நாம் இந்த பூமியிலே அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறோமா

நாம் இந்த பூமியிலே அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறோமா?

நம்மை பார்த்து யாராவது பரதேசி என்று சொல்லி விட்டால் நாம் அவர்களிடம் சண்டைக்கே போய் விடுவோம்.

ஏனென்றால் பரதேசி என்றால் இந்த பூமியிலே நிலையற்று அலைகிறவர்களை தான் அப்படி அழைப்பும.

அந்நியன் என்றால் அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடம் அவர்களுக்கு சொந்தமில்லாதது  என்று அர்த்தம்.

தேவன் நம்மை இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு தான் அழைக்கிறார்.

1பேதுரு 2:11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

1பேதுரு 1:2 …….. இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

1பேதுரு 1:17 ……… இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

  • கிறிஸ்தவர்களாகிய பூமிக்குரிய எந்த அடையாளத்தினாலும் நம்மை அடையாளப்படுத்தக்கூடாது.
  • கிறிஸ்து இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்து எடுத்து இருக்கிறார்.
  • நாம் இந்த ஜாதியை சேர்ந்தவன் என்றோ அல்லது இந்த இனத்தைச் சேர்ந்தவன் என்றோ ஒருபோதும் நம்மை அழைத்துக் கொள்ளக்கூடாது.
  • அநேக கிறிஸ்தவர்கள் தங்களை இந்தியன் தமிழன் என்று அழைப்பதில் பெருமை கொள்ளுகிறோம் என்கிறார்கள். ஆனால் அப்படி நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் போது உலகத்திலிருந்து நாம் பிரித்தெடுக்கப்பட்டு இருக்கிறோமா? இல்லை நாம் அந்த அடையாளத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தான் அர்த்தம்.
  • நாம் அந்நியரும் பரதேசியுமாய் இருக்கிறபடியால் இந்த பூமியில் இருக்கிற நாள் இவரைக்கும் இந்த பூமி நமக்கு சொந்தமில்லை என்கிற உணர்வோடும் பயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
  • நாம் இந்த பூமியில் அந்நியரும் பரதேசிகளுமாய் இருக்கிறபடியால் நம்முடைய நிரந்தரமான குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது.

ஆபிரகாம் இந்த பூமியிலே அந்நியரும் பரதேசியுமாய் வாழ்ந்தார்.

எபிரெயர் 11:8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.

எபிரெயர் 11:9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

எபிரெயர் 11:10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.

  • ஆபிரகாம் தேவனால் அழைக்கப்பட்ட பிற்பாடு தன்னை இந்த தேசத்தான் என்றோ இந்த இனத்தை சேர்ந்தவன் என்றோ ஒருபோதும் தன்னை அடையாளப்படுத்தவில்லை.
  • இந்த பூமியில் அவருக்கு கல்லறை பூமியை தவிர வேறொன்றும் அவருக்கு சொந்தமாக இருக்கவில்லை.
  • ஆபிரகாம் அஸ்திபாரம் போட்டு கற்களினால் எந்த வீடுகளையும் அவர் உண்டாக்கவில்லை.
  • ஆபிரகாம் தன்னை அந்நியரும் பரதேசியும் என்பதற்கு அடையாளமாக தான் அவர் ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களில் கூடியிருந்தனர்.

யாக்கோபு தன்னை அந்நியரும் பரதேசியும் என்று தான் அழைத்துக் கொண்டார்.

ஆதியாகமம் 47:9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

யாக்கோபு திரளான ஆஸ்திகளை உடையவராக இருந்தாலும் கூட அவர் தன்னை பரதேசி என்று தான் அழைத்துக் கொண்டார்.

மோசே மீதியான் தேசத்தில் இருந்த போது தன்னை பரதேசி என்றே அழைத்துக் கொண்டார்.

யாத்திராகமம் 2:22 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.

மோசே வனாந்தரத்தில் இருந்த போதும்  தன்னை  அந்நியரும் பரதேசியும் இருக்கிறேன் என்பதை அறிந்து அதை அறிக்கையிட்டார்.

யாத்திராகமம் 18:3 அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.

மோசே இந்த தனக்கு இலாபமாய் இருந்த பூமிக்குரிய அநித்தியமான பாவ சந்தோஷங்களை அவர் வெறுத்தார்.

எபிரெயர் 11:24 விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,

எபிரெயர் 11:25 அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,

எபிரெயர் 11:26 இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

எபிரெயர் 11:27 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.

  • மோசேயை தேவன் அழைத்தது முதல் அவர் தன்னை பரதேசி என்று அழைத்துக் கொண்டார்.
  • தேவனுடைய சித்தத்தை செய்வதற்காகவே தன்னை ஒப்புக் கொடுத்தார்.
  • பூமிக்குரிய எந்த அடையாளங்களோடும் மோசே தன்னை ஒருபோதும் அடையாளப்படுத்தவில்லை.
  • இனிவரும் பலன்மேல் தான் அவர் நோக்கமாய் இருந்தார்.

எருசலேமுக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கும் ராஜாவாய் இருந்த தாவீது தன்னை அந்நியனும் பரதேசியும் இருக்கிறேன் என்று அறிக்கையிட்டார்.

சங்கீதம் 39:12 …….. என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

சங்கீதம் 119:19 பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

  • தாவீது ராஜாவாக இருந்தாலும்  தன் பிதாக்களைப் போல தன்னையும் பரதேசி என்றே அழைத்துக் கொண்டார்.
  • தான் தேவனுக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன் என்று அறிக்கையிட்டார்.
  • தாவீது ராஜாவாக இருந்தாலும் இந்த பூமி தனக்கு சொந்தமில்லை என்பதும் தன்னுடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்து வைத்து இருந்தார்.

இந்த பூமி தன் குடியிருப்பு அல்ல என்பதை அவர் அறிந்து இருந்தார்.

சங்கீதம் 119:54 நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.

1கொரிந்தியர் 29:15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குரியவரா?

இயேசு கிறிஸ்து எந்த பூமிக்குரிய அடையாளத்தோடும் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. அவரும் இந்த பூமியிலே அந்நியரும் பரதேசியைபோலவுமே வாழ்ந்தார்.

யோவான் 17:14 ……. நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; …..

யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

இயேசு கிறிஸ்து தலை சாய்ப்பதற்கு ஒரு இடமும் இல்லாமல் பரதேசியைப்போல் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார்.

மத்தேயு 8:20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

அப்போஸ்தலர் 10:38 ……… தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களும் இந்த பூமியிலே அந்நியரும் பரதேசியுமாய் தான் வாழ்ந்தார்கள்.

யோவான் 15:19 ……. நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

யோவான் 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய காணியாட்சிகளை விற்று அப்போஸ்தலர்களுடைய பாதங்களில் வைத்தார்கள்.

அப்போஸ்தலர் 4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,

அப்போஸ்தலர் 4:35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

அப்போஸ்தலர் 4:36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,

அப்போஸ்தலர் 4:37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

  • கிறிஸ்தவர்கள் தாங்கள் இந்த பூமிக்குரியவர்கள் இல்லை என்பதை அறிந்து தான் தங்களுடைய நிலங்களையும் வீடுகளையும் விற்று அதை பகிர்ந்து கொடுத்தார் கள்.
  • தங்களுக்குரியதை விற்று இந்த பூமியிலே அந்நியரும் பரதேசிகளுமாய் வாழ்ந்தார்கள்.

நாம் இந்த உலகத்துக்குரியவர்களா?

நாம் இந்த உலகத்திலிருந்து பிரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறோம் நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் இல்லை.

நம்மில் அநேகர் நான் தமிழன் நான் இந்தியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரிந்து இருக்கிறார்களா?

அவர்கள் உலகத்திலிருந்து பிரிந்து வரவில்லை.

அநேகர் தங்களுடைய ஜாதிகளை மேன்மையாக சொல்லிக்கொள்ளுகிறார்களே அவர்கள் இந்த உலகத்தை விட்டு தங்களை பிரித்து எடுத்து இருக்கிறார்களா?

லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: ,,,,,,,, தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

  • நான் இந்தியன் நான் தமிழன் நான் இந்த ஜாதியை சேர்ந்தவன் என்று உலகத்தார் பெருமையாக சொல்லிக் கொள்ளுவார்கள். நாம் தமிழர்கள் தான் நாம் இந்தியர்கள் தான் இதில் என்ன நமக்கு பெருமை இருக்கிறது.

நாம் இந்த தேசத்தில் தேவனுடைய சித்தத்தின்படி பிறந்து இருக்கிறோம். அவருடைய சித்தத்தின்படி வாழ வேண்டும்.

1யோவான் 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

யாக்கோபு 4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.

தேவனுடைய எல்லா பரிசுத்தவான்களும் இந்த பூமியிலே அந்நியரும் பரதேசியும் தான் வாழ்ந்து மரித்து இருக்கிறார்கள்.

எபிரெயர் 11:13 இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

எபிரெயர் 11:14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

நாம் இந்த தேசத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அந்நியரும் பரதேசிகளுமாய் வாழ்ந்தால் தான்  நம்முடைய சொந்த குடியிருப்புக்கு நாம் போக முடியும்.

பிலிப்பியர் 3:20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

  • நமக்கு சொந்த வீடுகள் நிலங்கள் இருக்கலாம். ஆனால் அது அதின் மீது நம்முடைய இருதயத்தை ஒருபோதும் வைக்க கூடாது.
  • நமக்கு எவ்வளவு தான் ஐஸ்வர்யம் இருந்தாலும் அதின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கக் கூடாது.
  • நான் இந்த பூமியிலே அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன் என்கிற விசுவாசம் தான் நம்முடைய மரண பரியந்தம் இருக்க வேண்டும்.

இந்த சத்தியத்தை குறித்து இன்னும் அநேக வேத வாக்கியங்கள் இருக்கிறது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME