அருள்செய்திருக்கிறார்

பிதாவைபோல கிறிஸ்துவும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்க அருள்செய்திருக்கிறார்.

Father has life in Himself, so He has granted the Son to have life in Himself. (John 5:26)
Jn1:4; Jn4:10; Jn7:37,38; Jn8:51,58; Jn11:25,26; Jn14:6,19; Col3:3,4; 1Pet2:4; 1Jn1:1-3.

ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். (யோவான் 5:26)

யோவான் 1:4; யோவான் 4:10; யோவான் 7:37,38; யோவான் 8:51,58; யோவான் 11:25,26; யோவான் 14:6,19; கொலோசெயர் 3:3,4; 1பேதுரு 2:4; 1 யோவான் 1:1-3.

இயேசு ஜீவிக்கிறார்:

பிதாவைபோல இயேசுகிறிஸ்துவும் தம்மில்தாமே ஜீவனுள்ளவர். இயேசுகிறிஸ்து பிதாவினால் ஜீவன்பெற்று தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார். இது எப்படி நடந்தது என்று நாம் விளக்கவியலாது. அதற்கு அவசியமும் இல்லை.

இயேசுகிறிஸ்து தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார் என்பதற்கான சில முக்கிய குறிப்புகள் உள்ளன.
1. அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். வெளி 1:8.
2. ஆதியிலே ஜீவனுள்ள வார்த்தையாயிருந்தார். யோவான் 1:1-3.
3. ஆபிரகாம் உண்டாகுமுன்பே இருக்கிறவர். யோவான் 8:58.
4. மரித்தும் என்றும் உயிரோடிருக்கிறவர். வெளி 1:18.
5. மரித்தோருக்கு ஜீவன் கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்.
6. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். எபிரெயர் 13:8.
7. இயேசுகிறிஸ்து மீண்டும் வரப்போகிறவராயிருக்கிறார். அப்போஸ்தலர் 1:11.

பிதாவுக்கு பிரியமாக கிறிஸ்து நடந்துகொண்டதுபோல நாமும் கிறிஸ்துவுக்கு பிரியமாக நடந்துகொள்வோமானால் நமக்கும் இந்த ஜீவனை தருவார். இதனால் நாமும் மரணத்தை காணாது நம்மில்நாமே ஜீவனுடையவர்களாயிருப்போம்.

இயேசுகிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். அதனால் மரணம் அவரை மேற்கொள்ளமுடியவில்லை.
பாவம் அவரை மேற்கொள்ளமுடியவில்லை.
உலகம் அவரை மேற்கொள்ளமுடியவில்லை.
சாத்தான் அவரை மேற்கொள்ளமுடியவில்லை.
மாம்சம் அவரை மேற்கொள்ளமுடியவில்லை.

அவரின் ஜீவனை நாமும் பெற்று நம்மில்நாமே ஜீவனுடையவர்களாயிருப்போமானால் நம்மையும் உலகத்தின் எந்த ஒன்றும் மேற்கொள்ளவியலாது.

கிறிஸ்துவில் இணைந்திருங்கள். கிறிஸ்துவாய் இலங்கிடுங்கள்.

கர்த்தாவே உம்மைபோல உம் குமாரனையும் ஜீவனுள்ளவராய் எங்களுக்கு வெளிப்படுத்தி நாங்களும் புதிதான ஜீவனுடையவர்களாய் நிற்க உதவி செய்தமைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். நாங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருந்து மிகுந்த ஜீவனுள்ள கனிகளைக் கொடுக்க எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME