அகிரிப்பா ராஜாவுக்கு பவுல் என்ன போதித்தார்?
ஒன்றான மெய்சபைக் குறித்தான சத்தியங்களை கற்றுக்கொண்டு வருகிறோம்.
ஆளுநராகிய பேலிக்ஸ்க்கு முன்பாக பவுல் இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் நீதியையும் குறித்தும் இச்சையடக்கத்தை குறித்தும் இனிவரும் நியாயத்தீர்ப்பை குறித்தும் பிரசங்கித்தார் என்பதை கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது அகிரிப்பா ராஜாவுக்கு என்ன போதித்தார் என்பதை கற்றுக் கொள்ளுவோம்.
அக்கிரிப்பாராஜா யூதருடைய சகல முறைமைகளையும் அறிந்தவராய் இருந்தபடியால் பவுல் அவருக்கு சுவிசேஷத்தை அறிவிக்க நல்ல வாய்ப்பு ஏற்ப்பட்டது.
Act 26:3 விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
பவுல் அநேக காரியங்களை குறித்து போதித்தார் அதில் நாம் முக்கியமானவைகளை மாத்திரம் பார்க்க போகிறோம்.
பவுல் இந்த சுவிசேஷத்தை பிரசங்கிக்க முக்கிய காரணம் என்னவென்றால் மரித்தோரின் நித்திய உயிர்த்தெழுதல் தான்.
Act 26:8 தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?
பவுல் ஏன் மரித்தோரின் உயிர்த்தெழுதலைப் பற்றி போதிக்க வேண்டும்?
ஏனென்றால் மரித்தோரின் உயிர்த்தெழுதல் சுவிசேஷத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது.
கிறிஸ்துபவுலை தெரிந்தெடுத்தலின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தியத்தை பவுல் அக்கிரிப்பா ராஜாவுக்கு வெளிப்படுத்தினார்.
Act 26:18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
இயேசுகிறிஸ்து பவுலை ஜனங்களிடத்தில் அனுப்பிய நோக்கம் என்னவென்று கவனியுங்கள்.
- இருளைவிட்டு ஒளியினிடத்திற்கு திரும்ப வேண்டும்.
- சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்கு திரும்ப வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட காரியங்கள் தான் மனந்திரும்புதல் ஆகும்.
அப்படி அவர்கள் மனந்திரும்பும் போது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு என்னசம்பவிக்கும்?
- கிறிஸ்துவைப் பற்றும்விசுவாசத்தினால் பாவமன்னிப்பு.
- பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரம்.
- மேலே சொல்லப்பட்ட வேத வாக்கியத்தை எவ்வளவு பேர் விசுவாசிக்கிறார்கள் பெரும்பாலானவர்கள் இதையெல்லாம் விசுவாசிப்பது இல்லை ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.
கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் எப்படி அவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்?
அவர்கள் எப்படி பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியும்?
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், ,,,
Mar 16:16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
பவுல் யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் மனந்திரும்பி குணப்பட வேண்டும் என்று பிரசங்கித்தார்.
Act 26:20 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
தேவனிடத்தில் எப்படி மனந்திரும்பி குணப்பட முடியும்?
மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும்போதுதான் குணப்படுகிறோம்.
Act 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், ,,,
அகிரிப்பாராஜாவுக்கு பவுல் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பிரசங்கித்தார்.
Act 26:23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
ஏன் பவுல் அகிரிப்பா ராஜாவுக்கு இயேசு கிறிஸ்துவின் நித்திய உயிர்த்தெழுதலைக் குறித்துபிரசங்கித்தார்?
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில்தான் நமக்கு பாவமன்னிப்பும் நித்திய உயிர்த்தெழுதலும் இருக்கிறது.
1Co 15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.
கிறிஸ்து உயிர்த்தெழவிட்டால் நாம் ஏன் பாவங்களில் இருப்போம்?
Rom 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
Rom 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ஞானஸ்நானத்திலேஅவருடைய மரணத்திற்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு தண்ணீரை விட்டு வெளியே வரும் போது புதிதான ஜீவனுள்ளவர்களாய் வெளியே வருகிறோம்.
- அவருடையமரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டால் தான் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்படுவோம்.
- ஞானஸ்நானம் இல்லாமல் நமக்கு பாவமன்னிப்பும் இல்லை நித்திய ஜீவனுக்கான உயிர்த்தெழுதலும் இல்லை.