ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்

ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்

They will hear My voice; and there will be one flock and one shepherd. (John 10:16)

Jn10:2,11,27; Jn6:37; Mt17:5; Act22:14; Eph4:4-6; Heb13:20; 1Pet2:25; 1Pet5:4; Rev3:20; Ecc12:11-14; Eze34:23; Eze37:22.

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு, அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். (யோவான் 10:16)

யோவான் 10:2,11,27; யோவான் 6:37; மத்தேயு 17:5; அப்போஸ்தலர் 22:14; எபேசியர் 4:4-6; எபிரெயர் 13:20; 1பேதுரு 2:25; 1பேதுரு 5:4; வெளி 3:20; பிரசங்கி 12:11-14; எசேக்கியேல் 34:23; எசேக்கியேல் 37:22.

திருச்சபை ஒன்றே:
ஒரே சபையாக யூத கிறிஸ்தவர்களையும், புறஜாதி கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து பரிசுத்த ஜனமாகிய இஸ்ராயலரோடு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படும் ஜனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு எழும்புகின்ற சபையே ஒரே சபை.

ஒரு சரீரத்தில் பல உறுப்புகள் இருந்தாலும் சரீரம் ஒன்றாக இருப்பதைப் போல சபைகளில் பல அமைப்புகள், பிரிவுகள் இருந்தாலும் சபை ஒன்றே. இயேசுகிறிஸ்து ஒரே மேய்ப்பனாக இருக்க அவரை ஏற்றுக்கொண்டு அவர் கீழ் வாழ்கின்ற எல்லா சபைகளும் ஒன்றாகவே கருதப்படுகின்றன. உலக அளவில் சபைகள் பல பிரிவுகளாக இருந்தாலும் அவைகளை ஆவிக்குரிய அளவில் ஒரே சபையாக தான் கருதுகின்றார் இயேசு. இதனை ஆதி சபையார் அறிந்திருந்தனர். ஆனால் இக்கால சபையார் புரிந்து கொள்ளாமல் பேதங்களை விரிவுபடுத்துகிறவர்களாகவும் அல்லது பேதங்களை இல்லாமலாக்கவும் முயற்சி செய்து எரிச்சல்களையும், சண்டைகளையும், கலகங்ககளையும் நுரை தள்ளுகின்றனர்.

உலக அளவில் சபையானது மொழி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், தேச ரீதியாகவும், இட ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிந்திருந்தாலும் இவர்களுக்குள் பிரிவினை மனோபாவங்களும், சண்டைகளும், கலகங்களும் இருப்பதை ஆவியானவர் விரும்பவில்லை. சபைகளை ஆவிக்குரிய உலகில் ஒருங்கிணைத்து வைக்கின்றவர் ஆவியானவரே. நமது சபை அதில் உள்ளதா இல்லையா என்று அறிந்துகொள்ள இயலாதிருக்கும்போது மற்ற சபைகளை குறை சொல்வது தகாது. எந்த சபைபிரிவையும் (கள்ள சபை தவிர) குற்றப்படுத்தவோ, அதன் ஆடுகளை அபகரிக்க நினைப்பதோ ஒரே மந்தை ஒரே மேய்ப்பன் என்ற ஒன்றிப்பை சிதைக்க நினைப்பதாகும். எனக்கு ஆவியானவர் சொல்லிக்கொடுத்தது என்னவெனில் எந்த சபையையும் குறை சொல்லலாகாது என்றும், சபைகளில் உள்ள குறைகளை சரிசெய்து கொடுக்க முயல வேண்டும் என்பதுமாகும். ஆவியில் நடக்கும் ஒன்றிப்புக்கு குந்தகம் விளைவிக்காமல் நமக்கு தந்துள்ள சபையைக் குறித்து மட்டுமே நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

கர்த்தாவே உம் மகன் மூலம் ஒரே திருச்சபையை ஸ்தாபிக்க விரும்பி எங்களை தெரிந்தெடுத்தீர். நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டு திரியாதபடிக்கு விழிப்புடன் நடந்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME