வயல்நிலங்கள்

வயல்நிலங்கள் அறுப்புக்கு ஆயத்தமாயுள்ளது.

for they are already white for harvest!. (John 4:35)
Mat9:35-38; Lk10:1-3; Rom13:11-14; 1Cor3:9; 1Cor9:10; 2Tim2:6; 2Tim4:1,2.

அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 4:35)

மத்தேயு 9:35-38; லூக்கா 10:1-3; ரோமர் 13:11-14; 1 கொரிந்தியர் 3:9; 1 கொரிந்தியர் 9:10; 2 தீமோத்தேயு 2:6; 2 தீமோத்தேயு 4:1,2.

அறுவடையின் காலம்:

நான்கு மாதங்கள் கடந்து அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் இப்பொழுதே அறுவடைக்கு தயாராய் இருக்கின்றது என்று இயேசு கூறுகின்றார். எனவே, இது வயல் நிலங்கள் பற்றிய கூற்று அல்ல, சுவிசேஷத்தினால் இரட்சிக்கப்பட வேண்டியதின் காலம் குறித்து கூறப்பட்டுள்ளது எனலாம்.

இதனை Spiritual Harvest எனவும் கூறுவர். ஆத்துமாக்களை அறுவடைசெய்ய வேண்டிய காலம் வந்திருக்கிறது.

இயேசுவின் ஊழிய துவக்கமானது மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபமாயுள்ளது என்பதாகும். பரலோக ராஜ்ஜியத்திற்குரிய பிரஜைகள் மனந்திரும்பியவர்களே. இந்த மனந்திரும்புதலையே அறுவடை செய்தல் எனலாம்.

மனந்திரும்புதல் உடனே நடந்துகொண்டிருப்பதால் அறுவடையின் காலம் வந்துவிட்டது எனலாம்.

பரலோகத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு பாவ உலகிலிருந்து, அழியும் உலகிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டும்.

இயேசுவின் செய்தியை – சுவிசேஷத்தை கேட்டு மனந்திரும்பியவர்கள் ஏராளம். அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரியவர்களானார்கள். இன்னும் ஏராளமானோர் மனந்திரும்ப ஆவலாயுள்ளனர். அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். இயேசுவின் செய்தி அறிவிக்கப்பட வேண்டும். அவர்களை அறுவடை செய்து ராஜ்ஜியத்துக்குட்படுத்த வேண்டும்.

இது…..
ராஜ்ஜிய எழுச்சியின் காலம். மனந்திரும்புதலின் காலம்.
இரட்சிக்கப்படுதலின் காலம். பிரசங்கிக்கப்படுதலின் காலம்.
புறப்பட்டு போகிற காலம்.
அறுவடை செய்கிற காலம்.
ராஜ்ஜியத்தில் சேர்ப்பதின் காலம். கிருபையின் காலம். சுவிசேஷமயமாக்குதலின் காலம்.

தற்காலத்தில் அறுவடை செய்யப்படுவது எழிதானதாக தெரியவில்லை. தேவ ராஜ்ஜியத்தில் சேர்க்கப்படுகிறவர்களின் தொகை குறைகிறது. களைகளின் பெருக்கம், பாவமனிதர்கள், கீழ்படியாதவர்கள், ராஜ்ஜியத்துக்கான எதிர்ப்பு, சுவிசேஷத்தை மிதித்தல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.

தேவன் மவுனமாயிருக்கிறார்.
ஆனால் மவுனம் கலைகிறது.
தேவன் எழும்புகிறார்.
கோபாக்கினை கொட்டப்படுகிறது. கீழ்படியாதோர் நரகிற்குள் தள்ளப்படவேண்டிய நாள் வந்துவிட்டது. உலகியல் பொருட்கள் அழிக்கப்படுகின்றது,
ஆடம்பர நாகரிகம் சிதைக்கப்படுகின்றது, கிருபையின் காலம் முடியப் போகின்றது.
எச்சரிக்கை.

தேவ கோபாக்கினையின் அறுவடை வந்துவிட்டது.

கர்த்தாவே, நீர் நியமித்த அறுவடையை நாங்கள் செம்மையாய் செய்யாது சோம்பலின் கைகள் உள்ளவர்களாய் இருந்தோம். எங்களை மன்னியும். கிருபையின் காலம் முடியுமுன்பே நாங்கள் தீவிரமாய் செயல்பட பரிசுத்த ஆவியானவரை கொண்டு எங்களை எழுப்பதலடைய செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME