இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று.
So there was a division among the people because of Him. (Jn7:40-43)
Jn7:31,32,52; Mt16:14-16; Jn9:16; Jn10:19; Mt10:35; Lk12:51; Act14:4; Act23:7-10; 1cori1:10
இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து பிரிவினையுண்டாயிற்று. (யோவான் 7:40-43)
யோவான் 7:31,32,52; மத்தேயு 16:14-16; யோவான் 9:16; யோவான் 10:19; மத்தேயு 10:35; லூக்கா 12:51; அப்போஸ்தலர் 14:4; அப்போஸ்தலர் 23:7-10; 1கொரிந்தியர் 1:10.
இந்த பிரிவினை உண்டாக காரணம் என்னவெனில்,
- இவர்களுக்குள் – விசுவாசியாதவர்களுக்குள் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்றார் இயேசு.
- விசுவாசியாதவர்களின் மனம் சாத்தானால் குருடாக்கப்பட்ட கண்களினால் உண்டானது.
- அவர்களுடைய இருதயம் பெருந்திண்டியினாலும் உலக ஐசுவரியத்தினாலும் மயங்கி இருந்தது.
- அவர்கள் தேவனுடைய ஜனமாயிருந்தும் தேவனுடைய ஆவிக்கு பங்காளிகளாயிருந்தும் பரிசுத்த ஆவியை உடையவர்களாய் இருக்கவில்லை அல்லது தேவனுடைய ஆவிக்கு அந்நியராய் இருந்தனர்.
- தேவன் அவர்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்காமல் இருதயத்தை கடினப்படுத்தினார்.
இவ்விதம் இயேசு கூறிய கூற்றுகள் உண்மையானவை.
இயேசுவின் காலத்தை போலவே இக்காலத்திலும் சாதியை, இனத்தை, பணத்தை, மொழியை தேசத்தை, சபை பிரிவுகளை அடிப்படையாக வைத்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பிரிந்து கிடக்கின்றது.
நாம் நம்மை பார்ப்பதற்கு பதிலாக பிறரை பார்க்கின்றோம் – அளக்கின்றோம் – மதிப்பிடுகின்றோம். இயேசுகிறிஸ்துவினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய ஆதியில் பிரிந்துபோன மனித சமுதாயம் இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லையோ என்ற அங்கலாய்ப்பு உண்டாகின்றது.
மன அளவில் ஒன்றுபட்டு நிற்போம். பேதங்களை மறப்போம்.
கிறிஸ்து ஜெயிப்பார்.
கர்த்தாவே அன்று பாபேலில் நீர் பிரிவினை உண்டாக்கிய மனுக்குலத்தை உம் மகன் மூலம் ஒன்றுசேர்க்க உம் மகனின் சரீரமாகிய சபையை தந்ததற்காய் ஸ்தோத்திரம்.