நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோல என்னை புசிக்கிறவன் என்னால் பிழைப்பான்.
As the living Father sent Me, and I live because of the Father, so he who feeds on Me will live because of Me. (John 6:57)
Jn11:25,26; Jn14:6,19; 1Co15: 22; 2Co13:4; Gal2:20; Col3:3,4; 1The1:10; 1Jn4:9; Ps18:46; Jer10:10.
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். (யோவான் 6:57)
யோவா11:25,26; யோவான் 14:6,19; 1கொரிந்தியர் 15:22; 2கொரிந்தியர் 13:4; கலாத்தியர் 2:20; கொலோசெயர் 3:3,4; 1தெசலோனிக்கேயர் 1:10; 1யோவான் 4:9; சங்கீதம் 18:46; எரேமியா 10:10.
பிழைத்திருக்கும் இயேசு:
பிதாவினிடம் இருந்தவராகையினாலும், பிதாவினால் அனுப்பப்பட்டவராகையினாலும்,
பிதாவினால் நடத்தபட்டவாரகையினாலும், பிதாவினால் போதிக்கப்பட்டவராகையினாலும் கிறிஸ்து பிழைத்திருக்கிறார்.
பிதா ஜீவனுள்ளவராயிருப்பதினால் கிறிஸ்துவும் பிழைத்திருக்கிறார். பிதாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து பிதாவின் விருப்பத்தை செய்ததினால் இன்றும் பிழைத்திருக்கிறார்.
ஆதாம் மரித்து மரணத்தை கண்டதுபோல கிறிஸ்துவும் மரித்து ஜீவனை கண்டவர்.
கிறிஸ்து மரித்திருந்தாலும் பிதாவினால் எழுப்பப்பட்டு இன்றும் பிழைத்திருக்கிறார்.
கிறிஸ்துவை விசுவாசித்து கிறிஸ்துவின் உபதேசத்திலும், இரட்சண்ய கிரியையிலும் நிலைத்திருக்க எந்த மனுஷனாயிருந்தாலும் அவன் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறான்.
கிறிஸ்துவின் ஜீவனை பெற்ற எவரும் மரணத்தை கண்டாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும். பிதாவினால் கிறிஸ்துவும், கிறிஸ்துவினால் நாமும், நம்மால் இவ்வுலகமும் பிழைத்திருக்கிறது.
நம்மை வாழ்ந்திருக்க செய்யும் தேவனின் கிரியைகளுக்கு உட்பட்டு உண்மையுள்ளவர்களாக வாழுவோம்.
கர்த்தாவே, பிழைத்திருக்கச் செய்வதற்காகவே உம் குமாரனை பிழைத்திருக்கிறவராய் எங்களிடம் அனுப்பினீர். அதுபோல எங்களையும் இவ்வுலகம் பிழைத்திருக்க இவ்வுலகில் எங்களை அனுப்பியிருக்கிறீர்.