வாரத்தின் முதல் நாள் மாத்திரம் ஆராதனை நாள் என்று எந்த வேத வாக்கியம் போதிக்கிறது?
இன்றைக்கு அநேகர் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்று கிழமை மாத்திரம் தான் தேவனை ஆராதிக்க வேண்டும் என்று போதிக்கிறார்கள் அதை விசுவாசிக்கவும் செய்கிறார்கள்.
வாரத்தின் முதல்நாளில் (ஞாயிறு) நாம் செய்ய வேண்டிய இரண்டு கட்டளையின் நிமித்தமாக தான் நாம் கூடிவருகிறோம்.
கர்த்தருடைய பந்தி(இராபோஜன பந்தி):
Act 20:7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
Act 2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
காணிக்கை கொடுப்பது:
1Co 16:2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன் தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.
நாம் கீழே உள்ள எந்த காரியத்தின் நிமித்தம் தேவனை ஆராதிக்கிறோம்.
- ஜெபம்
- பாடல்
- தேவனுடைய வார்த்தைகளை போதிப்பது மற்றும் கேட்பது
- கர்த்தருடைய பந்தி
- கர்த்தருக்காக உற்சாகமாக காணிக்கை கொடுப்பது
- கர்த்தருடைய பந்தியையும் காணிக்கையும் வாரத்தின் முதல் நாள் (ஞாயிற்று) மாத்திரம் அநுசரிக்க முடியும் மற்ற நாளில் நாம் அநுசரிக்க முடியாது.
- ஆனால் பாடல், ஜெபம், தேவனுடைய வார்த்தைகளை போதிப்பது போன்ற காரியங்களை மற்ற நாளிலும் (திங்கள் முதல் சனிகிழமை வரை) நாம் தேவனுடைய கட்டளைகளைபின் பற்றி தேவனை தொழுது கொள்ள முடியும்.
உள்ளான மனுஷனில் நாம் எதைக் கொண்டு தேவனை தொழுது கொள்ள வேண்டும்?
நாம் தேவனை ஆராதிக்கும் (தொழுது கொள்ளும்) போது நம்முடைய இருயத்திலிருந்து தான் தேவனை ஆராதிக்க வேண்டும்.
நாம் தேவனுக்கு ஆராதனை செய்யும் போது நம்முடைய இருதயம் தேவனிடத்தில் கிட்டி சேரவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.
Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
ஆராதனையில் தேவனிடத்தில் ஜெபிக்கும் போது நம்முடைய இருதயத்தின் மூலமாக தான் தேவனிடத்தில் சேருகிறோம்.
1Jo 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
1Jo 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
1Jo 3:22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
ஆராதனையில் நாம் பாடலை பாடும் போது அந்த பாடல் இருதயத்திலிருந்து வரவேண்டும்.
Col 3:16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
நாம் ஆராதனையில் காணிக்கை கொடுக்கும் போது இருதயத்தில் நியமித்துக் கொண்டதை கொடுக்கவேண்டும்.
2Co 9:7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
தமிழில் மனம் என்று மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். ஆனால், கிரேக்க வேதாகமத்தில் தேவன் இருதயம் என்று தான் சொல்லுகிறார்.
ஆராதனையில் தேவனுடைய வார்த்தைகளை கேட்கும் போது இருதயம் தான் குத்தப்படுகிறது.
Act 2:37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
1Co 14:25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.
ஆராதனையில் கர்த்தருடைய (இராபோஜன) பந்தியில் நாம் பங்குபெறுகின்ற போது இருதயத்தில் தான்சோதித்து அறிந்து பங்கு பெற வேண்டும்.
1Co 11:28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1Jo 3:21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து,
ஆராதனையில் முழுவதும் நம்முடைய இருதயத்தின் மூலமாக தான் தேவனை ஆராதிக்க வேண்டும்.
இன்றைக்கு அநேகபிரிவினை சபையார்கள் ஞாயிற்று கிழமை தேவனை ஆராதிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.
அவர்கள் எப்படி ஆராதிக்கிறார்கள்?
1) போதிக்கிறார்கள் (சொந்த சாட்சிகள்)
2) தசமபாக காணிக்கை
3) பாடல் (இசையோடு)
இதை தான் ஆராதனை என்று சொல்லுகிறார்கள். இதெல்லாம் வீணான ஆராதனையாக இருக்கிறது.
- இந்த காரியங்களை மற்றநாளில் செய்யும் போது (திங்கள் முதல் சனி கிழமை வரை) ஆராதனை என்று அவர்கள் அழைப்பதில்லை, ஞாயிற்று கிழமை மாத்திரம் தான் தேவனை ஆராதிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். இது எப்படி ஆராதனை ஆகும்?
வாரத்தின் முதல் நாள்மாத்திரம் தேவனை ஆராதிக்க வேண்டும் என்பது மனுஷனுடைய சுயமான உபதேசங்களாக இருக்கிறது. தேவனுடைய வாக்கியங்கள் அப்படி ஒருபோதும் போதிக்கவில்லை.
Luk 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
Act 5:42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
Act 17:11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
சபையாக நாம் ஏன் கூடிவருகிறோம்?
Heb 10:24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;
Heb 10:25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
Eph 4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,
Eph 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
- அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி தான் சபையாககூடி வருகிறோம்.
- கிறிஸ்துவுக்கு ஒப்பாக நாம் வளரும்படி தான் நாம் சபையாக கூடிவருகிறோம்.
- சபையானது பக்திவிருத்தியிலே வளரும்படி தான் நாம் சபையாக கூடிவருகிறோம்.
கர்த்தருக்கு சித்தமானால் தொழுது கொள்ளுதலைக் குறித்து தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம்.