தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து என்னவாக இருக்கிறார்?
ஒன்றான மெய் சபையை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் அந்த வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம் என்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம்.
எது ராஜ்ஜியமாக இருக்கிறது?
- ராஜா இருக்க வேண்டும்.
- குடிமக்கள் இருக்க வேண்டும்.
- சட்டத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
- ஆளுகை செய்யக் கூடிய இடம் இருக்க வேண்டும்.
- இதில் எது ஒன்று குறைந்தாலும் அது ராஜ்யமாக இருக்காது.
தேவன் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன் என்று தானியேல் புஸ்தகத்தில் தீர்க்கதரிசனமாக உரைத்து இருக்கிறார்.
Dan 2:44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
தேவன் ஸ்தாபிக்கும் ராஜ்யம் எப்படிப்பட்டது?
- என்றைக்கும் அழியாத ராஜ்யம்.
- அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை.
- எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி நிர்மூலமாக்கும்
- அந்த ராஜ்யம் என்றென்றைக்கும் நிற்கும்.
அநேகர் இந்த தீர்க்கதரிசனங்களை விசுவாசிப்பது இல்லை காரணம் என்னவென்றால் அந்த ராஜ்யம் இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை என்கிறார்கள்.
(ராஜ்யங்களை குறித்து நாம் ஏற்கனவே கற்றுக் கொண்டு இருக்கிறோம்)
அந்தராஜ்யம் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
அந்த தேவனுடைய ஆவிக்குரியராஜ்யத்தில் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு அந்த ராஜ்யத்தில் பிறந்து இருக்கிறார்கள்.
Act 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
Act 2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
- கர்த்தர் இரட்சிக்கப்படுகிறவர்களை அநுதினமும் சபையிலே சேர்க்கும்போது அவர்கள் ராஜ்யத்திலும் உட்படுத்தப்படுகிறார்கள்(பிறக்கிறார்கள்) என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இயேசுகிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தில் ராஜாவாக இருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய ராஜ்யத்தில் ஆவிக்குரிய ராஜாவாக இருக்கிறார்.
Joh 18:37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
Luk 23:3 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
- இயேசு கிறிஸ்துவை நாம் ராஜாவாக ஏற்றுக் கொண்டால் அவருடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியும் போது நாம் சத்தியவானாக இருக்கிறோம்.
இயேசுகிறிஸ்து தன்னை ராஜா என்று தான் அடையாளப்படுத்தினார்.
Mat 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
- இயேசு கிறிஸ்து தம்மை தேவனுடைய ராஜ்யத்திற்கு ராஜாவாக வெளிப்படுத்தி இருந்தும் இன்றைக்கு அநேகர் ராஜா என்று அவரை ஏற்றுக் கொள்ளுவதில்லை.
இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் இந்த பூமிக்குரியராஜ்யம் இல்லை.
Joh 18:36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜா என்று அர்த்தம்.
Luk 23:2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும்
- இன்றைக்கு அநேகர் கிறிஸ்துவை ராஜாவாக என்று ஏற்றுக் கொள்ளுவதில்லை ஏனென்றால் அவர் இன்றைக்கு அவருக்கு ராஜ்யம் இல்லை என்றும் இனிமேல் ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என்று போதிக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து இன்றைக்கு ஆவிக்குரிய தேவனுடைய ராஜ்யத்தில் ராஜாதி ராஜாவாக இருக்கிறார்.
Luk 19:38 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
Rev 17:14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
Rev 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
இயேசுகிறிஸ்து இன்றைக்கு பூமியில் இருக்கக்கூடிய ராஜாக்களுக்கு எல்லாம் அதிபதியுமாக இருக்கிறார்.
Rev 1:5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
இயேசு கிறிஸ்துவை ராஜாவாக ஏற்றக் கொள்ள மனமில்லாதவர்களை இயேசு கிறிஸ்து என்ன செய்வார்?
Luk 19:14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
Luk 19:27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
- இயேசுகிறிஸ்துவை ராஜாவா ஏற்றுக் கொள்ளாதவர்களை அவர் நியாயத்தீர்ப்பு நாளிலே நியாயந்தீர்ப்பார்.
- இயேசு கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்று அநேக வேத வாக்கியங்கள் நமக்கு போதிக்கிறது.
அவர் எங்கே ராஜாவாக இருக்கிறார்?
தேவனுடைய ஆவிக்குரியராஜ்யத்தில் ராஜாவாக இருக்கிறார்.