நீங்கள் ஓய்வுநாளிலும் விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள்.
Moses therefore gave you circumcision,and you circumcise a man on the Sabbath. (John 7:22)
Gen17:10-14; Gen21:4; Lev12:3; Mt12:5; Jn5:18; Act7:8; Act15:1; Ro4:9-11; Gal3:17; Phil3:5; Col2:11,13; Col3:11.
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று, பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான், நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.
(யோவான் 7:22)
ஆதியாகமம் 17:10-14; ஆதிியாகமம் 21:4; லேவியராகமம் 12:3; மத்தேயு 12:5; யோவான் 5:18; அப்போஸ்தலர் 7:8; அப்போஸ்தலர் 15:1; ரோமர் 4:9-11; கலாத்தியர் 3:17; பிலிப்பியர் 3:5; கொலோசெயர் 2:11,13; கொலோசெயர் 3:11.
விருத்தசேதனம்:
இது தேவனால் கொடுக்கப்பட்ட ஆதி கட்டளை.
பின்னர் இது நியாயபிரமாண விதிகளில் இணைக்கப்பட்டது. பின்னாட்களில் இது ஒரு சடங்காக மாறியது.
எரேமியா தீர்க்கதரிசி மாம்ச விருத்தசேதனத்தைவிடவும் இருதய விருத்தசேதனத்தை முக்கியபடுத்தினார். யூதர்களின் விருத்தசேதனமானது பின்னாட்களில் கிறிஸ்தவத்தின் ஞானஸ்நான ஒழுங்குமுறைக்கு இணையானதாக கருதப்பட்டது. விருத்தசேதனம் பலமுறைகளில் அழைக்கப்படுகிறது.
- மாம்ச விருத்தசேதனம்..
- இருதய விருத்தசேதனம். எரேமியா 4:4
- ஆவி விருத்தசேதனம். பிலிப்பியர் 3:3
- கையால் செய்யப்படாத விருத்தசேதனம். கொலோசெயர் 2:11
விருத்தசேதனம் நமக்கு கற்றுதரும் உயரிய பாடம்.
- தேவனுக்கு கீழ்படிய வைக்கிறது.
- தேவனுக்கு பிரியமானவர்களாக- தேவனின் ஜனமாக காட்டுகிறது.
- மாம்ச அழுக்கை நீக்குகிறது.
- இருதயத்தில் உள்ள கீழ்படியாமை, கசப்பு, வெறுப்பு, எதிர்த்து நிற்கும் குணம் மாற்றி சாந்தம், அமைதி உள்ளவர்களாய் மாற்றுகிறது.
- ஆவியானவர் தங்கும் இடமாக மாறுகிறது.
மாம்ச விருத்தசேதனத்தை விட புதுசிருஷ்டியாக்கும் இதர விருத்தசேதனமே முக்கியமானது. சடங்கு நிராகரிக்கப்பட்டாலும் பொருள் மாறுவதில்லை.
கர்த்தாவே, எங்கள் மாம்ச அழுக்கு நீங்க மாம்சவிருத்தசேதனத்தையும், இருதய அழுக்கு நீங்க இருதய விருத்தசேதனத்தையும் ஆவியில் எளிமை உண்டாக ஆவி விருத்தசேதனத்தையும் தந்து தூய்மை ஆக்கியதற்காய் நன்றி.