என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்

என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்.

My Father, who has given them to Me, is greater than all. (John 10:29)

Jn14:28; Eph3:20; Heb2:18; Heb7:25; 1Jn3:20; Exo18:11; Ps145:3; Dan4:3; Mal1:14.

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார், அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. (யோவான் 10:29)

யோவான் 14:28; எபேசியர் 3:20; எபிரெயர் 2:18; எபிரெயர் 7:25; 1யோவான் 3:20; யாத்திராகமம் 18:11; சங்கீதம் 145:3; தானியேல் 4:3; மல்கியா 1:14.

எல்லாரிலும் பெரியவர்:
தன் கைக்குள்ளான ஆடுகளை ஒருவராலும் பறித்துக்கொள்ள இயலாமைக்கு முக்கிய காரணம் இயேசுகிறிஸ்துவின் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார் என்பதுவே. பிதாவாகிய தேவன் தோற்றத்திலும், செயலிலும் பெரியவராயிருக்கிறார். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் பெரியவராயிருக்கிறார். சாத்தானிலும் அவர் பெரியவராயிருக்கிறார். ஆற்றலிலும், ஞானத்திலும் அவர் பெரியவராயிருக்கிறார். அழகிலும் அறிவிலும் அவர் பெரியவராயிருக்கிறார்.

தேவனிடமாய் சேர்க்கப்பட்டவர்களை காப்பதில் அவர் வல்லவர். தம்மை நம்பி வந்த ஒருவரையும் தள்ளாதிருப்பவர். குற்றம் சாட்டுவதற்கோ, மரணத்துக்குள்ளாக தீர்ப்பதற்கோ அவருக்கேயன்றி வேறு ஒருவருக்கும் அதிகாரமில்லை. அரசாங்கங்களைவிடவும் அவர் பெரியவர். மரணத்தினால் எட்டிப்பார்க்கக்கூட இயலாத இடத்தில் இருப்பவர் பிதா. பாவத்தினால் பாதிப்புக்குட்படுத்தபடவியலாத இடத்தில் இருப்பவர். பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் நம்பியிருப்போர் எவரை கண்டும், எதை கண்டும், சட்டங்களை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. நாம் ஜெயிக்கமுடியுமோ இல்லையோ நாம் நம்பியிருக்கிறவர் அனைத்தையும் ஜெயித்தவர். ஆகையினால் தோல்வி வந்தாலும் தொடர்ந்து முன்னேறுவோம். பலவீனத்திலும், குறைவிலும், பாடுகளிலும் அகப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறுவோம். வெற்றியே நமது இறுதி இலக்கு. இடையில் உண்டாகும் போராட்டங்கள் இறுதியானதும் அல்ல, உறுதியானதும் அல்ல. அவைகள் கானல் நீர் போன்றவை. வெற்றியடையும்படி தொடருவோம். வெற்றியாளர் முன் செல்லுகிறார். நம்மை சூழ அவரின் தூதர்கள் உண்டு. பயம் தேவையில்லை. ஜெயமே நினைவு கூருதல். வெற்றி நிஜத்தில் தூரமாயிருந்தாலும் நினைவில் அருகில் உள்ளது. எல்லாரிலும் பெரியவரையே எல்லாவற்றிலும் கொண்டுள்ளோம்.

கர்த்தாவே உம் குமாரனின் மூலம் தமது வலிமையை காண்பிக்க விரும்புகின்றீர். நாங்கள் அதற்கேற்றாற்போல் உண்மையுள்ளவர்களாய் நடந்து கொள்ள உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME