தேவனுடைய ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா?
ஒன்றான மெய்சபையைக் குறித்தும் அந்த சபையிலே பிரவேசிப்பதற்கு ஞானஸ்நானம் மாத்திரமே வழியாக இருக்கிறது என்பதை அநேக வேதவாக்கியங்களை ஆதாரமாக பார்த்து இருக்கிறோம்.
இப்போது தேவனுடைய ராஜ்யம் அல்லது பரலோக ராஜ்யம் என்பது ஒன்றான மெய் சபையாக இருக்கிறதா என்பதை பார்ப்போம்.
தானியேல் 2ம் அதிகாரம் 44ம் வசனத்தில் தேவன்ராஜ்யத்தைப் பற்றி தீர்க்கதரிசனமாக உரைத்து இருக்கிறார்.
அந்த ராஜாக்களின் நாட்களிலே தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார். (தானி 2:44)
அது எந்த ராஜ்யம் அது எப்போது ஸ்தாபிக்கப்படும்?
நேபுகாத் நேச்சார் ஒரு சொப்பனம் கண்டார். அந்த சொப்பனத்திற்கு அர்த்தம் தேவனே கொடுத்து இருக்கிறார்.
Dan 2:45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
Dan 2:28 மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
நேபுகாத் நேச்சார் பிரகாசமுள்ள ஒரு சிலையை அவர்பார்த்தார். அந்த சொப்பனத்தின் விளக்கத்தை தேவனே இந்த 2ம் அதிகாரத்தில் கொடுத்துள்ளார்.
Dan 2:31 ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
Dan 2:32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
Dan 2:33 அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.
Dan 2:34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
Dan 2:35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
அவர் கண்ட நான்கு உலோகங்களும் பூமி முழுவதையும் அரசாட்சி செய்த நான்கு ராஜ்யங்கள் ஆகும்.
- தலை – பசும் பொன் – பாபிலோன் ராஜ்யம் (தானி 2:36-38)
- மார்பும் புயமும் – வெள்ளி – மேதிய பெர்சியா ராஜ்யம்(தானி5:28,8:20.9:1)
- வயிறும் தொடையும் -வெண்கலம் – கிரேக்க சாம்ராஜ்யம் (தானி 2:39,8:21)
- கால்கள் – இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும்- ரோம சாம்ராஜ்யம் (தானி 2:33. 7:23-25)
நேபுகாத் நேச்சார் அந்த சிலையை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே கையால் பெயர்க்கபடாத ஒரு கல் உருண்டு வந்து எங்கே மோதினது பாருங்கள். அதன்பாதத்தில் மோதினது. அந்த பாதம் எந்த ராஜ்யம் என்று பார்க்கும் போது வசனமே நமக்கு சொல்லுகிறது அது ரோம சாம்ராஜ்யம்.
கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி நொறுக்கிப் போட்டது.
Dan 2:34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது
கைகளால் பெயர்க்கப்படாத அந்த கல் யார்?
Mat 21:44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Rom 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
1Pe 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,
1Pe 2:6 அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
1Pe 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று;
அந்த கல் இயேசுகிறிஸ்து என்று இந்த வசனங்கள் நமக்கு சாட்சி கொடுக்கிறது.
இயேசு கிறிஸ்து ரோம சாம்ராஜ்யத்தின் நாட்களில்தான் பிறந்தார்.
Luk 2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
- இயேசுகிறிஸ்து ரோம சாம்ராஜ்யத்தில் அகஸ்து ராயன் ஆட்சி செய்த போது தான் பிறந்தார்.
இந்த சாம்ராஜ்யத்தின் நாட்களில் தான் தேவன் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார்.
Dan 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
- அந்த ராஜாக்களின் நாட்களில்தான் தேவன் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று இந்த வசனம் சொல்லுவதை கவனியுங்கள்.
- அந்த ராஜ்யம் என்றென்றைக்கும் அழியாத ராஜ்யம் என்று சொல்லுகிறார்.
- அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை .(எந்தவொறு பூமிக்குரிய ராஜ்யமும் இதை மேற்கொள்ளாது)
- அது பூமிக்குரிய எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
Dan 2:35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறி போகும் போது என்ன கட்டளையிட்டார்?
Act 1:8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
அப்போஸ்தலர்கள் எங்கெல்லாம் சாட்சி கொடுப்பார்கள் என்று கிறிஸ்து அறிவித்தார்?
1. எருசலேமிலும்
2. யூதேயா முழுவதிலும்
3. சமாரியாவிலும்
4. பூமியின் கடைசிபரியந்தமும்
இந்த வசனம் சத்தியம் என்றால் அந்த ராஜ்யம் பூமியெல்லாம் நிரப்பிற்றா?