தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.

தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.

Jesus stood and cried out,saying,If anyone thirsts,let him come to Me and drink. (John 7:37)

Jn4:10; Jn6:35,36; Ps36:8,9; Ps42:1,2; Ps63:1; Ps143:6; Song5:1; Isa12:3; Isa41:17,18; Isa44:3; Isa55:1,3; 1Co10:4,21; 1co11:25; Eph5:189; Rev21:6; Rev22:1,7.

பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். (யோவான் 7:37) 

யோவான் 4:10; யோவான் 6:35,36; சங்கீதம் 36:8,9; சங்கீதம் 42:1,2; சங்கீதம் 63:1; சங்கீதம் 143:6; உன்னதப்பாட்டு 5:1; ஏசாயா 12:3; ஏசாயா 41:17,18; ஏசாயா 44:3; ஏசாயா 55:1,3; 1கொரிந்தியர் 10:4,21; 1கொரிந்தியர் 11:25; எபேசியர் 5:18; வெளி 21:6; வெளி 22:1,7.

தாகமுள்ளவர் வரட்டும்:

இந்த தாகம் என்றச் சொல்லில் அடங்கியுள்ள வார்த்தைகளை கவனிப்போம்.

  • விருப்பம், ஆசை, ஆவல், வாஞ்சை, தவனம் போன்றவை.
  • எதிர்பார்ப்பு, காத்திருந்து இளைத்து போன அனுபவம்.
  • நம்பி சோர்ந்துப்போய் நம்பிக்கையற்ற அனுபவம்.
  • திருப்தியற்ற நிலையில் காலம் காலமாய் தவித்திருந்த அனுபவம்.

இவ்வித தாகம் உள்ளவர் எவராயினும் இயேசுவிடம் வரலாம், இயேசுவை ஏற்றுக்கொள்ளலாம், இயேசுவோடு வாழலாம்.

இருதய தாகம் தீர்ப்பவரும் அவரே. தொண்டைதாகம் தீர்ப்பவரும் அவரே. ஆவிதாகம் தீர்ப்பவரும் அவரே. 

அவர் தண்ணீரை பானமாகவும் தருகிறார்.
தம் இரத்தத்தை மெய்யான பானமாகவும் தருகிறார்.
தம் ஆவியை உயிரின் பானமாகவும் தருகிறார்.
விருப்பத்தோடு வாருங்கள். 
ஏக்கத்தோடு வாருங்கள்.
உங்கள் பிரயாசங்களை செலவழித்து பெலனிழந்தது போதும்.
இலவசமாக கிடைக்கும் நன்மையை பெறும்படியாய் வாருங்கள்.

கர்த்தாவே உம் மகன்மூலம் முழு உலகின் தாகத்தையும் தீர்க்கவல்லவராருக்கிறதற்காய் ஸ்தோத்திரம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME