நித்தியமான சுதந்திரம்

நித்தியமான சுதந்திரம்

The Eternal Inheritance.

நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாய் இருப்பதற்கும் பலன் இருக்கிறது.

தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்குத்தத்தங்களையும் ஆசீர்வாதங்களையும் நித்தியத்திலே சுதந்திரமாக வைத்து இருக்கிறார்.

யார் தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தேவன் அநேக பலன்களை வைத்து இருக்கிறார்.

தேவனுடைய பிள்ளைகள் எப்படி தங்கள் பலனைப் பெறப்போகிறார்கள்?

மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

தேவனுடைய பிள்ளைகள் நித்திய ஜீவனை பெறப் போவது எப்படி?

மத்தேயு 19:29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

தமது சீஷர்களுக்காக இயேசு கிறிஸ்து நித்தியமான இடத்தை ஆயத்தம் பண்ண போய் இருக்கிறார்.

யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

யோவான் 14:3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

தேவனுடைய பிள்ளைகளுக்காக ஆயத்தம் பண்ணின நித்திய ராஜ்யத்தை எப்பொழுது அவர்கள் சுதந்தரிப்பார்கள்?

யோவான் 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

நித்திய ராஜ்யத்தை எப்படி தேவனுடைய பிள்ளைகள் சுதந்தரிப்பார்கள்?

1கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

1கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

தேவனுடைய உண்மையுள்ளவர்கள் எப்படி நித்திய ராஜ்யத்தை பெறுகிறார்கள் என்பதை மீண்டுமாக நாம் பார்க்கிறோம்.

1கொரிந்தியர் 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.

நித்திய சுதந்திரத்தை எப்படி சுதந்தரிப்பது என்பது பற்றி நமக்கு என்ன காண்பிக்கப்பட்டு இருக்கிறது?

அப்போஸ்தலர் 20:32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்தி விருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

தேவனுடைய பிள்ளைகள் எப்படி சுதந்தரிக்க போகிறார்கள்?

கலாத்தியர் 3:18 அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.

நம்முடைய சுதந்திரத்தை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

எபேசியர் 1:18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

எபேசியர் 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

பிதா ஒருவர்தான் நாம் சுதந்தரிக்கும்படி நம்மை தகுதியுள்ளர்களாக்குகிறார்.

கொலோசெயர் 1:12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

கொலோசெயர் 3:23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,

கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

  • தேவனுடைய பிள்ளைகள் கீழ்ப்படியாத போது சுதந்திரத்தின் பலனை பெறுவார்களா?

இயேசு கிறிஸ்து தனக்கு இருந்த நாமத்தை எப்படி பெற்றார்?

எபிரெயர் 1:4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

இயேசு தேவனை பிரியப்படுத்தினதினாலே அவர் அவருடைய சுதந்திரர் ஆனார்.

பிலிப்பியர் 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

பிலிப்பியர் 2:7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

பிலிப்பியர் 2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

பிலிப்பியர் 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

சுதந்தரிக்க போகிற எந்த நபரும் விசுவாசத்துடனும் பொறுமையுடனும் சுதந்தரிப்பார்கள்.

எபிரெயர் 6:12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.

எபிரெயர் 6:11 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,

நாம் இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டினால் நித்திய சுதந்திரத்தை அடைந்து கொள்ள முடியும்.

எபிரெயர் 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

நமக்கு நித்தியமான சுதந்திரம் உண்டு என்பதை தேவன் கிறிஸ்துவை எழுப்பி தேவன் நிரூபித்துள்ளார்.

1பேதுரு 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

1பேதுரு 1:4 அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

தேவன் நாம் அவருடைய ஜனங்களாகவும் அவருடைய பிள்ளைகளுமாய் இருக்கிறபடியால் நாம் அவரிடத்திலிருந்து சுதந்தரிக்கிறோம்.

ரோமர் 8:15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.

ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

யார் மூலமாய் அந்த சுதந்திரம் நமக்கு வரப்போகிறது?

கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

தேவனுடைய பிள்ளைகள் யார் மூலம் சுதந்தரிக்கப் போகிறார்கள்?

ரோமர் 4:13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.

ரோமர் 4:14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.

  • தேவனிடமிருந்து நேரடியாக இரண்டு நபர்கள் மாத்திரம் நித்திய சுதந்திரத்தை பெறப்போகிறார்கள்.
  • சுதந்தரிக்க போகிற எல்லாரும் ஆபிரகாம் மற்றும் கிறிஸ்துவின் மூலம் சுதந்தரிப்பார்கள்.

இந்த உலகத்தில் ஆபிரகாம் ஒன்றும் சுதந்தரித்துக் கொள்ளவில்லை.

அப்போஸ்தலர் 7:3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.

அப்போஸ்தலர் 7:4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.

அப்போஸ்தலர் 7:5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.

  • தேவன் ஆபிரகாமிற்கு புதிய உலகத்தை வாக்குத்தத்தம் செய்துள்ளார்.

நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும் வாக்குத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.

கலாத்தியர் 3:29 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.

ஆபிரகாம் புதிய பூமியை சுதந்தரிக்கப் போகிறார் இயேசு எல்லாவற்றையும் சுதந்தரிக்க போகிறார்.

எபிரெயர் 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

தேவனுடைய பிள்ளைகள் இரட்சிப்பை சுதந்தரிக்க போகிறவர்கள் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

எபிரெயர் 1:13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

எபிரெயர் 1:14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

ஆபிரகாம் எப்படி தேவனுடைய சுதந்திரர் ஆனார்?

எபிரெயர் 6:15 அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

எபிரெயர் 6:16 மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.

எபிரெயர் 6:17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

எபிரெயர் 6:18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.

நோவா எப்படி சுதந்திரத்தை பெற போகிறவர் ஆனார்?

எபிரெயர் 11:7 விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்.

  • நோவா நீதியினால் சுதந்தரத்தை பெறப்போகிறவர் ஆனார்.
  • ஆபிரகாம் தன் சொந்த நீதியினால் சுதந்தரரானார்.

கிறிஸ்துவின் நீதியினாலா அல்லது தனது சொந்த நீதியினாலா ஆபிரகாம் பலனை பெற்றார்?

எபிரெயர் 6:15 அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

தேவனுடைய நித்திய ஜீவனை அவருடைய குமாரர்களும் குமாரத்திகளும் சுதந்தரிக்க கூடும்.

1பேதுரு 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.

தேவனுடைய நித்திய ராஜ்யத்தை ஐஸ்வரியவான்களும் தரித்திரர்களும் சுதந்தரிக்க கூடும்.

யாக்கோபு 2:5 என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

சுதந்தரிக்கும்படி நாம் சாத்தானோடும் பாவத்தோடும் சண்டையிட்டு ஜெயங் கொள்ள வேண்டி அவசியம் இருக்கிறது.

வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

ஒன்றான மெய்யான தேவனை அறிந்து இருக்கிறோமா?

இயேசு கிறிஸ்துவை அனுப்பினவராகிய ஒன்றான மெய்த் தேவனை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.

மெய்யான தேவனை அறிவதே நித்திய ஜீவனாக இருக்கிறது.

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

ஒன்றான மெய் தேவனை யூதர்கள் அறிந்து கொள்ளவில்லை என்று இயேசு கிறிஸ்து அவர்களை எச்சரித்தார்.

யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.

  • யூதர்கள் தேவனை அறியாதிருந்தார்கள் என்பது நினைப்பதற்கு வருத்தமாக இருக்கிறது, ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் எச்சரிப்பை அவர்கள் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து அநேக முறை யூதர்களை நோக்கி நீங்கள் தேவனை அறியவில்லை என்று எச்சரித்தார்.

யோவான் 8:19 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.

யோவான் 8:54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

யோவான் 8:55 ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

இயேசு கிறிஸ்து யூதர்களிடம் என்ன எதிர்ப்பார்த்தார்?

யூதர்கள் மெய்யான தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், மெய்யான தேவனை அறிவது என்றால் என்ன என்பதை யூதர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

தெசலோனிக்கேயர்கள் மெய்யான தேவனிடமாய் திரும்பினார்கள்.

1தெசலோனிக்கேயர் 1:9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,

  • ஒன்றான மெய் தேவனை எல்லாரும் அறிய என்கிற காரணத்திற்காக தான் இயேசு கிறிஸ்து வந்தார்.
  • ஒன்றான மெய் தேவனை அறிந்து கொள்ள மனிதர்களுக்கு தேவனுடைய உணர்ந்து கொள்ளுதல் அவசியமாய் இருக்கிறது.
  • சத்தியத்தை எல்லா மனிதரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார் (எருசலேமிற்காக இயேசு கிறிஸ்து அழுதார்).

யூத மத தலைவர்கள் தாங்கள் தேவனை அறிந்திருக்கிறோம் என்று விவாதித்தார்கள்.

யூதர்கள் தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்பதில் பெருமையாக இருந்தார்கள்.

யோவான் 8:33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.

தேவனை அவர்கள் அறியாததினாலே பாவத்திற்கு அடிமைகளாக இருந்தார்கள்.

யோவான் 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யூதர்கள் தேவனுடைய வீட்டிலே இல்லை என்பதை இயேசு கிறிஸ்து அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

யோவான் 8:35 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

யூதர்கள் ஆபிரகாமின் சந்ததியாராய் இருந்தார்கள் ஆனால் அவர்கள் கீழ்ப்படிதலுள்ள ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருக்கவில்லை.

யோவான் 8:37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.

யோவான் 8:38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

இயேசு கிறிஸ்து அவர்கள் ஆபிரகாமின் கிரியைகளை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார்.

யோவான் 8:39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே.

யூதர்கள் ஒன்றான மெய் தேவனை அவர்கள் அறியாததினாலே இயேசு கிறிஸ்துவை கொலை செய்ய வகை தேடினார்கள்.

யோவான் 8:40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

யூதர்கள் தங்களுக்கு ஒரே பிதா உண்டு என்று வாக்குவாதம் செய்தார்கள்.

யோவான் 8:41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள்.

யூதர்கள் ஒன்றான தேவனை அறியாதபடியினாலே அவர்கள் இயேசு கிறிஸ்துவையும் அவருடைய உபதேசத்தையும் கேட்க மனதில்லாதிருந்தார்கள்.

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

யோவான் 8:43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா?

யூதர்கள் ஒன்றான மெய் தேவனை அறியாதபடியினாலே அவர்களுடைய பிதா பிசாசானவன் என்று இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார்.

யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

கர்த்தர் தம்முடைய சொந்த பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனைகளை தருகிறார்.

நாம் ஒன்றான மெய் தேவனை அறிந்து இருக்கிறோமா என்று சோதித்து அறிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

2கொரிந்தியர் 13:5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.

  • நாம் அனைவரும் கர்த்தருடைய நியாயசனத்திற்கு முன்பாக நிற்போம், நாம் அவரை எப்படி அறிந்து இருக்கிறோம் என்பதை பொறுத்தே நமக்கு நித்திய ஜீவன் இருக்கும்.

எல்லாரும் தாங்கள் சரியாக இருப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் கர்த்தருடைய எச்சரிப்பை நாம் கவனிக்க வேண்டும்.

நீதிமொழிகள் 21:2 மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.

ஒன்றான மெய் தேவனை பற்றி அறிவதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் அவர் சொல்லுகிற எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெளி 19:1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.

வெளி 19:2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.

வெளி 16:7 பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.

தேவனுடைய வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்.

வெளி 21:5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

வெளி 22:6 பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

தேவன் பரிசுத்தமும் உண்மையுமுள்ளவர்.

வெளி 6:10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

தேவனுடைய வழிகள் எல்லாம் சத்தியமும் நீதியுமானவைகள்.

வெளி 15:3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எப்படிப்பட்டது என்பது காரியமல்ல, அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சங்கீதம் 19:9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.

பிதாவாகிய தேவன் சத்தியமுள்ளவர் என்று இயேசு கிறிஸ்து சாட்சி கொடுத்தார்.

யோவான் 7:28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.

யோவான் 7:29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்.

ஒன்றான மெய்யான தேவனை அறிவது என்பது என்ன என்று தேவன் நமக்கு சொல்லுகிறார்.

எரேமியா 22:15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

எரேமியா 22:16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஒன்றான மெய்யான தேவனை அறிந்திருந்தோமானால் அவரிடம் இருள் இல்லை என்பது நமக்கு தெரியும்.

1யோவான் 1:5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

1யோவான் 1:6 நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

ஒன்றான மெய் தேவனை அறிவது என்றால் என்ன என்று அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

1யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

1யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல் மனிதன் எப்படி அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லக் கூடும்?

ஒன்றான மெய் தேவனை இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?

இயேசு கிறிஸ்து அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தார்.

எபிரெயர் 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

ஒன்றான மெய் தேவனை ஆபிரகாம் அறிந்திருந்தாரா?

ஆபிரகாம் தேவனுடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தார் என்பதின் மூலம் அவர் ஒன்றான மெய் தேவனை அறிந்திருந்தார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆதியாகமம் 18:19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

ஆபிரகாம் தேவனை அறிந்திருந்தது மாத்திரம் அல்ல அவர் தன் பிள்ளைகளுக்கும் தன் வீட்டாருக்கும் தேவனை அறியும்படி போதித்தார்.

ஒன்றான மெய் தேவனை ஆபிரகாம் அறிந்திருந்தார் என்பதற்கு நமக்கு இன்னும் கூடுதலாக சாட்சியும் இருக்கிறது.

ரோமர் 4:17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பிக்கையோடே விசுவாசித்தார்.

ரோமர் 4:18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படவில்லை.

ரோமர் 4:19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

ரோமர் 4:20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,

ஆபிரகாம் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தினான்.

ரோமர் 4:21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

ரோமர் 4:22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ரோமர் 4:23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

  • ஆபிரகாம் சோதனைகளை மேற் கொண்டதை அவருடைய செயல்களின் மூலம் காண்கிறோம்.
  • ஆபிரகாமின் உட்புறமான செய்கைகள் தேவனை அவர் விசுவாசித்தார் என்பதை காண்பிக்கிறது.

வெளிப்புறமான கிரியைகளை போல தேவன் உட்புறமான கிரியைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்.

மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.

ஆபிரகாம் தாம் தேவனை அறிந்திருக்கிறேன் என்பதை அவருடைய கட்டளைகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படிவதின் மூலம் நிரூபித்தார்.

யாக்கோபு 2:21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

யாக்கோபு 2:22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.

யாக்கோபு 2:23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

நாம் தேவனை அறிந்திருக்கிறோமா?

நாம் தேவனை அறிந்திருந்தால் அவருடைய கட்டளைகள் எல்லாம் சத்தியமானவைகள் என்றும் நீதியுள்ளவைகள் என்றும் நாம் விசுவாசித்து கீழ்ப்படிவோம்.

1யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

1யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

நாம் தேவனை அறிந்திருந்தால் நாம் மகிழ்ச்சியோடு மனந்திரும்புவோம்.

லூக்கா 13:1 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.

லூக்கா 13:2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

லூக்கா 13:3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.

நாம் தேவனை அறிந்திருந்தால் அவருடைய எல்லா கட்டளைகளையும் விசுவாசித்து அவர்மேல் நம்பிக்கை வைத்து கீழ்ப்படிவோம்.

அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

மூவாயிரம் யூதர்கள் தேவனை அறிந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றார்கள்.

அப்போஸ்தலர் 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

நாம் தேவனை அறிந்திருந்தால் நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவரை நீதிபரர் என்போம்.

லூக்கா 7:29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.

லூக்கா 7:30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.

நாம் தேவனை முழுவதுமாக அறிந்திருந்தால் எல்லா கட்டளைகளையும் நம்பி அவை எல்லாவற்றிக்கும் கீழ்ப்படிவோம்.

மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

இயேசு கிறிஸ்து தேவனை அறிந்திருந்தார் அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்தார்.

எபிரெயர் 5:8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

இயேசு கிறிஸ்து ஞானஸ்நானத்தினாலே தண்ணீர் மூழ்கினாலே தேவனுக்கு கீழ்ப்படிந்தார்.

மத்தேயு 3:13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

மத்தேயு 3:14 யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

மத்தேயு 3:15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

அநேகர் இன்னும் தேவனை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், அதற்கு காரணம் என்ன?

மத்தேயு 13:14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

மத்தேயு 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

நாம் தேவனை அறிந்து இருக்கிறோமா?

நாம் தேவனை அறிந்திருந்தால் அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் சந்தோஷமாய் கீழ்ப்படிவோம்.

1யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

1யோவான் 2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

1யோவான் 2:5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

1யோவான் 2:6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME