யூதர்களுக்குள்ளே அதிகாரியான பரிசேயன் நிக்கெதேமு.
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். (யோவான் 3:1,2)
யோவான் 7:50-52; யோவான் 12:42,43; யோவான் 19:38-40; யோவான் 5:36; யோவான் 7:31; யோவான் 9:16,30-33; யோவான் 11:47,48; யோவான் 12:37; யோவான் 15:24.
நிக்கெதேமு – வெற்றியாளன் என்று பொருள்.
இந்த அதிகாரி இயேசுவை குறித்து மூன்று காரியங்களை சாட்சியமாக அறிவித்தான்.
1. இயேசுவே நீர் தேவனிடத்திலிருந்து வந்தவர். யோவான் 6:46; யோவான் 7:27; யோவான் 9:16; யோவான் 19:9; யோவான் 3:17; யோவான் 5:36; யோவான் 8:18,42.
விவிலியம் கூறும் தேவனிடமிருந்து வந்தவர்.
யெகோவா தேவனிடமிருந்து வந்தவர்.
2. இயேசுவே, தேவன் உம்மோடிருக்கிறார். அப்போஸ்தலர் 10:38; யோவான் 8:16,29.
ஆதி வார்த்தையாக தேவனோடிருந்தவர்.
பிதாவின் மடியில் இருந்தவர்.
தேவன் செய்வதையே செய்கிறார். தேவன் பேசுவதையே பேசுகிறார். இயேசுகிறிஸ்துவோடு தேவன், பரிசுத்த ஆவியானவர் கூட இருந்தார்.
3. இயேசுவே உம் அற்புதங்கள் உம் தெய்வீகத்தை காட்டுகிறது. அற்புதங்கள் என்பது ஆற்றலையும், தெய்வதன்மையையும், தெய்வ ஞானத்தையும் காட்டும். இயேசுவின் அற்புதங்கள் மாயமந்திரங்களின் பிரதிபலிப்பல்ல, வரலாற்று நிகழ்வுகளின் பிரதிபலிப்பு.
நிக்கெதேமுவை போல நாம் இயேசுவை குறித்து கலப்பில்லாமல் சாட்சியம் விளங்க செய்கிறோமா?
தேவன் நம்மோடிருப்பாரானால் நாமும் அற்புதங்களை செய்ய முடியும்.
கர்த்தராகிய இயேசுவே உமது வாக்கு, உமது செயல்கள், உமது ஜீவிதம் யாவும் உமது தந்தையாம் தேவனின் தொடர்புகளின் பிரதிபலிப்பாயிருந்தது போல, நாங்களும் எங்கள் வாக்கு, செயல், ஜீவிதங்களில் தேவன் எங்களோடிருக்கிறார் என்று வெளிபடுத்த உதவிடும்.