற்பாட்டில் உள்ள சத்தியங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முதலவதாக வேற்றுமையான உபதேசங்களை போதியாதபடிக்கு நாம் சபையின் விசுவாசிகளுக்கு கட்டளையிட வேண்டும்.
1தீமோத்தேயு 1:3 வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
1தீமோத்தேயு 1:4 நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
இரண்டாவது இப்படிப்பட்ட கள்ள போதகர்களை எல்லாருக்கும் முன்பாக அவனை கடிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் மற்றவர் அவர்களுடைய வார்த்தைகளை கேளாமலும் பின்பற்றாமலும் இருப்பார்கள்.
1தீமோத்தேயு 5:20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.
மூன்றாவது இரண்டொருதரம் புத்தி சொல்ல வேண்டும்.
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
நாலாவது மற்றும் கடைசியாக அவனை விட்டு விலக வேண்டும்.
தீத்து 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.
பவுல் வரும் போது கொரிந்திய சகோதரர்களில் கள்ள போதகர்களை தப்ப விட மாட்டேன் என்று எச்சரிக்கிறார்.
2கொரிந்தியர் 13:2 நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
சகோதரர்களுக்கு எதிரான தியோதிரேப்புவின் கிரியைகள் பற்றி சபையை யோவான் எச்சரிக்கிறார்.
3யோவான் 1:9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
3 யோவான் 1:10 ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
3 யோவான் 1:11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.
இந்த கள்ள போதகர்களை நாம் குறித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும்.
ரோமர் 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.
ரோமர் 16:18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
எபேசியர்கள் கள்ள போதகர்களை கண்டுபிடிக்கும்படி கட்டளையிடப்பட்டு இருந்தார்கள் அவர்கள் கள்ளபோதகர்களை கண்டுபிடித்தார்கள்.
வெளி 2:2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
முதிர் வயதுள்ள தீர்க்கதரிசி தன்னிடம் பொய் சொல்லுகிறார் என்பதை வாலிபமான தீர்க்கதரிசி எப்படி அறிந்து கொள்ளுவார்?
அந்த வாலிப தீர்க்கதரிசியின் கண்களுக்கு முன்பாக இப்பொழுது தான் தேவன் மூன்று அற்புதங்களை தந்துள்ளார்.
1இராஜாக்கள் 13:3 அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.
1இராஜாக்கள் 13:4 பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.
1இராஜாக்கள் 13:5 தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.
1இராஜாக்கள் 13:6 அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.
- தேவன் அற்புதம் செய்கிறாரா இல்லையா என்பது அங்கே கேள்வியே இல்லை தேவனுடைய எல்லா சித்தத்தையும் அப்படியே துல்லியமாக செய்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
தேவனுடைய வார்த்தையானது மாறாது.
தேவனுடைய எந்த வார்த்தைகளும் ஒன்றுக்கென்று முரண்பாடாக இருக்கிறது இல்லை.
1இராஜாக்கள் 13:7 அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.
1இராஜாக்கள் 13:8 தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.
1இராஜாக்கள் 13:9 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,
1இராஜாக்கள் 13:10 அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.
தேவன் தன்னோடு பேசினார் என்று சொன்ன அந்த வயதான தீர்க்கதரிசி என்ன நிரூபணத்தை காண்பித்தார்?
1இராஜாக்கள் 13:18 அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
- இன்றைக்கும் சிலர் ஒன்றும் தரிசியாமல் நாம் தேவனுடைய வெளிப்படுத்துலை உடையவனாய் இருக்கிறேன் என்று பொய் சொல்லுகிறார்கள்.
- இந்த வயதான தீர்க்கதரிசி அந்த வாலிபமான தீர்க்கதரிசியை புசிக்கவும் குடிக்கவும் நிறுத்தினது அவசியம் இல்லாத ஒன்று என்பது துக்கமான விசயம்.
கிழவனான தீர்க்கதரிசியின் பொய்யினால் என்ன இலாபம் அவனுக்கு இருந்தது?
அந்த வாலிப தீர்க்கதரிசியோடு கொஞ்சம் ஐக்கியம் அவனுக்கு கிடைத்தது.
எத்தனை பேர் மனப்பூர்வமாய் தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்தை வழங்கி சகோதரர்களை ஏற்றுக் கொள்ள விருப்பமாக இருக்கிறார்கள்?
ஆசியாவிலே தேவனை விட்டு விலகினவர்களுக்கு எதிராய் பவுல் எழுந்து நின்றார்.
2தீமோத்தேயு 1:15 ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
பேதுரு கலாத்தியாவில் உள்ள உண்மையுள்ள சகோதரர்களை விட்டு மனப்பூர்வமாய் ஏன் விலகினார்?
கலாத்தியர் 2:11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன்.
கலாத்தியர் 2:12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
கலாத்தியர் 2:13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான்.
- சமூக புறக்கணிப்பு முதலாம் நுற்றாண்டில் பேதுருவுக்கு சோதனையாக இருந்ததா அதை இன்றைக்கும் அப்படிப்பட்ட சோதனை இருக்கிறது, சத்தியத்தை அறிந்து கொண்ட சகோதரர்கள் இப்படிப்பட்ட கள்ள போதகர்களுக்கு எதிராக நிற்க வேண்டும்.
கிழவனான தீர்க்கதரிசியின் மூலமாகவே அந்த வாலிபமான தீர்க்கதரிசிக்கு தேவன் அவனை கடிந்துக் கொண்டு அவனுக்கு நேரிட போகிற காரியங்களை அறிவித்தார்.
