மழையைப் பெய்யப் பண்ணுகிறவர் யார்

மழையைப் பெய்யப் பண்ணுகிறவர் யார்?

மரம் இருப்பதினால் மழை வருகிறதா அல்லது தேவனால் வருகிறதா?

இன்றைய விஞ்ஞானம் சொல்லுகிறது மரம் வளர்த்தால் தான் மழை பெய்யும் என்று சொல்லுகிறது.

அதற்கு நிறைய அறிவியல் காரணங்களை எடுத்து முன்வைக்கிறார்கள்.

மரம் மழையைக் கொடுக்கும் என்றால் எப்படி மின்னல் வருகிறது இடி இடிக்கிறது?

இது எல்லாம் மரம் தான் செய்கிறதா?

யாரால் மழையை வருஷிக்கப்பண்ண முடியும்?
எரேமியா 14:22 புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையை பெய்யப்பணுகிறவர் நம்முடைய தேவன்.

எரேமியா 10:12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

எரேமியா 10:13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

சங்கீதம் 135:7 அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

சகலமும் தேவனுடைய பண்டசாலையில் இருந்து புறப்படுகிறது.

மரத்தை தம்முடைய மழையினால் வளரச் செய்கிறவரே நம்முடைய தேவன் தான்.

ஏசாயா 44:14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

மரத்தைப் பற்றி தேவனுடைய ஆலோசனை என்ன?
உபாகமம் 20:19 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

உபாகமம் 20:20 புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம்.

தேவன் மழையைப் எப்படி பெய்யப்பண்ணுகிறார்?
யோபு 36:27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.

யோபு 36:28 அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.

தேவன் தம்முடைய சிருஷ்டிப்பின் மீது அன்பு செலுத்துகிற படியால் தானியங்களை மழையைக் கொடுத்து விளையச் செய்கிறார்.

சங்கீதம் 65:9 தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

சங்கீதம் 65:10 அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.

பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டும் என்றால் முன்மாரி மழையும் பின்மாரி மழையும் பெய்ய வேண்டும்.

யாக்கோபு 5:7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.

உபாகமம் 11:14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

உபாகமம் 11:15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார்.

முன்மாரியும் பின்மாரியும் பெய்யும் போது மனுஷர்களுக்கு தானியத்தையும் முளைக்கப்பண்ணி மிருக ஜீவராசிகளுக்கு புல்லையும் முளைப்பிக்க பண்ணுகிறார்.

தேவனால் எந்த இடத்திலும் மழையை வருஷிக்கப்பண்ண முடியும் அதற்கு மரம் தேவை இல்லை.

யோபு 38:26 பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

மழை எங்கே பெய்ய வேண்டும் என்று தேவன் சித்தம் வைத்து இருக்கிறாரோ அங்கே தான் மழை பெய்யும்.

ஆமோஸ் 4:7 இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.

மழை பெய்யா விட்டாலும் தேவன் சகல தானியங்களையும் பயிர்வகைகளையும் புல்லையும் வளர செய்ய முடியும்
ஆதியாகமம் 2:5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

நோவாவுடைய காலகட்டம் வரை மழை என்பதையே ஜனங்கள் பார்த்தது இல்லை.

ஆதியாகமம் 7:4 இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.

எபிரெயர் 11:7விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

மூடுபனி பூமியிலிருந்து எழும்பி பூமியையெல்லாம் நினைத்தது.
ஆதியாகமம் 2:6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

தேவன் ஏதேன் தோட்டத்திலிருந்து ஒரு நதி ஒடி அது நாலு பெரிய ஆறுகளாக தேவன் பிரிந்து போகும்படி செய்து இருந்தார்.

ஏதேன் தோட்டத்தில் இருந்து நதி ஒன்று ஒடி அது சகல விருட்சங்களையும் வளரச் செய்து இருந்தது.

ஆதியாகமம் 2:10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

ஏதேன் தோட்டத்திலிருந்து ஒடி வரும் நதி நாலு பெரிய ஆறுகளாக பிரிந்து ஒவ்வொரு தேசத்திற்கும் பிரிந்து போயிற்று.

ஆதியாகமம் 2:11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

ஆதியாகமம் 2:12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு.

ஆதியாகமம் 2:13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.

ஆதியாகமம் 2:14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

முதல் உலகம் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்ட போது ஏதேன் தோட்டமும் அழிந்து போனது.

ஜலப்பிரளயத்திற்கு பின்பு நோவாவின் காலகட்டத்தில் இதெக்கேல் மற்றும் ஐபிராத்து என்னும் பெரிய ஆறுகள் மாத்திரம் இருந்தது.
தாானியேல் 10:4 முதலாம் மாதம் இருபத்துநாலாந் தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,
ஆதியாகமம் 15:18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்,

இன்றைக்கு சில தேசங்களில் தேவன் ஏன் மழையை பெய்யப்பண்ணுவதில்லை?

உபாகமம் 11:16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

உபாகமம் 11:17 இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள்.

1இராஜாக்கள் 8:35 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,

மழை இல்லாவிட்டாலும் நாம் குடிப்பதற்கு நம்முடைய தேவனால் தண்ணீர் தர முடியும்.

2இராஜாக்கள் 3:16 அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.
2இராஜாக்கள் 3:17 நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2இராஜாக்கள் 3:20 மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.

தம்மை தூஷிக்கிறவர்களுக்கும் நன்மை செய்கிறார்.
மத்தேயு 5:45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

இன்றைக்கும் தேவன் மழையையும் செழிப்புள்ள காலங்களையும் எல்லாருக்கும் கொடுக்கிறார்.

அப்போஸ்தலர 17:25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

அப்போஸ்தலர 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

தேவன் இதையெல்லாம் ஏன் செய்கிறார்?
அப்போஸ்தலர் 17:27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

நம்முடைய தேவன் சகலத்தையும் அவருடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME