வெளிப்படுத்துதலா அல்லது உணர்ந்து கொள்ளுதலா

வெளிப்படுத்துதலா அல்லது உணர்ந்து கொள்ளுதலா?

உணர்ந்து கொள்ளுதலை தருவதில் தேவனுடைய வேலை என்ன?

தனிப்பட்ட மனிதனிடத்திலும் உலகத்திலிடத்திலும் தேவனுடைய வேலையைப் பற்றி பார்க்க போகிறோம்

தேவனுக்கு ஒரு தீர்மானம் உள்ளது அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடு;க்க யாராலும் முடியாது

Rom 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

உலகத்தின் முடிவில் இயேசுவின் பாதத்தின் கீழ் எல்லா சத்துருக்களும் பாதபடியாக்கி போடப்பட்டு இருப்பார்கள்

தேவனுடைய பிள்ளைகள் அவருடைய தீர்மானத்தின்படி கிறிஸ்துவின் சாயலில் இருப்பார்கள்

தேவன் மனிதனின் இருதயத்துக்குள் நேரடியாக கிரியை செய்கிறாரா?

இன்றைக்கு சகோதரருக்குள்ளே இந்த பாடத்தை பற்றி தவறான புரிந்து கொள்ளுதல் இருக்கிறது

இந்த தவறான புரிந்து கொள்ளுதலுக்கு ஒரு காரணம் மிகப் பெரிய கள்ள போதனை தான்

1) சிலர் தேவன் நடத்துவதாகவும்,  செய்ய வைப்பதாகவும், புதிய வெளிப்படுத்தலை தருவதாகவும் சிந்தனைகளை தருவதாகவும் விசுவாசிக்கிறார்கள்

2) இதற்கு எதிராக சிலர் தேவன் ஒன்றும் செய்வதில்லை என்று விசுவாசிக்கிறார்கள்

3) தேவன் சில வழிகளில் மாத்திரம் கிரியை செய்கிறார் என்று சிலர் விசுவாசிக்கிறார்கள்

நாம் தேவனுடைய வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்ளுவது

தேவன் நமக்கு எப்படி உணர்ந்து கொள்ளுதலை தருகிறார்?

Mat 7:7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;

Mat 7:8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் புதிய வெளிப்படுதலுக்காக கேட்க கூடாது

நாம் வெளிப்படுத்தலுக்கும் உணர்ந்து கொள்ளுதலுக்கும் வித்தியாசப்படுத்தி புரிந்து கொள்ள வேண்டும்

Joh 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

தேவனின் முழு வெளிப்படுத்தலும்(சகல சத்தியமும்) நம்மிடம் உள்ளது இனி எந்த வெளிப்படுத்தலும் அவசியமில்லை

இப்போது நமக்கு தேவைப்படுவது உணர்ந்து கொள்ளுதல் மாத்திரமே அதாவது அவருடைய வார்த்தையின் படியான புரிந்து கொள்ளுதல்

தேவன் வெளிப்படுத்தினது நம்மிடம் இருக்கிறது

2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

வேத வாக்கியங்கள் நம்மை பூரணமாக்கவும் சகல நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவர்களாக்கும்

நமக்கு இன்னும் அதிகமான வெளிப்படுத்தல் என்பது அவசியமில்லை ஏனென்றால் நாம் சகல சத்தியத்தையும் பெற்றுக் கொண்டு இருக்கிறோம்

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து கர்த்தருக்கு பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

எல்லா ஞானமும் ஆவிக்குரிய உணர்ந்து கொள்ளுதலாலும்  நாம் நிரப்பப்பட வேண்டும்

Col 1:9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

Col 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

Col 1:11 சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

நமக்கு கொடுக்கப்பட்ட அவருடைய வார்த்தையினால்(வசனங்களினால்) நமக்கு உணர்ந்து கொள்ளுதலை தருகிறார்

1)தேவன் மனுஷருடைய இருதயத்திற்குள் நேரடியாக கிரியை நடப்பிக்கிறாரா?

இது மனுஷனுடைய வார்த்தை நாம் மாம்ச ரீதியாய் சிந்திக்க கூடாது

2)தேவன் இன்றைக்கு உலகத்தில் கிரியை நடப்பிக்கிறாரா?

தேவன் என்ன செய்கிறார் என்பதை நாம் தேவ வாக்கியத்தின் மூலம் அதிகம் பார்க்க வேண்டும்

தாவீது தேவனிடத்தில் உணர்ந்து கொள்ளுதலை கேட்டு அநேக முறை ஜெபித்தார்

Psa 119:34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

வெளிப்படுத்தலுக்காக தாவீது ஜெபித்தாரா?

தாவீது எதை உணர்ந்து கொள்ள தேவனிடத்தில் ஜெபித்தார்?

Psa 119:27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

முன்பே வெளிப்படுத்தப்பட்ட கட்டளைகளின் வழியை உணர்ந்து கொள்ளும்படி அவர் ஜெபித்தார்

Psa 119:73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

கற்றுக் கொண்ட கற்பனைகளை உணர்ந்து கொள்ள ஜெபித்தார்

முன்பே தேவன் கொடுத்தவற்றை தாவீது அறிந்து கொள்ள வேண்டும் என்றார்

Psa 119:125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

தாவீது நித்திய ஜீவனை பற்றி அறிந்திருந்தார் அவருக்கு தேவனுடைய சாட்சிகளினால் நீதியை உணர்ந்து கொள்ள வேண்டியதாய் இருந்தது

Psa 119:144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

நாம் சொந்த உணர்ந்து கொள்ளுதலினால் நாம் கற்றுக் கொள்ள கூடாது

Pro 3:5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

தேவனுடைய உணர்ந்து கொள்ளுதலை மனுஷனின் உணர்ந்து கொள்ளுதலினால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்?

1) தேவனுடைய வார்த்தைகளை மாற்றி நமது உணர்ந்து கொள்ளுதலினால் நிரூபித்தால் அது தேவனுடைய உணர்ந்து கொள்ளுதல் ஆகாது

2) தேவனுடைய வார்த்தைகளை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவருடைய வார்த்தையோடு ஒன்றும் கூட்டாமல் குறைக்காமல் இருக்க வேண்டும்

தேவன் வெளிப்படுத்தினதை(அவரது வார்த்தைகளை) நாம் உணர்ந்து கொள்ளாத போது அது நமக்கு எந்த நன்மையும் உண்டாக்காது

நாம் உணர்ந்து கொண்டால் தான் கனி கொடுக்க முடியும்

இயேசு ஜனங்களிடம் கேட்கும்படி மாத்திரம் எச்சரிக்கவில்லை(அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை) அவற்றை உணர்ந்து கொள்ளுபடியும் எச்சரித்தார்

Mat 15:10 பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.

கேட்பதற்கும் உணருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது

விதைக்கிறவன் உவமையில் ஒவ்வொருவரும் வார்த்தைகளை கேட்டார்கள்

Mat 13:19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

ஒருவர் உணர்ந்து கொள்ளுவதற்கும் ஒருவர் உணர்ந்து கொள்ளாததற்கும் வித்தியாசங்கள் உள்ளது

Mat 13:23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.

முதலாம் நபர் உண்ர்ந்து கொள்ளவில்லை எனவே அந்த வார்த்தைகள் அவருக்கு பிரயோஜனப்படவில்லை (வெளிப்படுத்தப்பட்டது திரும்ப எடுத்துப்போடப்பட்டது)

கடைசி நபர்கள் வெளிப்படுத்தினதை கேட்டது மாத்திரமல்ல உணர்ந்து கொண்டார்கள் அது கனி கொடுக்க செய்தது, நாம் கனி கொடுக்க உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்

தேவனுடைய சித்தத்தை உணர்ந்து கொள்ளுவதற்கு மூலக்காரணமே இந்த ஏவப்படுதல் தான்

Col 1:9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,

Col 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

Col 1:11 சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.

நாம் சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து எல்லா ஞானத்திலும் ஆவிக்கரிய உணர்ந்து கொள்ளுதலிலும நிரப்பப்பட வேண்டும்

எந்த நற்கிரியையும் செய்யவும் உபதேசம் பண்ணவும், கண்டனம் பண்ணி கடிந்து கொண்டு புத்தி சொல்லவும் வெளிப்படுத்தல் பிரயோஜனப்படுகிறது

2Ti 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2Ti 3:17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

தேவனுடைய வெளிப்படுத்தல் நமக்கு பிரயோஜனமுள்ளது அது இல்லாமல் எந்த நற்கிரியையும் செய்யவும் உபதேசம் பண்ணவும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்லவும் முடியாமல் போகும், மேலும் நாம் உணர்ந்து கொள்ளவும் முடியாது

தாவீதை போல வெளிப்படுத்தல் நமக்கு பிரயோஜனப்படுகிறது ஏனென்றால் அதன் மூலமாக நாம் போதிக்கப்படவும் உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது

நாம் எப்படி உணர்ந்து கொள்ளுதலை அடைகிறோம் அல்லது பெறுகிறோம்?

இதில் தேவன் நமக்கு ஏதாவது உதவி செய்கிறாரா?

தேவன் ஒருவர் மாத்திரமே நமக்கு இந்த உணர்ந்து கொள்ளுதலை தருகிறவர்

அவர் மறைக்கவும் செய்கிறார்

யார் உணர்ந்து கொள்வார் யார் குருடாய் இருப்பார் என்பதையும் அவர் நமக்கு சொல்கிறார்

மனிதனுடைய இருயத்தில் என்ன இருக்கிறதோ அதுவே உணர்ந்து கொள்ளுதலை குறித்து பொறுப்பாக இருக்கிறது

தேவனுடைய உணர்ந்து கொள்ளுதலை நாம் சிந்தித்தால் உணர்ந்து கொள்ளுதல் நமக்கு எப்படி வரும்?

கர்த்தர் நமக்கு தருவார்

2Ti 2:7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.

சாலமோனிற்கு ஞானத்தையும் உணர்ந்து கொள்ளுதலையும் தருவது பற்றி தாவீது யார் பார்த்துக் கொள்ளுவார் என்கிறார்?

கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளுவார்

1Ch 22:12 கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

1Ch 22:13 கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

நமக்கு சாலமோனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

நாம் தேவனை புரிந்து கொள்வதில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வேத வாக்கியம் நமக்கு உணர்த்துகிறது

Mat 11:25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

வெளிப்படுத்துவது மாத்திரம் அல்ல பெருமையுள்ளவர்களுக்கு சத்தியத்தை மறைக்கவும் செய்கிறார்

நாம் அவருடைய வார்த்தையிலிருந்து உணர்ந்து கொள்ளுவதும் ஆசீர்வாதத்தையும் அடைவதும் அடையாமல் போவதில் தேவன் செல்வாக்கு உடையவராய் இருக்கிறாரா?

நாம் உணர்ந்து கொள்ளாதபோது அவர் நமக்கு தருவதில்லை

யார் உணர்ந்து கொள்ளுகிறார்கள் யாருக்கு தேவன் உணர்ந்து கொள்ளுதலை கொடுக்கிறார்?

சிறு பிள்ளைகளை போல தன்னை தாழ்த்துகிறவர்களுக்கு அவர் உணர்ந்து கொள்ளுதலை கொடுக்கிறார்

மறைவானவைகளை பற்றிய உணர்ந்து கொள்ளுதலை உடையவர் யார்?

இந்த வகையான நபர்களுக்கு தேவன் உணர்ந்து கொள்ளுதலை தருகிறதில்லை

Luk 18:9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

உணர்ந்து கொள்ளுதலை பெறாத சில வித்தியாசப்பட்ட வகையான ஜனங்களை பற்றி நாம் குறித்துக் கொள்ளவேண்டும்

பெருமையுள்ளவர்களுக்கு தேவனுக்கு எதிராக உள்ளவர்கள் அவர்களுக்கு தேவன் உணர்ந்து கொள்ளுதலை தருவதில்லை

வேண்டாம் என்கிற மக்களுக்கு தேவன் உணர்ந்து கொள்ளுதலை தருகிறதில்லை

Mat 13:13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

Mat 13:14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

Mat 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.

அவர்கள் கேடக வேண்டாம் காண வேண்டாம் உணர்ந்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள்

தேவனை விட்டு அவர்கள் இருதயம் துரமாய் இருக்கிறது

தேவனுடைய தெளிவான பாகத்தை இந்த வேத வாக்கியம் வெளிப்படையாக கூறுகிறது

Rom 11:7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்.

Rom 11:8 கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

அவர்கள் காணாதபடிக்கும் கேளாதபடிக்கும் தேவன் கனநித்திரையின் ஆவியை கொடுத்துள்ளார்

நாம் உணர்ந்து கொண்டாலும் உணர்ந்து கொள்ளவிட்டாலும் யார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்?

உணர்ந்து கொள்ளுதலை அடைய நாம் யாரை மாத்திரம் முழுவதும் சார்ந்திருக்க வேண்டும்?

தேவனை பற்றிய சத்தியத்தை அன்புகூறாதவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

2Th 2:10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.

2Th 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,

2Th 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

என்ன காரணத்தினால் தேவன் அவர்களுக்கு கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார்?

சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற் போனபடியால் அப்படி செய்கிறார்

தேவன் யாருக்கு உணர்ந்து கொள்ளுதலை தருவார்?

Pro 2:1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

Pro 2:2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

Pro 2:3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

Pro 2:4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

Pro 2:5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

Pro 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

இந்த வசனத்தில் ஞானம் எங்கிருந்து வருகிறது?

தேவனிடத்திலிருந்து வருகிறது

தேவன் யாருக்கு உணர்ந்து கொள்ளுதலை  கொடுக்கிறார்?

1) அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொள்பவர்கள்

2) புத்தியிடமாய் தங்கள் இருதங்களை அமரப்பண்ணுகிறவர்கள்

3) ஞானத்தையும் புத்தியையும் வா என்று கூப்பிட்டு அழைக்கிறவர்கள்

4) வெள்ளியைப் போல் நாடுகிறவர்கள்

5) புதையலை போல தேடுகிறவர்கள்

ADD YOUR COMMENT

Powered By Indic IME