1இராஜாக்கள் 13:20 அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,
1இராஜாக்கள் 13:21 அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,
1இராஜாக்கள் 13:22 அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
இப்பொழுது அந்த வாலிபமான தீர்க்கதரிசி என்ன உணர்ந்து இருப்பார்?
கிழவனான தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் தேவனுடைய வார்த்தை தானா என்று தான் சோதித்து பார்த்து இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்.
தேவன் சொன்னபடியே அந்த வாலிப தீர்க்கதரிசியை தேவன் சிங்கத்தை அனுப்பி கொன்று போட்டார்.
1இராஜாக்கள் 13:23 அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.
1இராஜாக்கள் 13:24 அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.
1இராஜாக்கள் 13:25 அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
கிழவனான தீர்க்கதரிசி வாலிபமான தீர்க்கதரிசியை சிங்கம் கொன்று போட்டது என்று கேள்விப்பட்ட போது அது தேவனுடைய செயல் என்பதை அறிக்கையிட்டான்
1இராஜாக்கள் 13:26 அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி,
தேவன் தான் அந்த சிங்கத்தை அனுப்பினார் என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்?
சிங்கம் பசியினால் அந்த காரியத்தை செய்யவில்லை தேவன் சிங்கத்தை அனுப்பி அந்த தீர்க்கதரிசியை கொன்று போட்டார்
1இராஜாக்கள் 13:28 அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை.
- வயதான தீர்க்கதரிசி வருகிற வரையிலும் சிங்கம் பிரேதத்தண்டையிலே தான் நின்று கொண்டு இருந்தது
உண்மையில்லாத தீர்க்கதரிசியுடன் வயதான தீர்க்கதரிசி அடக்கம் செய்யப்படுவதினால் என்ன நன்மை இருக்கப் போகிறது?
1இராஜாக்கள் 13:31 அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள்.
- தன்னுடைய பொய்யினாலே வாலிப தீர்க்கதரிசியின் ஜீவனை எடுத்துக் கொண்டார் என்பதில் அந்த வயதான தீர்க்கதரிசிக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை, ஆனால் கீழ்ப்படியாத தீர்க்கதரிசியின் அருகே அடக்கம் செய்யப்படுவது என்ன பலனை அந்த வயதான தீர்க்கதரிசிக்கு தரப்போகிறது?
தேவன் வாலிப தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் என்கிற விசுவாசம் வயதான தீர்க்கதரிசிக்கு இருந்தது
1இராஜாக்கள் 13:32 அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.
- இந்த வயதான தீர்க்கதரிசிக்கு தேவன் மேல் விசுவாசம் இருப்பது நல்லது தான் ஆனால் அது மாத்திரம் போதுமானது அல்ல தீர்க்கதரிசி எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது
- அது போல இது தேவனுடைய வார்த்தை தானா என்று சோதித்து பார்க்க வேண்டிய அவசியமும் அந்த வாலிப தீர்க்கதரிசிக்கு இருந்தது ஆனால் அதை செய்ய அவன் தவறிவிட்டான்
- தேவனுடைய வார்த்தைளை சோதித்து அறியாமல் கிழவனான தீர்க்கதரிசியோடு இவன் செய்த ஆகாத சம்பாஷனை அவனை கெடுத்து போட்டு விட்டது
- தம்முடைய பிள்ளைகள் தம்முடைய சத்தியத்தை கண்டுபிடித்து பத்திரப்படுத்த தேவன் எதிர்பார்க்கிறார்
நம்மை யாரும் வஞ்சிக்கவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி தேவன் எதிர்பார்க்கிறார்.
மாற்கு 13:5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
விதைக்கிறவன் உவமையை கொடுத்த பிறகு இயேசு கிறிஸ்து ஜாக்கிரதையாக இருங்கள் என்று கட்டளையிட்டுள்ளார்
லூக்கா 8:18 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
வாலிப தீர்க்கதரிசி விழுந்து போன கண்ணியில் இன்றைக்கும் அநேக தேவனுடைய பிள்ளைகள் விழுந்து கொண்டு போய்தான் இருக்கிறார்கள்
2பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2பேதுரு 2:2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
2பேதுரு 2:3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
மாற்கு 9:47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
மாற்கு 9:48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
மாற்கு 9:49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
மாற்கு 9:50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் தேவன் தம்முடைய ஜனங்களை சோதிக்கிறார்
2கொரிந்தியர் 2:9 நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
ஒவ்வொருவருடைய விசுவாசமும் பரீட்சிக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது
1பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
தீமோத்தேயுவின் வேலைப்பாடும் அக்கினியால் சோதிக்கப்பட்டது
பிலிப்பியர் 2:19 அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
பிலிப்பியர் 2:20 அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை.
பிலிப்பியர் 2:21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.
பிலிப்பியர் 2:22 தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொருவனுடைய கிரியையும் தொடர்ச்சியாக சோதிக்கப்படுகிறது.
1கொரிந்தியர் 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.
சகோதரர்கள் தேவனுடைய வார்த்தைகளையே பேசுகிறார்களா என்று கொரிந்தியர்களுக்கு சோதனை கொடுக்கப்பட்ட.
1கொரிந்தியர் 12:3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
கொரிந்துவிலே உள்ள சகோதரர்களை பவுல் சோதித்து அவர்கள் கள்ளதனமானவர்கள் என்று கண்டுபிடித்தார்.
2கொரிந்தியர் 11:12 மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.
2கொரிந்தியர் 11:13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
2கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
2கொரிந்தியர் 11:15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் ஏற்கனவே அநேக கள்ள தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்
1யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
பல நுற்றாண்டுகளாக இந்த கள்ள தீர்க்கதரிசிகள் சபையை பாழக்கிக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
1யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.