பவுல் ஆளுநர்களுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் என்ன பிரசங்கம் பண்ணினார்

பவுல் ஆளுநர்களுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் என்ன பிரசங்கம் பண்ணினார்?


ஒன்றான மெய் சபையிலே ஞானஸ்நானம் பெறும் போது தான் கர்த்தர் சபையிலே சேர்க்கிறார் என்பதையும் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம்முழுவதும் அதற்கான ஆதாரங்களை வேத வாக்கியத்தோடு பார்த்து இருக்கிறோம்.

இப்போது பவுலை அப்போஸ்தலனாக இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுத்ததற்கு நோக்கம் இருந்தது, அது என்னவென்பதை கிறிஸ்துவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

Act 9:15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.

Act 9:16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.

  • இஸ்ரவேல் ஜனங்களுக்கும் புறஜாதிகளுக்கும் பவுல் சுவிசேஷத் தை அறிவித்தார் என்பதை பார்த்து இருக்கிறோம்.
  • பவுல் ராஜாக்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பது தேவனுடையசித்தமாய் இருந்தது.

இப்போது பவுல் ராஜாக்களுக்கு எப்படி சுவிசேஷம் அறிவித்தார் என்பதை பார்ப்போம்.

தேசாதிபதியாகிய பேலிக்ஸ்க்கு பவுல் என்ன பிரசங்கத்தார் என்று வேத வாக்கியம் போதிக்கிறது.

பவுல் பேலிக்ஸ்க்கும் அவருடைய மனைவிக்கும் கிறிஸ்துவைப் பற்றியும் விசுவாசத்தைக்குறித்தும் பிரசங்கித்தார்.

Act 24:24 சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

  • பவுல் பேலிக்ஸ்க்கு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைக் குறித்துபோதித்தார்.

கிறிஸ்துவை பற்றியும்  விசுவாசத்தைப் பற்றியும் அவர் என்ன பிரசங்கித்தார்?

Act 24:25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில்,

  • பவுல்நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பேசினார்.

அவருக்குள் இருந்து இந்த காரியங்களை போதித்தவர் யார்?

பரிசுத்த ஆவியானவர்

இயேசுகிறிஸ்து அப்போஸ்தலர்களை கொண்டு பரிசுத்த ஆவியானவர் என்ன பேசுவார் என்பதை முன்னுரைத்து இருக்கிறார்.

Joh 16:7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

Joh 16:8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

Joh 16:9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,

Joh 16:10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,

Joh 16:11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

பேலிக்ஸ்க்கு பவுல் மூலமாக சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

  • ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத போது அது பாவமாய் இருக்கிறது.
  • இயேசு கிறிஸ்துவைக் குறித்து சகல சத்தியங்களையும் அறிந்து கொள்ளுவதுதான் நீதியாக இருக்கிறது.
  • இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது.

பேலிக்ஸ் பாவம் நீதி நியாயத்தீர்ப்பு என்று பவுல் பிரசங்கித்த சுவிசேஷ வார்த்தைகளை கேட்ட போது பயந்தார்.

Act 24:25  பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்.

  • ஒரு மனிதன் எப்படி இரட்சிக்கப்பட முடியும் என்பதை பவுல் அவருக்கு தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக போதித்தார். ஆனால் பேலிக்ஸ் அதற்கு செவி கொடுக்கவில்லை.
  • ஒரு மனிதன் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அது ஞானஸ்நானம் மாத்திரமே.
  • பேலிக்ஸ் இரட்சிக்கப்படுவதற்கு தேவன் கொடுத்த நல்ல வாய்ப்பை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அப்படி இராதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  • இரட்சிப்புக்கு தேவன் கொடுத்த நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டோமே என்று பேலிக்ஸ் இன்றைக்கு வேதனையுள்ள ஸ்தலத்தில் வேதனைப் பட்டு கொண்டு இருப்பார் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

ஞானஸ்நானத்தில் மாத்திரம்தான் நம்முடைய பாவங்கள் கழுவப்படுகிறது என்று வேத வாக்கியங்கள் நமக்கு போதிக்கிறது.

Act 22:16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.

ஞானஸ்நானத்திற்கு முன்பதாக எந்தவொரு ஒரு மனிதனும் இன்றைக்கு இரட்சிக்கப்பட முடியாது என்பதற்கு இந்த வேத வாக்கியம் ஒரு ஆதாரமாக இருக்கிறது.

  • பவுல் இயேசு கிறிஸ்துவை தரிசித்ததினாலோ அல்லது அவரோடு பேசியதினாலோ அவர் இரட்சிக்கப்படவில்லை. அவர் இன்னும் பாவத்தில்தான் இருக்கிறார் என்பதை அனனியா இங்கே சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும்.
  • பவுல் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தபடியால் தான் தமஸ்கு போகும் வழியில் அவரிடத்தில் நான் என்ன செய்ய சித்தமாய்இருக்கிறீர் என்று கேட்டார், ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாலும் இன்னும் அவர் பாவத்தில் தான் இருக்கிறார்.
  • ஞானஸ்நானம் பெற்று உன்பாவங்கள் போக கழுவப்படு என்று அனனியா பவுலுக்கு போதித்தார்.
  • ஞானஸ்நானம் மாத்திரமே மனுஷனுடைய பாவங்களை கழுவுகிறது.

இஸ்ரவேலனாக இருந்தாலும் புறஜாதியாக இருந்தாலும் ராஜாக்களாக இருந்தாலும் எல்லாரும் பாவத்திலிருந்து கழுவப்படுவதற்கு தேவன் ஞானஸ்நானத்தை மாத்திரமே கட்டளையிட்டு இருக்கிறார்.

Gal 3:27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

Gal 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

இந்த வேத வாக்கியம் கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது மாத்திரம் தரித்து கொள்ளுகிறோம் என்று போதிக்கிறதா?

வேத வாக்கியங்கள் அப்படி ஒருபோதும் போதிப்பது இல்லை.

நாம் இயேசு கிறிஸ்துவை எப்போது தரித்து கொள்ளுகிறோம்?

  • நாம் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் போது தான் கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுகிறோம்.
  • நாம் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் போது தான் நாம் எல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாய் இருக்கிறோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME