உபவாசத்தைப் பற்றி வேத வாக்கியங்கள் நமக்கு என்னக் கற்றுக் கொடுக்கிறது

உபவாசத்தைப் பற்றி வேத வாக்கியங்கள் நமக்கு என்னக் கற்றுக் கொடுக்கிறது?

இன்றைக்கு அநேகர் உபவாசத்தினால் தான் நாம் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று போதித்து அநேகரை உபவாச அடிமையாக வைத்து இருக்கிறார்கள்.

ஆதியாக புஸ்தகத்தில் இருந்த பரிசுத்தவான்கள் உபவாசம் இருந்தார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

ஆனால் அந்த புஸ்தகத்தில் இருந்த எல்லா பரிசுத்தவான்களையும் தேவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மிகச்சிறந்த பலனை அளித்து இருக்கிறார்.

அதனால் உபவாசம் இருந்தால் தான் ஆசீர்வாதமான பலனைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற மனநிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

உபவாசத்தைக் குறித்து தேவன் நியாயப்பிரமாணத்தில் எதுவும் கட்டளை கொடுக்கவில்லை.

பெரும்பாலும் நியாயப்பிரமாணத்தின் காலகட்டத்தில் தேவனுடைய பிரமாணங்களை யார் மீறி நடந்து பாவம் செய்யும் போது தேவனை அவர்களை அழிக்க முயற்சி செய்யும் போது அவர்கள் உபவாசித்து மனந்திரும்பி கெஞ்சி தேவனிடத்திலிருந்து இரக்கம் பெற்று தப்பித்து இருக்கிறார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களும் சில புறஜாதி ஜனங்களும் மனந்திரும்பி தங்களை வருத்தி தாழ்மைப்படுத்திய போது தேவன் அதை கண்டு மனம் இறங்கி அவர்களுக்களுடைய ஜெபத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறார்.

நாபோத் விசயத்தில் சிக்கிக்கொண்ட ஆகாப் தேவனிடத்தில் உபவாசம் பண்ணி தன்னை தாழ்த்தி தப்பித்துக் கொண்டார்.
1இராஜாக்கள் 21:27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.

ஆகாப்புக்கு தேவனுடைய கண்களில் இரக்கம் கிடைத்தது.

நினிவே பட்டணத்தார் தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பி உபவாசம் இருந்தார்கள்.

யோனா 3:5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

யோனா 3:6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.

யோனா 3:7 மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,

யோனா 3:8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.

நினிவே பட்டணத்தாரைத் தேவன் மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
யோனா 3:10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

உபவாசம் என்பது என்ன?
தங்களை முழுவதுமாக தாழ்த்தி கொள்ளுவது அல்லது வருத்திக் கொள்ளுவது.

இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் என்ன எதிர்ப்பார்த்தாரோ அப்படி உபவாசம் பண்ணவில்லை.

தங்கள் இச்சையின் படி நடந்து இஸ்ரவேலர்கள் உபவாசம் இருந்தார்கள்.

ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

நம்முடைய இச்சைகளை நிறைவேற்றுவதற்காக உபவாசம் இருந்தால் அதை தேவன் ஏற்றுக் கொள்வதில்லை.

வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசித்தால் தேவன் அதை ஏற்றுக் கொள்ளுவதில்லை.

ஏசாயா 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.

மாயமான தாழ்மையில் செய்யக் கூடிய உபவாசத்தை தேவன் தனக்கு பிரியமில்லை என்று சொல்லுகிறார்.

ஏசாயா 58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

தேவன் எந்த உபவாசத்தை அவர் ஏற்றுக் கொள்ளுகிறார்?
ஏசாயா 58:6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும்,

ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

இஸ்ரவேல் ஜனங்கள் பாபிலோன் தேசத்தில் அடிமையாக இருந்த போது எழுபது வருஷங்களும் ஐந்தாம் மாதம் ஏழாம் தேதி உபவாசம் இருந்தார்கள் அதைக்குறித்து தேவன் என்ன சொல்லுகிறார்?

சகரியா 7:5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்?

சகரியா 7:6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?

இஸ்ரவேல் ஜனங்களின் எழுபது வருஷ உபவாசத்தை தேவன் கவனிக்கவே இல்லை. காரணம் தேவனுடைய கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிய வல்லை.

சகரியா 7:12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.

நாம் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் உபவாசம் இருந்தால் அந்த உபவாசத்தைக் கவனிப்பது இல்லை.

புதிய ஏற்பாட்டில் உபவாசத்தைக்குறித்து தேவனுடைய கட்டளை என்ன?

மேட்டிமையான இருதயத்தோடு இருந்த பரியேனுடைய உபவாசத்திற்கு தேவன் பதில் அளிக்கவில்லை.
லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

உபவாசம் பண்ணாத இருதயத்தில் தாழ்மையாய் இருந்த ஆயக்காரன் ஜெபத்தை தேவன் ஏற்றுக் கொண்டார்.

கட்டாயமான உபவாசத்தை தேவன் ஏற்றுக் கொள்வதில்லை.

கொர்நேலியு தன் வீட்டிலே உபவாசித்து ஜெபம் பண்ணின போது தேவன் அந்த ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்.

அப்போஸ்தலர் 10:30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:

அப்போஸ்தலர் 10:31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது.

சபையார் உபவாசம் பண்ணாமல் ஒருமனப்பட்டு பேதுருவுக்காக ஜெபித்த ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார்.

அப்போஸ்தலர் 12:11 பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

அப்போஸ்தலர் 12:12 அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

பவுலும் சீலாவும் ஒருமனப்பட்டு ஜெபித்த ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார்.

அப்போஸ்தலர் 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 16:26 சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

உபவாசம் என்பது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கட்டாயம் கிடையாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளின்படி உபவாசம் இருக்கும் போது தான் தேவன் அதற்கு பலன் அளிக்கிறார்.

இன்றைக்கு பெரிய பேனர்கள் மூலம் உபவாச திருவிழா உபவாச பெருவிழா என்று அறிவித்து விளம்பரப்படுத்துகிறார்களே அவர்களை பற்றி என்ன?

மத்தேயு 6:16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.

மத்தேயு 6:18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

உபவாசம் என்பது பெருவிழாவோ திருவிழாவோ அல்ல தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நம்முடைய இருதயத்தை தாழ்த்தி பணிந்து அவரை மாத்திரமே அண்டிக் கொள்ளுவது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME