வேதவாக்கியம் தவறாததாயிருக்க.
to whom the word of God came,and the Scripture cannot be broken. (John 10:35)
Mt5:18,19; Mt24:35; Mt26:53-56; Mt27:35; Lk16:17; Lk24:26,27,44-46; Act1:16; Ro9:6; 2Tim3:16,17; Jas4:5; Rev17:17; Rev22:18,19.
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
(யோவான் 10:35)
யோவான் 10:35; மத்தேயு 5:18,19; மத்தேயு 24:35; மத்தேயு 26:53-56; மத்தேயு 27:35; லூக்கா 16:17; லூக்கா 24:26,27,44-46; அப்போஸ்தலர் 1:16; ரோமர் 9:6; 2தீமோத்தேயு 3:16,17; யாக்கோபு 4:5; வெளி 17:17; வெளி 22:18,19.
தவறாத வேதம்:
கட்டப்பட்டுள்ள ஒன்றை கட்டவிழ்ப்பதுபோல விவிலியத்தை தங்களிஷ்டம்போல் அவிழ்த்து, உடைத்து, வியாக்கியானித்து, ஆராய்ந்து பொருள்கொள்ள இயலாது. விவிலியம் கர்த்தருடைய வார்த்தை. அது தேவனால் கொடுக்கப்பட்டது. பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டது. பரிசுத்த மனிதர்களினால் ஆதாரப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கர்த்தருடைய வாக்கியங்களும் ஆவியினால் முத்திரைபோடப்பட்டுள்ளது. அது மனிதர்கள் தங்களிஷ்டம்போல் வியாக்கியானபடுத்தலாகாது என்பதற்கான முத்திரை. கர்த்தருடைய வாக்கியம் எதற்காய் தரப்பட்டுள்ளதோ அக்காரியம் நிறைவேற்றப்படும்படியாய் ஆவியானவர் கிரியை செய்கிறார். அதன் நிறைவேற்றத்தை ஒருவராலும் தடுக்கவியலாது.
இயேசுகிறிஸ்து உலகில் தோன்றுவது குறித்து விவிலியம் கூறியது. அக்கூற்றானது காலம் நிறைவேறியபோது நடந்தேறியது. எவராலும் அவரின் பிறப்பை தடைசெய்ய இயலவில்லை. அதைபோன்றே அவரது இரண்டாம் வருகை குறித்தும் விவிலியம் தெளிவாகக் கூறுகின்றது. காலம் நிறைவேறும்போது அவர் வெளிப்படுவார். அவரது வெளிப்படுதலை எவராலும் தடுக்கவியலாது.
நம்மைக்குறித்து தேவன் நமக்கு தந்துள்ள வாக்குதத்தங்களும் நிறைவேறி தீரும். தேவன் தம் ஆவியினால் நமக்கு தந்துள்ள உறுதிமொழிகள் பொய்யானவைகளல்ல, மெய்யானவைகளே. எனவே அவரை நம்பி அவர் சொன்னது நிறைவேறும் வரையிலும் விசுவாசத்துடன் காத்திருங்கள்.
உலகத்தின் அழிவைக் குறித்தும், சாத்தானின் இறுதிமுடிவு குறித்தும் விவிலியம் திறம்பட கூறியுள்ளது. அது மாறாதது. வழுவாதது. அது நிறைவேறியே தீரும். உலக அழிவு வரும் முன்பதாக மனந்திரும்பி இயேசுவை விசுவாசித்து அவரை பின்பற்றுங்கள்.
கர்த்தாவே நீர் மொழிந்த வாக்குகள் அடிப்படையிலே அனைத்தும் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. எனவே நாங்கள் உம் வார்த்தைகளை நினைவில் கொண்டு ஞானமாய் நடக்க உதவிடும்.